LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் !!

ஆவாஹனம்

 

ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.

 

கும்பம்

 

யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.

 

பாலாலயம்

 

கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை பாலாலய பிரவேசம் என்பர்.

 

கிரியைகள்

 

கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64 கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல் முக்கியமான 13 கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

 

ஆசாரியவர்ணம்

 

கும்பாபிஷேகத்திற்கென கிடைக்கும் பொருளுக்கு பூஜை செய்ய வேண்டும். இதை தன பூஜை என்பர். பூஜை செய்த பணம் அல்லது பொருளில் ஒரு பகுதியை கட்டட வேலைக்கும், ஒரு பகுதியை நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும், மூன்றாவது பாகத்தை ஆபரணங்கள் வாங்கவும் ஒதுக்குவார்கள். இப்படியே கோயில் காரியங்கள் சம்பந்தப்பட்ட 11 பாகமாக இந்த செல்வத்தை பிரிப்பார்கள். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆசாரியரை வணங்கி, இந்த செல்வத்தைக் கொண்டு குடமுழுக்கு நடத்தி தாருங்கள் என கேட்டுக்கொள்ள வேண்டும். இதையே ஆசாரியவர்ணம் என்பர்.

 

அனுக்ஞை

 

கோயில் பழுது பார்க்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைப்பதற்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதையே அனுக்ஞை என்கிறார்கள். விநாயகர் சன்னதி முன்பு இந்த நிகழ்ச்சி நடக்கும். சம்பந்தப்பட்டவரே கும்பாபிஷேகத்தை நடத்தித் தர அனுமதி தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டி கேட்டுக்கொள்வதே அனுக்ஞை ஆகும்.

 

பிரவேசபலி

 

கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எட்டு திசைகளிலும் வசிக்கின்ற ராட்சதர் முதலான தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை கடல், மலை, காடு, ஆறு, மயானம் ஆகிய இடங்களில் சென்று இருங்கள் என திருப்திப்படுத்தி வழி அனுப்புவதே பிரவேச பலி ஆகும். கும்பாபிஷேகங்களில் மட்டுமின்றி, கோயில்களில் திருவிழா நடக்கும்போதுகூட இதை செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

வாஸ்துசாந்தி

 

ஆகமங்களிலும், சிவமகா புராணத்திலும் வாஸ்து பற்றி கூறப்பட்டுள்ளது. அந்தகாசுரன் என்பவனை கொல்வதற்காக தேவர்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர். சிவபெருமான் தனது வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதத்தை உருவாக்கி அந்தகாசுரனை வதைத்தார். அந்த பூதம் சிவனிடம் பல வரங்கள் பெற்று உலகத்தை வருத்தியது. சிவபெருமான் பூதத்தை அடக்க அதிபவன் என்பவரை சிருஷ்டித்து அனுப்பினார். அதிபவன் அந்த பூதத்தின் உடலின்மீது 53 தேவதைகளை வசிக்க செய்து, மாயக்கயிறுகளால் கட்டினார். இதனால் இவர் வாஸ்துபுருஷன் என பெயர் பெற்றார். வாஸ்து புருஷனால் குடமுழுக்கு கிரியைக்கு இடையூறு நேராதபடி 53 தேவதைகளுக்கும் பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் சாந்தி செய்ய வேண்டும். இதுவே வாஸ்துசாந்தி ஆகும்.

 

ரக்ஷா பந்தன்

 

காப்பு கட்டுதல் என இதற்கு பொருள். சிவாச்சாரியார்கள் நாகராஜனுக்கு பூஜை செய்து, மந்திரித்த மஞ்சள்கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் சிவாச்சாரியார்களின் குடும்பத்தில் எதிர்பாராதவகையில் ஏதாவது தீட்டு ஏற்பட்டால் காப்பு அவிழ்க்கப்படும்வரை அந்த தீட்டு அவர்களை பாதிக்காது.

 

கடஸ்தாபனம்

 

கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது கடஸ்தாபனம். கலசம் நிறுவுதல் என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் கும்பங்கள் செய்யப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள் இல்லாமல் மந்திரித்து, அக்னியில் காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின் மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல் வாய் பகுதியில் மாவிலைகளை செருகி, தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள் நவரத்தினம், தங்கம், வெள்ளி, நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள். எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த மூர்த்தியின் உடலாக அந்த கும்பம் கருதப்படும்.

