LOGO

கருப்புசாமி

  கோயில்   கருப்புசாமி
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   கருப்புசாமி
  பழமை   
  முகவரி
  ஊர்   
  மாவட்டம்   சேலம் [ Salem ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் மூதாதையர்கள் ஆகும். அவர்களுக்கு மரியாதை செய்வதே குலதெய்வ வழிபாடு ஆகும். வழிவழியாக வருவதால் இதற்குப் பெயர் வழிபாடு தன் குடும்பத்திற்கு ஊருக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களும் வீர மரணம் அடைந்தவர்கள் குலதெய்வம் என்று ஆகும். குல தெய்வத்தை வணங்கும் போது எங்கும் கிடைக்காத மன அமைதியும் மன நிறைவும் ஏற்படும். நம் உடம்பில் ஓடும் இரத்தம், சதை குலதெய்வத்திடம் இருந்து கிடைத்தது.

குலதெய்வத்தின் மரபணுவும் நம்முடைய மரபணுவும் ஒன்றே. அதனால் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். நமக்கு மிகவும் உரிமை உள்ள ஒரு கோயில் என்றால் அது குலதெய்வக் கோவிலை ஆகும். உதாரணமாக எந்த கோவிலுக்கு போகிறார்கள் என்று கேட்டாள் அது இஷ்ட கோவிலாக இருந்தால் பழனிக்கு போயிருந்தேன் திருப்பதிக்கு போய் இருந்தேன் காசிக்குப் போய் இருந்தேன் என்று சொல்வீர்கள்.

மேலே சொன்ன கோயிலில் நீங்கள் இருக்கும்போது உங்களுக்கு போன் வந்தால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டால் பழனியில் இருக்கேன் திருப்பதியில் இருக்கேன் காசில் இருக்கேன் என்று சொல்வீர்கள். ஆனால் நீங்கள் குலதெய்வ கோவிலில் இருந்தால் என்ன சொல்கிறீர்கள்? எங்கள் குல தெய்வ கோவிலில் இருக்கேன் என்று சொல்கிறீர்கள், அல்லது எங்கள் கோவிலில் இருக்கிறேன் என்று சொல்வீர்கள். ஊர் பெயர் குறிப்பிடாமல் எங்களது என்று சொல்லும்போது அதுவே உங்களுக்கு உரிமை உள்ளதாகவும், அக்கா வீட்டில் இருக்கேன் மாமா வீட்டில் இருக்கேன் என் வீட்டில் இருக்கேன் இது தான் குலதெய்வம் குலதெய்வம் என்பது உங்கள் குடும்ப அட்டையில் அதன் பெயர் இல்லாமல் இருக்கலாம் ஆனால் குடும்ப சொத்துக்களுக்கும் குலதெய்வத்திற்கு முழு உரிமை உண்டு இவ்வளவு நெருக்கமான ஒன்றுதான் குலதெய்வம்.

குலதெய்வ வழிபாட்டு முறை: நம் முன்னோர்களுக்கு நாம் முழுமனதுடன் செய்யும் மரியாதை மற்றும் அவர்கள் நினைவு கூறுவதே குலதெய்வ வழிபாடு ஆகும். ஏனென்றால் அவர்கள் மூலமாகத்தான் இந்த பூமியில் நாம் பிறந்தோம் அதனால் குலதெய்வ வழிபாடு என்றும் சொல்லாமல் குடும்ப வழிபாடு என்றும் சொல்லலாம் ஏனென்றால் ஆயிரம் குடும்பங்கள் ஒரு கோவில் பங்காளிகளாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் இருந்து இருப்பார்கள் ஒரே பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து செல்லலாம் ஒரு ரயிலில் விமானத்தில் அடுத்த பக்கத்தில் இருக்கையில் அமர்ந்து சென்று வரலாம் ஆனால் பங்காளிகள் என்று அவர்களுக்கு தெரியாது ஆனால் குலதெய்வ கோயிலுக்கு வந்து குடும்ப வரி செலுத்தும் போது யாரெல்லாம் நம் பங்காளிகள் என்று தெரியும் பக்கத்து இருக்கையில் அமர்ந்து படித்தவுடன் என் பங்காளி என்று தெரியும் உன் உறவுகளை அடையாளம் காட்டும் ஒரே இடம் குலதெய்வ கோவில் ஆகும் மற்றும் திருமணம் குடும்பத்திற்கும் குலதெய்வம் வைத்துத்தான் செய்யப்படுகிறது மாற்றம் திருமணத்தின்போது பூவாகி எடுக்கப்படும் பூவாக சரியாக இருந்தால் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வார் திருமணத்தின்போது முதல் பத்திரிக்கை அல்லது குல தெய்வ வாக்கு குலதெய்வத்திற்கு வைத்து வா என்று அழைப்பார்கள் திருமணம் முடிந்தவுடன் முதலில் குலதெய்வத்தை தான் வணங்குவார்கள் பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் முதலில் குலதெய்வம் கோவிலில் போய் முடி வெட்டி வெட்டி முதல் முடி எடுத்து பொங்கல் வைத்து குலதெய்வத்தின் பெயரை குழந்தைக்கு வைப்பார்கள் பெயர் குழந்தை வெளிப்பட்டான் பெயராகவும் அல்லது குழந்தையின் அத்தை பெயராகவும் இருக்கும் பெயர்கள் வழிவழியாக வரும்.

