|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா |
||||||||
டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர்
1966ல் வந்த படம் அவன் பித்தனா...வெளிவந்த நாள் 29-4-1966 எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி நடிக்க ப.நீலகண்டன் இயக்கத்தில் உமையாள் புரடக்சன்ஸ் தயாரிப்பில் வந்த படம் கலைஞர் திரைக்கதை, வசனம் அவன் பைத்தியக்காரனா என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகமே அவன் பித்தனா என வெள்ளித்திரைக் காவியமானது பெரிய தொழிலதிபர் நல்லையா ராஜா.ஏழைப் பெண் ஓருத்தியைக் காதலிக்கும் தன் மகனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார்.மகனோ, அந்தப் பெண்ணை மணந்து, அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்து விட்டு இறக்கின்றான்.அதன் பின்னர் அப்பெண்ணும் நீண்ட நாட்கள் வாழவில்லை குமார் எனப் பெயரிடப்பட்ட மகனை, ஒரு டீக்கடைக்காரர் பார்த்து, வளர்த்து பெரியவன் ஆக்குகிறார் ஒருநாள், கோமதி என்ற பெண், தன்னை சிலர் துரத்தி வருவதாக, ஓடி வந்து டீக்கடையில் தஞ்சமடைகிறாள்.அப்பெண்ணை, உடல்நலமில்லாத நல்லையாவின் வீட்டிற்கு நர்ஸாக அனுப்புகிறான் மகன்.(அவர் தனது தாத்தா என அறியாமல்)கோமதி நல்லையாவின் அன்பிற்கு பாத்திரமாகிறாள் பின்னர், நல்லையா இறக்க, அவர் சொத்துக்கு சொந்தம் கொண்டாடி பாலையா, நாகேஷ் ஆகியோர் வருகின்றனர் கடைசியில் டீக்கடை குமார்தான் வாரிசு எனத் தெரிய வருகிறது பார்த்தசாரதி இசையில், இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கின்றான் என்ற பாடல் பிரசித்திப் பெற்றது |
||||||||
by Swathi on 04 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|