 

அஷ்டபந்தனம்

 

கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்.

 

மிகுத்சம்கிரஹணம்

 

இதற்கு மண் எடுத்தல் என பொருள். கும்பாபிஷேகத்தின்போது அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடுதல் நிகழ்ச்சி நடக்கும். மண்ணைத்தோண்டி பாலிகைகளில் இட்டு, நவதானியங்களை தெளித்து, முளைப்பாலிகை அமைப்பார்கள். இதுவே மிகுத்சம் கிரகஹணம் எனப்படும்

by Swathi   on 10 Jan 2014  16 Comments
Tags: கோவில் கும்பாபிஷேகம்   கும்பாபிஷேகம்   Kumbabishekam   கும்பாபிஷேக நடைமுறைகள்           
 தொடர்புடையவை-Related Articles
கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் !! கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் !!
கும்பாபிஷேகம் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் ராமராஜன்! கும்பாபிஷேகம் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் ராமராஜன்!
கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக நடத்துகிறார்கள் ? கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக நடத்துகிறார்கள் ?
கருத்துகள்
20-Mar-2019 16:48:01 சேஷாத்திரிஅய்யங்கார் said : Report Abuse
கும்பாபிஷேகம் செய்யும் முன்னர் உற்சவருக்கு வீதி புறப்பாடு உண்டா ? செய்யலாமா ?கோவிலில் ஸ்வாமியை மரப்பலகையில் பாலா ஸ்தாபனம் செய்து அந்த படத்திற்கும் உற்சவமூர்த்திக்கும் பூஜை நடக்கிறது .சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமியன்று உற்சவரை குதிரை வாகனத்தில் அலங்கரித்து வருடா வருடம் வீதி புறப்பாடு செய்வோம் தற்சமயம் கும்பாபிஷேக தேதி இன்னும் குறிப்பிடவில்லை இதற்கு முன்னர் புறப்பாட்டு உற்சவம் உண்டா ?
 
28-Jan-2019 05:33:51 பெருமாள் said : Report Abuse
சாஸ்தா கோவிலில் மூலவரை தவிர பூதத்தார் போன்ற பரிவாமூர்த்திகளுக்கு கோயிலின் மேல் கும்பகலசம் வைக்ககூடாது என கும்பாபிஷேகம் நடத்தஇருக்கும் அய்யர் கூருகிறார் இதற்கான விளக்கம் தேவை
 
17-Dec-2018 16:36:30 சுப்ரமணியன் ராஜு said : Report Abuse
கும்பாபிஷேகம் செயது . மண்டலா பூஜை முடிவதற்குள் கோவில் திருவிழா செய்யலாமா எங்களது கோவில் ஆகமமுறைப்படி பராமரிக்க படுகிறது . கர்பகிரஹம் , மூலவர், உற்சவர் வாகனம் , விமானம் கொடிமரம் பத்து நாள் உற்சவம் அனைத்தும் உண்டு . கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் உற்சவம் (வீதி உலா, கூல் ஊற்றுதல் ) போன்ற நிகழ்ச்சிகள் செய்யலாமா? கடந்த 40 ஆண்டுகளாக வருஷாபிஷேகம் தொடர்ந்து உற்சவம் நடத்துவது எங்கள் வழக்கம். விளக்கவும் வணக்கம்
 
15-Feb-2018 15:02:48 R. Saravanan said : Report Abuse
எங்கள் ஊரில் (விழுப்புரம் அருகில்) ஸ்ரீ மாரி அம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் 12 ஆண்டூ கடந்து விட்டது. 2018 கும்பாபிஷேம் நடக்க வேண்டூம். ஆணி, ஆவணி மாதத்தில் நடக்க வேண்டும். எங்களுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லவும். என்னுடைய ராசிக்கு பார்த்து பண்ண வேண்டுமா அல்லது பொதுவாக நாள் பார்க்க வேண்டுமா தகவல் தெரிவிக்கவும்
 
