|
||||||||
தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? |
||||||||
![]() பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார். அதில், பெரும்பாலான தரப்பின் ஆதரவையும், எதிர்ப்பையும் பெறும் முக்கிய அம்சங்கள்... மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை கடந்த 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மாநிலத்துக்கு என பிரத்தியேகக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது. அதை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ல் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் வடிவமைத்தனர். தமிழக அரசிடம் அறிக்கையை 2024 ஜூலை 1-ல் சமர்ப்பித்தனர். அதன், ஓராண்டுக்குப் பிறகு இப்போது பள்ளிக் கல்விக்கான கல்விக் கொள்கை 2025 வெளியிடப்பட்டிருக்கிறது.
* தேசியக் கல்விக் கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழியாக ஏதேனும் ஓர் இந்திய மொழி என மும்மொழிக் கொள்கை இடம்பெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாடு கல்விக் கொள்கையில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே கொண்ட இருமொழிக் கொள்கை இடம்பெற்றுள்ளது.
* கல்வி என்பது பொதுப் பட்டியலில் நீடிக்கும் என்று தேசியக் கல்விக் கொள்கை கூறும் நிலையில், கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. 3, 5, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குத் பொதுத் தேர்வைப் பரிந்துரைக்கும் தேசியக் கல்விக் கொள்கை 3, 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால், மறுதேர்வு கட்டாயம் என்கிறது.
* ஆனால், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையோ, நலன் கருதி, பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதிசெய்ய வேண்டும் என்கிறது. 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை என்பது ட்ராப் அவுட் என்று சொல்லக் கூடிய மாணவர்களின் இடைநிற்றலை வெகுவாகத் தடுக்கும்.
* 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை என்றாலும், ‘பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்கள் வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல், எண்ணறிவு திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சார் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், மாணவர்களின் திறன்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க, பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தொடர் இடைவெளிகளில் மாநில அளவிலான ‘ஸ்லாஸ்’ எனும் கற்றல் அடைவு தேர்வு நடத்தப்படும்’ என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்ற வேண்டும். முதல் தலைமுறை கற்போர், பழங்குடியினர், பெண் குழந்தைகளை பள்ளியில் தக்கவைக்கவும், அவர்களது கற்றல் விளைவுகளை முன்னேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
* தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரிப் பள்ளிபோல கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் கவனத்துக்கு உரியவை.
|
||||||||
by hemavathi on 12 Aug 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|