|
|||||
இன்டர்நெட் இணைப்புடன் கூடிய டூத் பிரஷ் அறிமுகம் !! |
|||||
![]() இன்டர்நெட் இணைப்புடன் கூடிய டூத் பிரஷை பிரான்ஸை சேர்ந்த கோலிப்ரீ என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரஷ் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சாதாரண பிரஷ்ஷை போல இல்லாமல், ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நாம் எவ்வாறு வாயை சுத்தப்படுத்தியுள்ளோமென்ற தகவலை நமக்கு அளிக்கிறது. இந்த பிரஷின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, இந்த டூத் பிரஷ்ஷில் ஒரு சென்சார் உள்ளது. அந்த சென்சார், நாம் பற்களைத் துலக்கும்போது, எந்த அளவுக்கு அழுக்குகளை வெளியேற்றியுள்ளோம் என தெரிவிக்கும். மேலும், நாம் எந்த அளவுக்கு பிரஷ் செய்துள்ளோம் என்பதையும் நமக்குக் காட்டும். அதை அடிப்படையாக வைத்து நாம் பிரஷ் செய்யலாம். இந்த பிரஷ்ஷை, வயர்லெஸ் மூலமாக ஒரு ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனுடன் இணைத்து அதன் மூலம் இந்த தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாமென இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகள் எவ்வாறு பல் துலக்குகிறார்கள் என்பதை இந்த பிரஷின் மூலம் கண்டறியலாம். இந்த பிரஷின் விலை ரூ. 6100 முதல் ரூ. 12,436 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரஷ்ஷுடன் இலவசமாக மொபைல் அப்ளிகேஷனும் அளிக்கப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 29 May 2014 0 Comments | |||||
Tags: Electric Toothbrush WIFI Toothbrush WIFI Electric Toothbrush டூத் பிரஸ் இன்டர்நெட் டூத் பிரஸ் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|