LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்

காளமேகம்

சமையற்காரனாகவும் சிறந்த புலவனாகவும் இருந்த காளமேகம் திடீரென்று கணக்கிடுவதிலே தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டார்.

நமது நாட்டிற்கே உண்டான கேடு. எதிலாவது ஒருவர் பெரியவர் ஆகி விட்டால் அவர் உடனே மற்ற துறைகளைப் பற்றியும் நிரம்ப அறிந்தது போல் பேச ஆரம்பிப்பார். ஊடகங்களும் அவரிடம் போய் நேர்காணல் நடத்தும்.

ஒரு தலை சிறந்த சிற்பி அவர் ஒரு மன்னரின் சிலையை வடித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி போனார். அந்தச் சிற்பி மன்னரின் காலணிகளைச் செதுக்கிக் கொண்டிருந்தார். அந்தத் தொழிலாளி செருப்புக் குறித்து சில
உத்திகளைச் சொன்னார். சிற்பி அவர் சொன்னதைக் கேட்டு காலணிகளை அப்படியே செதுக்கினார்.

சிலைப் பணி நடந்து கொண்டேயிருந்தது. மீண்டும் ஒருநாள் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி அங்கே வந்தார் சிற்பி ஒரு புன்முறுவலோடு அவரை வரவேற்றார்.

அன்று சிற்பி மன்னரின் கழுத்து மாலைகளைச் செதுக்கிக் கொண்டிருந்தார் அந்தத் தொழிலாளி மாலைகள் குறித்து தனது கருத்துகளைச் சொன்னார். சிற்பி சிரித்துக் கொண்டே அவர் விரும்புகிற மாதிரியே மாலைகளைச் செதுக்கிக் கொண்டேயிருந்தார்.
தொழிலாளி வருத்தம் கொண்டார்.

சிற்பி சொன்னார். அய்யா அன்று நீங்கள் சொன்னது உங்கள் தொழில் சார்ந்தது. அதன் படியே செய்தேன். நீங்கள் ஒரு நகைத் தொழிலாளியாக இருந்தால் இன்று கேட்டிருப்பேன். என்னை இடையூறு இல்லாமல் விட்டு விடுங்கள் என்று அவரை வெளியேற்றினார்.

அதே கதை தானோ காளமேகம் கதை என்று நான் நினைத்தேன். தமிழ் கற்றவனாயிற்றே. அதுவும் சுவைத்துக் கற்றவனாயிற்றே..
சுவைபடச் சமைப்பவன் அல்லவா.

அவன் ஒரு கணக்குச் சொல்லுகின்றான்.

சிவ பெருமானுக்கு நெற்றிக் கண்ணோடு சேர்ந்து மூன்று கண்கள் தானே. அதில்தான் காளமேகப் புலவர் ஒரு கணக்குப் போட்டு நம் முன்னர் காட்டுகின்றார். 

என்ன செய்ய பெருந்தமிழ்ப் புலவர். அவர் கணக்கில் எப்படிப் பிழை வரும். சரியான கணக்குத் தான் .வியந்து நிற்பதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்.

அவர் கணக்கைப் பார்ப்போமா.

சிவ பெருமானை முக்கண்ணன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிற பெரியவர்களே . அது தவறல்லவா. தமிழர்கள் தவறு செய்யலாமா. பதில் சொல்லுங்கள் என்கின்றார் .

அவர் உடம்பில் பாதி உமையம்மைக்குக் கொடுத்திருக்கின்றார் அல்லவா. அப்படியெனில் அந்த மூன்று கண்ணில் ஒன்றரைக் கண் உமையம்மையின் கண். பிறகு ஆறே நாள் அன்பிலே அவருக்குப் பூசனை செய்ய வந்த திண்ணனிடம் வலக் கண்ணை வாங்கினார் தானே. அது ஒன்று எனில் கணக்குப் போட்டுப் பாருங்கள்.

உமையம்மை கண் ஒன்றரை. ஒரு கண்ணைக் கொடுத்து கண்ணப்பன் ஆன திண்ணன் கண் ஒன்று எனில். ஒன்றரையும் ஒன்றையும் கூட்டுங்கள். மொத்தம் இரண்டரைக் கண் ஆகின்றது. அப்படியெனில் மீதம் அரைக் கண் தானே சிவபெருமானுக்கு இருக்கின்றது. பிறகு எப்படி நீங்கள் முக்கண்ணன் என்று சொல்லலாம் என்கின்றார்.

செய்யுள்

முக்கண்ணன் என்று அரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற்குள்ளது அரைக் கண்ணே - மிக்க 
உமையாள் கண் ஒன்றரை ஊன் வேடன் கண்ணொன்று
அமையுமிதனால் என்று அறி

by Swathi   on 10 Nov 2013  1 Comments
Tags: காளமேகம்   Kaalamegam                 
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
02-Apr-2014 09:04:39 jeyachandran said : Report Abuse
நன்றாக amainthullathu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.