|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 17 : பூமாலை |
||||||||
டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர் பூமாலை - 24 1965ல் முரசொலி மாறன் தயாரிக்க மேகலா பிக்சர்ஸ் சார்பில் வந்த படம் பூமாலை. ப நீலகண்டன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை, வசனம் எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி,, ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர் விஜயகுமாரியும், எஸ் எஸ் ஆரும் தங்கள் தோழி/தோழன் திருமணத்திற்கு வருகிறார்கள்.ஆனால், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாதவர்கள். திருமண நிகழ்ச்சியில் நடனப் பெண் ராஜஸ்ரீ "கன்னம் கன்னம் சந்தனக் கிண்ணம்" என்று பாட்டுப் பாடி நடனமாடுகின்றார். இரவு, விஜயகுமாரியும், ராஜஸ்ரீயும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகள் மாறிவிடுகின்றன.இது அறியாத எஸ் எஸ் ஆர் குடிபோதையில் நடனப் பெண்மணி அறைக்குப் போவதாக நினைத்து விஜயகுமாரி அறைக்குச் சென்று அவரை கற்பழித்துவிடுகிறார். இதனால் விஜயகுமாரி கர்ப்பம் அடைய...கடைசியில் தன் தவறு உணர்ந்து எஸ் எஸ் ஆர் அவரை மணக்கிறார். விஜகுமாரியின் பெயர் இப்படத்தில் பூமாலை ஆகும் பூம்புகார் போலவே இப்படத்திலும் கலைஞர் படம் ஆரம்பிக்கும் முன் தோன்றி படம் பற்றி பேசுவார் ஆர்.சுதர்சனம் இசை.கன்னம் கன்னம் கலைஞர் எழுதிய பாடல் ஆகும் |
||||||||
by Swathi on 04 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|