தெவம்: திருவிழாவை தெவம் என்று தான் குறிப்பிடுவார்கள். தெவம் என்றால் பொங்கல் வைத்து கிடா வெட்டி பூஜை செய்து வழிபடுவது ஆகும். தெவம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை 10 ஆண்டுக்கு ஒருமுறை 11 ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்பட்டு வந்தது போது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ஏழு ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. முதலில் பள்ளி வாக்கு கேட்கும் முறை உங்களது துணை உலகில் பச்சைப் பந்தல் போட்டு கோவிலில் பள்ளி வாக்கு கேட்கப்படுகிறது. மாலை நேரங்களில் வேப்பமரத்தில் இவர்கள் ஒரு சிலையை குறிப்பிடுவார்கள் இந்த கிளையில் பள்ளி சத்தம் கேட்டால் மட்டுமே திருவிழா போடுவார்கள். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா என்றால் நான்கு ஆண்டு முடிந்து ஐந்தாவது ஆண்டு பள்ளி வாக்கு கேட்க சொல்வார்கள் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கேட்கப்படும் சொன்னால் மட்டுமே திருவிழா. மண் உடையார் இடம் குலதெய்வம் கோவிலில் தலையில் மண்ணை வைத்து கொடுப்பார்கள். அன்று முதல் மண்ணுடையார் குலதெய்வ பங்காளிகள் அனைவரும் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலில் செருப்பு அணியக்கூடாது முடி வெட்டக்கூடாது ஒருவர் இறந்தால் அந்த சடங்கில் கலந்து கொள்ளக்கூடாது இந்த விரதம் 90 நாள் அனுசரிக்கப்படும் வெற்றிலையில் கொடுத்த மண்ணை தன் மண்ணோடு சேர்த்து பொங்கலிட மண் பானை செய்ய வேண்டும்.

வழிபாடு முறை: முதலில் பூஜை கூடை எடுத்தல் பங்காளிகள் அனைவரும் பூஜை கூடை என்றால் மூங்கில் கூடை அதில் பூ பழம் தேங்காய் பத்தி கற்பூரம் சாம்பிராணி நெய் தேன் சந்தனம் பன்னீர் பூஜைக்கு தேவையான பொருள் இருப்பதால் அதற்கு பேர் பூஜை கூடை. ஆயிரம் வீட்டு பங்காளிகள் என்றால் ஆயிரம் பூஜை கூடை எடுக்க வேண்டும் ஒரு குடும்பத்திற்கு ஒரு கூடை எடுத்துக்கொள்ள வேண்டும் அதில் பூஜைக்கு தேவையான பொருளை வைத்துக் கொள்ளவேண்டும் ஆயிரம் கூடைகள் ஒரே இடத்தில் வைத்து பம்பை போட்டுக் கொண்டு தலையில் வைத்து அனைவரும் கோவிலுக்கு செல்ல வேண்டும் கோவிலில் கூடையை வைத்து விட்டு கடப்பாரை மண்வெட்டி எடுத்துக்கொண்டு அடுப்பு வெட்ட வேண்டும். பொங்கல் வைக்க வேண்டும் மூத்தோருக்கு முதல் அடுப்பு இளையோருக்கு அடுத்தடுத்து வெட்ட வேண்டும். இதுபோல் ஆயிரம் அடுத்து வெட்டவேண்டும் குலதெய்வத்திற்கு குடும்ப வழி பணம் கொடுத்தார்கள் மண்பானை கொடுக்கப்படும் மண்பானை கட்டப்படும் கோயில் சார்பாக பிறகு மண் பானையை அடுப்பில் வைத்து முதலில் அடுப்பை பூசாரி வைக்க வேண்டும் பிறகு அனைவரும் தீ முட்டலாம். அனைத்து பொங்கலை இறக்கிய பிறகு ஒவ்வொரு பொங்கலும் கரண்டியில் தோண்டி படையலிட்டு பூசை செய்யப்படுகிறது.

பிறகு கட்டி ஆடு கோழி பன்னி பூசை செய்யப்படுகிறது. தோசை இது கருப்பு சாமிக்கு செய்யப்படுகிறது. என் கழியை எடுத்து கம்பியால் குத்தி தீயில் சுட படுகிறது சுட்ட பின்பு அதைப் அறையில் வைத்து சாராயம் சுருட்டு வைத்து கருப்பு சாமிக்கு படையல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. முழுக்க முழுக்க கூட்டுப்பிரார்த்தனை கூறிய கோவில் குலதெய்வ கோவில் ஆகும் பெரிய பெரிய கோவில் இல்லாத விதிமுறைகள் கூட குலதெய்வ கோவிலில் உள்ளது ஆகம விதி என்று சொல்வார்கள் அதைவிட பல மடங்கு உயர்ந்த விதிதான் கோயிலில் உள்ளது. தமிழர்களின் அடையாளங்கள் முழுவதும் குலதெய்வ வழிபாட்டில் உள்ளது. சேர மன்னர்கள் சோழ மன்னர்கள் பாண்டிய மன்னர்கள் இந்த வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்பது அடையாளங்கள் குலதெய்வம் கோவிலில் உள்ளது.

கோவிந்தராஜ்

5/ 89, கல் மேட்டூர்,

கொங்கணாபுரம், சுண்ட மேட்டூர்,

சேலம் - 637 102

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சாஸ்தாநகர் , சேலம்
    அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில் கஞ்சமலை , சேலம்
    அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் கஞ்சமலை , சேலம்
    அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் குமரகிரி , சேலம்
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வடசென்னிமலை , சேலம்

TEMPLES

    சுக்ரீவர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    வீரபத்திரர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    காலபைரவர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சடையப்பர் கோயில்     ஐயப்பன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    பிரம்மன் கோயில்     சேக்கிழார் கோயில்
    தியாகராஜர் கோயில்     சூரியனார் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     அம்மன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     பட்டினத்தார் கோயில்
    சிவாலயம்     அறுபடைவீடு

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்