LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- கல்வி

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் "சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதில் சேருவதற்கு விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதரபிரிவினர் ரூ.1000-ம் செலுத்த வேண்டும். இதுதவிர கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்படக் கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் படிப்புக்கு மொத்தம் 260 இடங்கள் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

by hemavathi   on 15 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது
5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி  வழங்கும் மத்திய அரசு 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி வழங்கும் மத்திய அரசு
தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
புதுச்சேரியில்  மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு
6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை -  மத்தியக் கல்வி அமைச்சகம் 6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை - மத்தியக் கல்வி அமைச்சகம்
ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம் ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம்
12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்! அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.