LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

இந்த வார நட்சத்திர பலன்கள் (13 – 08 – 2017 முதல் 19 - 08 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ.99945 11158
மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். அஸ்திவாரம், அல்லது அடிப்படை விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால், நீங்கள் போட்ட திட்டங்கள் அனைத்தும் குழப்பமோ, சிக்கல்களோ இன்றி கச்சிதமாக முடிவடையும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவிகள் தேடிவரும்.
பரணி
இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள்.  தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றங்காண முயல்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். தங்கள் மனதிற்குப் பிடித்தபடி அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய வீடு அமையும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.  அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள்.  

ரிஷபம்(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும் தங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். வழக்கத்திற்கு மாறாக உறவுகள் அதிக உணர்ச்சி அடையும் காலமாதலால் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. அப்படி இல்லையெனில் உங்களை அறியாமலேயே, உங்கள் வார்த்தைகளால் அவர்கள் மனதை புண்படுத்த நேரலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரோகிணி
இந்த வாரம் வீட்டில் மனமகிழ்ச்சி நிலவும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். தொழில் திறன் அதிகரித்து முன்னேற்றம்   ஏற்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படாமல் எதையும் ஆலோசித்துச் செயல்படுவது நல்லது.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் மனங்கவர்ந்த அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்கலாம். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், தொழிலில் அபிவிருத்தி  நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். குருவருளும், திருவருளும் பெற்று மகிழ்ச்சியான தருணங்களாக அமையும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  அரசுப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.
திருவாதிரை
இந்த வாரம் வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் முழுமையான ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்புறுவீர்கள். புதிய நண்பர்களால் பல நன்மைகள்  ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தேடி வரும். சிலருக்குப் பணியில் இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்,  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.  தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள்.  உடன்பிறப்புக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்.
பூசம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத்தன்மை  அதிகரிக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை ஆகியவை ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும். நிகழ்வின் அடிப்படை நிலைமைகளைப் புரிந்து கொண்டு முக்கிய காரியங்களில் ஈடுபட்டால் பிறரிடம் தலைகுனியும் நிலையைத் தவிர்க்கலாம். இன்றைய பணிகளில் முழு மூச்சுடன் இறங்கி செயல்பட்டால் உங்கள் செயல்பாட்டின் வெற்றிக்கு வானமே எல்லையாக அமையும்.
ஆயில்யம்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும் இனிய பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  அழகிய ஆடை ஆபரணங்கள் கிடைக்கும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர்.  வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூல பலன்கள் உண்டு. நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும்.
பூரம்
இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்.  வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். பெண்களின்  அறிவுத் திறன் கூடும்.  விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
உத்திரம்- 1 பாதம்
இந்த இந்த வாரம் மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.

கன்னி(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். பெரியவர்களின் அல்லது அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை பொன்போன்றது. இன்று புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உயர் திட்டங்கள் நல்ல பலன்களைத் தரும். ஒத்துபோதல் மற்றும் அனுசரித்துப் போதலின் மூலமாக நீண்ட நாட்களாக இழுபறியிலிருக்கும் வழக்கு விவகாரங்களை முடிவுக்குக் கொண்டு வருவது நல்லது.
ஹஸ்தம்
இந்த வாரம் புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும். அதற்கான வங்கிக் கடனுதவிகள் சுலபமாகக் கிடைக்கும். வீட்டில் திருமணம் சம்பந்தமான பேச்சுக்களால் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம்.  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். சுறுசுறுப்பாக பணிகளை ஆற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். புனித யாத்திரைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு முன் நன்கு படித்தபின் கையொப்பம் இடவும். பண விஷயத்தில் ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம்.  எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. இளைஞர்கள்  வேலைக்காகப் பல இடங்களுக்கு அலைந்து திரிய நேரிடும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.
சுவாதி
இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும் இன்று மற்றவர்களின் எண்ணங்களுக்கு எதிர்மறையான எண்ணங்களே உங்கள் மனதில் ஓடும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவால் ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள்..

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும்.  விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும், ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் முன்னேற்றமான காலம் இது. திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கும், பொருட்களை விளம்பரப் படுத்துவதற்கும் சாதகமான வாரம் இது.
அனுஷம்
இந்த வாரம் பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றஞ்சாட்டப்பட்டு அவதிப்பட நேரலாம். சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் அன்றன்றைக்குத் தங்கள் பாடங்களை அக்கறையுடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.
கேட்டை
இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்பட்டு,  வெற்றிகரமான  முன்னேற்றங்கள் ஏற்படும். எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான் அதற்கேற்ப இலாபமோ, பலனோ கிடைக்கும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும்...

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் உங்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம், எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம்.
பூராடம்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். புதிய வீடு, வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் நல்ல குறிக்கோள்களை அடைய மனோதைரியமும், உடல்பலமும் முக்கியமானதாகும். புத்துணர்ச்சியுடனும், புதிய கோணத்திலும்  திட்டமிட்டப்படும் செயல்பாடுகள்  ஊக்கம் அளிப்பதொடு, உற்பத்தியையும் பெருக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்படும். பயமும், தடைகளும் உங்கள் பெரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஆவதை அனுமதிக்காதீர்கள்.  தட்டுங்கள் திறக்கப்படும். அர்த்தமற்ற பலப் பரிட்சைகளிலும், தலைக்கனம், கர்வம் மிக்க செயல்பாடுகளிலும் ஈடுபடாது அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பழைய அனுபவங்களின் தாக்கம் புதிய செயல்பாடு எனும் கிரீடத்தில் வைரமாக மின்னும்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள்.
திருவோணம்
இந்த வாரம் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். வியாபாரத்தில் புதிய விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். சிலருக்கு எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.  தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும்.
சதயம்
இந்த வாரம் பல வழிகளிலும்  பணவரவு கூடுதலாக இருக்கும். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். பணிபுரியும் பெண்களுக்குத் தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது.

மீனம் ( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். கடல் போன்ற கலை மற்றும் ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் புதிய அலைகள் வீசும். காதல் வானில் மந்திர மயக்கங்கள் ஏற்படும். பொருளாதர விவகாரங்களில் கண்ணில் வெளக்கண்ணையை ஊற்றிக் கொண்டு கண்காணிக்க வேண்டிய காலமாகும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்க  ள்இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். தைரியமும், தன்னம்பிக்கையுமே உங்கள் வெற்றிகளுக்கு வரவேற்பு அளிக்கும் போதுதான் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் நிகழும். முக்கிய நிகழ்வுகளில் பொறுமையும், திட்டமிட்ட செயல்பாடுகளுமே ஏற்றம் தரும். உங்கள் பணி இடத்தில் பணிகள்  விருப்பமுடன் செய்யப்படுமானால் உற்பத்தியும் பெருகும் என்பதை உணருங்கள்.
ரேவதி-
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அனைத்து இலக்குகளையும் எளிதில் அடைய உங்கள் தீர்மானங்களை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குங்கள், முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள், கணக்குகளை சீராக்குங்கள் அப்போதுதான் அதில் வெற்றி அடைய முடியும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.  தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்.

by Swathi   on 11 Aug 2017  0 Comments
Tags: Rasi Palangal   Tamil Rasi Palangal   Natchathira Palangal   ராசி பலன்கள்   நட்சத்திர பலன்கள்        
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.