09-May-2017 18:47:40 vijay said : Report Abuse
வணக்கம் ! தங்களின் ஜாதக ரீதியா இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம் , தில ஹோமம், சாந்தி ஹோமம் ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள் விருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம் ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி ,நவகிரஹ,சுதர்சன , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com ) Face புக் பேஜ் : https://www.facebook.com/groups/1444138238950905/ Hi I am R.Vijaya sarathi ARCHAGAR we are performing pithuru thosam,thaRA thosam thiilaa Homam in THIRUPULANI,rameswaram(thanushkodi)and parihara homam like naga sarpa dosam, saptarishi,navagarah­­a Homam, etc... for all in their home and also in temples so kindly refer us for any homam, kalyanam,gira
 
26-Mar-2017 12:40:32 காசிராஜன் E said : Report Abuse
நாங்கள் கடலூர் அருகில் பாதிரிகுப்பம் குலசேகர அம்மாள் நகரில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் கட்டிக்கொண்டு உள்ளோம் அதற்கு கும்பாபிஷேகம் வரும் 29 /05 /2017 அன்று நடைபெற இருப்பதால் இதை காணும் அன்பர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவி செய்து தருமாறு தங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம் இப்படிக்கு காசிராஜன் பொருளாளர் 8124907793
 
18-Mar-2017 09:45:42 Gowtham said : Report Abuse
Nala eruku
 
26-Feb-2017 12:08:55 vijayasarathi said : Report Abuse

வணக்கம் ! தங்களின் ஜாதக ரீதியா  இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம்   , தில ஹோமம், சாந்தி ஹோமம்  ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள் விருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம்  ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி  ,நவகிரஹ,சுதர்சன  , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் (sarathi2003@gmail.com ) 

 
02-Jan-2017 07:06:27 மு ஜெயவர்மன் said : Report Abuse
கும்பாபிஷேக நேரத்தில் கருடன் கோபுரத்தின் மேல் வட்டமிடுவதின் உண்மையான (அறிவு சார்ந்த) காரணம் என்ன ?
 
15-Mar-2016 01:57:19 Manish said : Report Abuse
குலதெய்வ கோவில் சாமி சிலை ஆடுவதை சரி செய்ய என்ன பண்ணவேண்டும் . கும்பாபிசேகம் சேயும் போடு சாமி முழு சக்தி பெரும கட்டுக்குள் இருந்தால் வெளியில் வந்துவிடுமா . அசைவ பூஜை செய்யும் சாமிக்கு கும்பாபிசேகம் அண்டு சைவ பூஜை போடுமானந்தா கூறுங்கள்.
 
29-Feb-2016 22:22:14 கிருஷ்ணன் said : Report Abuse
எத்தனை வருடத்துக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்? 12 வருடத்துக்கு ஒரு முறை என்ற நியமம் எல்லா கோயில்களுக்கும் உண்டா? அல்லது ஆகம சாஸ்த்ரவிதிப்படி கட்டின கோயில்களுக்கு மட்டுமே ஆகுமா? குடும்ப குலதேவங்களுக்காக கட்டப்பட்ட கோயில்களுக்கும் 12வருட கெடு உண்டா?
 
07-Feb-2016 19:30:07 sundararajan said : Report Abuse
இப்பவும் நாங்கள் ஒரு பெருமாள் கோவில் கட்டி அதன் கும்பாபிஷேகம் 18.3.16 அன்று நடை பெற irukkirathu. அதனால் எங்களுக்கு கும்பபிஷேகா சாமன்கள் தேவைபடுவதால் அதை எங்கு வாங்குவது குறித்து அஹற்குரிய தகவல்கள் அனுப்பவும் முடிந்தால் கடை விலாசம் போன் நம்பர் anuppavum. இப்படிக்கு சுந்தரராஜன் 9444622695 பொருளாளர்
 
08-Oct-2015 09:14:19 Prabu said : Report Abuse
Suler
 
05-May-2015 23:12:40 சுரேஷ் said : Report Abuse
யாகசாலை விளக்கம் ,சப்த கண்ணிகள் வரலாறு
 
08-Feb-2015 21:18:10 ஷன்கர் archagar said : Report Abuse
யாகசலையின் விளக்கம் தேவை
 
19-Sep-2014 06:13:42 ச.தணிகைமணி said : Report Abuse
நன்றி,மிகவும் பயனுள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.