LOGO

அருள்மிகு பூளுடைய சாஸ்தா அம்பாளின் பிரதானக் திருக்கோயிலுக்கு அடுத்து உள்ளது எங்கள் குலதெய்வம்

  கோயில்   அருள்மிகு பூளுடைய சாஸ்தா அம்பாளின் பிரதானக் திருக்கோயிலுக்கு அடுத்து உள்ளது எங்கள் குலதெய்வம்
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   
  பழமை   
  முகவரி
  ஊர்   
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

எங்கள் குல தெய்வம்:

குலதெய்வத்தைக் கையெடுக்காமல் பட்ட கஷ்டமும், கையெடுத்துப் பெற்ற விமோசனமும்! எங்கள் குலதெய்வம் உதிரமாடர் உதிரமாடத்தி. இது திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தென்திருப்பேரை என்ற ஊரை அடுத்துள்ள கடம்பங்குளம் என்ற சிற்றூரில் உள்ளது.

அருள்மிகு பூளுடைய சாஸ்தா அம்பாளின் பிரதானக் திருக்கோயிலுக்கு அடுத்து உள்ளது எங்கள் குலதெய்வம். எங்கள் குலதெய்வத்தை மதிக்காததால் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கடும் சோதனைகள் இரண்டு!

சம்பவம் – 1 திருமணத் தடை நீங்கியது! எங்கள் தகப்பனார் குலதெய்வ வழிபாட்டை மறுத்தவர். அதனால் எங்களுக்கும் பக்தி மார்க்கம் என்பது என்னவென்றே தெரியாமல் போனதில் வியப்பில்லை! ஆனால் குடும்பத்தில் வரிசையாக பொருள் இழப்பு ஆரோக்கிய இழப்பு அம்மாவின் உயிரிழப்பு என்று சோகப் புயல் தொடர்ந்தது. எங்கள் கடைசி அக்காவின் திருமணமும் தாமதாகிக்கொண்டே போனது! அக்கம்பக்கத்தினர் எங்கள் தகப்பனாரிடம், குலதெய்வத்திடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அவர்களது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட தகப்பனார் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வத்திற்குப் போய் வேண்டிக்கொண்டு வருமாறு ஒப்புக்காக என்னை அனுப்பிவைத்தார். ஏற்கனவே அவநம்பிக்கை! ஏனோதானோ என்றுதான் நானும் சென்றேன்.. ராஜபாளையத்தில் பூசாரி வந்து கோயிலைத் திறந்தபோது சிவலிங்கம் அம்பாள்தான் இருந்தது. இதுவா குலதெய்வம்?? என்று கேட்டேன். பூசாரி சொன்னபிறகுதான் உண்மைக் காரணம் தெரிந்தது. அது தென்திருப்பேரைக் குலதெய்வத்தின் ‘பிடிமண்‘ கொண்டு வந்து வைத்து உருவாக்கிய பிரதிவடிவான தெய்வம் என்று விளக்கினார். கோயில் பிரகாரத்தைச் சுற்றி வரும் வழியில் கூம்புகூம்பாக அமைக்கப்பட்டு செம்மண் வெள்ளைப் பட்டைகள் பூசப்பட்டிருந்த மேடைகளில் குலதெய்வங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றாக இருந்த எங்கள் உதிரமாடர் தெய்வத்திற்கு தேங்காய் பழம் உடைத்து வணங்கிவிட்டுத் திரும்பினேன். என்ன ஆச்சரியம்! வந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை! திண்டுக்கல்லிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டார்கள்! அடுத்த சில மாதங்களிலேயே திருமணமும் சிறப்புற நடைபெற்றது ஆச்சரியம்! ஆனால் அதற்கும்கூட நன்றி சொல்லப் போகவில்லை என்பது வேதனை! நாத்திகத்தின் தாக்கம் மங்காமல்தான் இருந்தது! அதன்பிறகு சென்னைக்கு புலம் பெயர்ந்தேன்.

