Mobile phone பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? உங்கள் குழந்தைகள் அதிகம் செல்போன், டிவி பார்ப்பதிலிருந்து எப்படி மடைமாற்றுகிறீர்கள்..? உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் என்று நம் வலைத்தமிழ் கதைசொல்லி குழுவின் அனைத்து பெற்றோர்களிடம் கேட்டிருந்தோம். .. நம் அனைத்து குழுவிலிருந்தும் வரும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை தொகுத்து இங்கே பதிவிடுகிறோம். இதில் இல்லாத வேறு உத்திகளை உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பயன்படுத்தினால் இந்தக் கட்டுரையின் கீழே பதிவிடுங்கள் .. அவை கட்டுரையில் சேர்க்கப்படும்.
* பெற்றோர்களுக்கு மொபைல் போன் கட்டுப்பாடு இல்லாதவரைக்கும் பிள்ளைகளை கட்டுப்படுத்துவது கடினம். பெற்றோர் மொபைல் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம். கூடவே சேர்ந்து விளையாடலாம் , வெளியே அழைத்துச் செல்லலாம், கதைச் சொல்லலாம்.
* கண்டிப்பாக குறிப்பிட்ட நேர அளவு மட்டும் உபயோகிக்க செய்யலாம்.
* கைபேசியை குழந்தைகள் கண்ணில் படாதவாறு வைத்துவிட்டு புளுடூத் பயன்படுத்தலாம். கைபேசி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த காணொளியை காண்பிக்கலாம், எடுத்து சொல்லலாம்.
* உணவு உண்ணும்போது குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து உண்ணும்போது கைபேசி பாக்கும் தேவை குறையும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசாமல் அவர்களுக்கு கைபேசியை கொடுத்துவிட்டு பேச்சில் கவனம் செலுத்தும்போது தடுக்க முடியாமல் போகும் . காரில் பயணிக்கும்போது உங்கள் ஊரைப்பற்றி, உறவுகளைப் பற்றி, அவர்களுக்கு பிடித்த riddles ஆகியவற்றை சொல்லி கவனம் டிஜிடல் பக்கம் போகாமல் மடைமாற்றலாம். குழந்தைகளுக்கு reading/ stem /craft ideas/ music/ drawing/ puzzle solving/giving situations or scenario for writing own story and making him/her to tell in Tamil... போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக தொடர்ந்து பழக்கப்படுத்த வேண்டும். இது எளிதல்ல, இருப்பினும் சில வாரங்கள்-மாதங்கள் தொடர்ந்து செய்யும்போது சாத்தியமே.
* அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து , சமத்தாக இருக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் பரிசாக , வெகுமதியாக (Reward) எவ்வளவு நேரம் என்று சொல்லி ஒரு கட்டுப்பாட்டுடன் விளையாட சொல்லலாம். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் என்று (உதாரணமாக அரை மணி நேரம் ) ஒதுக்கி பழக்கப்படுத்தலாம் .
* அதிக தொந்தரவு இருக்கும்போது வெளியில் அழைத்து சென்று விளையாட வைக்கலாம் . வாரத்திற்கு ஒருநாள் ஒரு படம் (வெள்ளிக்கிழமை) , அவர்களுக்கு பிடித்த உணவு என்று திட்டமிடலாம் .
|