இசை அமைப்பாளராக சக்கைப்போடு போட்டுக்குக்கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் பென்சில் என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார்.
இந்த படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. இதனை அடுத்து, டார்லிங் என்ற புதிய படவேலைகளில் தற்போது இறங்கி விட்டார் ஜிவி. திகில் கலந்த காமெடியில் உருவாகும் இந்த படம் தெலுங்கில் அல்லு அரவிந்த் நடிப்பில் வெளியான பிரேம கதா சித்ரம் என்ற படத்தின் ரீமேக்காகும்.
பென்சில் படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் இம்ப்ரஸ் ஆகித்தான் அவரை இந்த படத்தில் நடிக்க வைக்கிறார்களாம். அதனால் அதிக உற்சாகத்தில் டார்லிங் படத்தில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ், தெலுங்கை விட தமிழில் மெகா ஹிட்டாக இப்படத்தை கொடுத்து மார்க்கெட்டில் நின்று விட வேண்டும் என்று இந்த சிரிப்பு படத்துக்காக சீரியசாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம்.
|