சம்பவம் – 2 விபத்தில் உயிர் தப்பியது! பலவருடங்கள் கழித்து எனக்குத் திருமண முயற்சிகள் நடந்தது. அதுவும் பயங்கரமாகத் தாமதமானது. பார்க்கும் பெண்கள் எல்லாம் தடையாகிக்கொண்டே போனது! திருமணம் ஆனதும் மணப்பெண்ணுடன் குலதெய்வம் கோயிலுக்கு வருகிறேன் என்று வேண்டிக்கொள் என்றார்கள். நானும் அதன்படி வேண்டிக்கொண்டேன். உடனே திருமணம் ஆனது. உடுமலையில் பெண். பழனியில் திருமணம். அடுத்தநாள் மதுரையில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம். நெல்லையில்தான் குலதெய்வம். வேண்டிக்கொண்டது நினைவில் இருந்தது. அப்போதும்கூட நன்றி மறந்துவிட்டேன்! குலதெய்வத்தை அலட்சியப்படுத்திவிட்டு திண்டுக்கல் சகோதரி விருந்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்ப உத்தேசம்! மதுரைப் பேருந்து நிலையத்துக்குப் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தோம். பிற்பகல் நேரம் அது- ஒரு ரயில் பாலத்திற்கு அடியில் எங்கள் ஆட்டோ போய்க்கொண்டிருந்தது. எதிரில் படுவேகமாக வந்த வேறொரு ஆட்டோ கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேராக எங்கள் ஆட்டோவில் மோதி அப்படியே குடை சாய்ந்தோம்! கூட்டத்தினர் வந்து மீட்டனர். புத்தம் புதிதாக அணிந்திருந்த எனது வெள்ளை வெளேர் ஆடையிலும் எனது மனைவியின் ஆடையிலும் ஒரே இரத்தக் கறைகள்! கைகால்கள் உதறல் எடுத்தன. எங்கிருந்து இரத்தம் வருகிறது என்று காயத்தைத் தேடியபோது எங்களுக்கு ஒருகாயம்கூட இல்லை! எங்களை அழைத்துச் சென்ற திண்டுக்கல் சகோதிரியின் கணவரின் கைவிரல்ச் சதை கிழிந்து இரத்தம் கொட்டியிருக்கிறது என்று கண்டோம். அவர் எங்களை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தாக சாந்தி செய்து இளைப்பாற வைத்தார். அங்கிருந்த பெரியம்மா நடந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றார். குலதெய்வத்தைக் கும்பிட்டீர்களா? என்றுதான் எடுத்த உடனேயே கேட்டார். அப்போதுதான் உள்ளுக்குள்ளே இன்னொரு விபத்து ஏற்பட்ட அதிர்ச்சி! தவறை ஒப்புக்கொண்டேன்! அத்தனை விருந்துகளையும் சென்னைப் பயணத்தையும் ரத்துச் செய்துவிட்டு, நேராக திருநெல்வேலிக்குப் புறப்ட்டோம்! குலதெய்வத்திடம் சென்று என் குற்றங்களை ஒப்புக்கொண்டு பூஜைகள் செய்து வணங்கிவிட்டுப் பிறகுதான் சென்னைக்குத் திரும்பினோம். அதன்பிறகு குழந்தைப் பேற்றில் தாமதம் ஏற்பட்டது. அதற்கும் வேண்டிக்கொண்டோம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்தது. தாமதிக்காமல் சென்று முடி எடுத்து வணங்கி வந்தோம். பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கும் சென்று முடி எடுத்து வணங்கி வந்தோம். இப்படியாகவே படிப்படியாக என்னுள் இருந்த நாத்திக இருட்டுக்கள் மங்கி மறைந்தன. முழுச் சிவபக்திக்குள் வந்தபிறகு தவறாத குலதெய்வ வழிபாடுகளும் தொடர்ந்தன….தொடர்கின்றன! நாத்திகத்தால் எங்கள் குடும்பமே நாசமாய்ப் போனது ஒரு பேருண்மை! குலதெய்வ வழிபாடே இல்லாமல் கடனாளியாகி, தொழிலை இழந்து, நோயுற்றுச் சீரழிந்து தகப்பனார் மாண்டு போனதுவரை கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்! அத்தனையும் சொன்னால் தாங்கிக்கொள்ள மாட்டீர்கள் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். மொத்தத்தில் குலதெய்வ வழிபாட்டை மறந்து நாங்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இறைவழிபாடும், அதற்கு முன்னதான முறையானக் குலதெய்வ வழிபாடும் இல்லை என்றால் வாழ்க்கை வாழ்க்கையாக இராது, மட்டுமல்ல, தீவினைகள் நம்மை உண்டு இல்லை என்று பண்ணிவிடும் என்பது மட்டும் உண்மை என்பதை மறந்துவிடாதீர்கள். இன்றுவரை எங்கள் குலதெய்வத்தைத் தவறாது வழிபடுகிறேன். குலதெய்வத்தை வணங்கியபடியே கண் விழித்துக் கண் துயில்கிறேன்! அதுவே அடியேனைச் சிவபக்தனாகவும் மாற்றியுள்ள மாண்பை மார்தட்டிச் சொல்ல விரும்புகிறேன்!

நன்றி, வணக்கம்.

அன்புடன்,

கே.எஸ்.இளமதி

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    அகத்தீஸ்வரர் கோயில்     முருகன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     பிரம்மன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சூரியனார் கோயில்
    அறுபடைவீடு     தியாகராஜர் கோயில்
    விநாயகர் கோயில்     விஷ்ணு கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சடையப்பர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     அய்யனார் கோயில்
    அம்மன் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     வள்ளலார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்