|
||||||||
சட்ட விழிப்புணர்வு கையேடு |
||||||||
சட்ட விழிப்புணர்வு கையேடு சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக 05.11.2020 அன்று இணையவழி முகாம் நடத்தப்பட்டது. இந்த கையேடு சட்டங்களை பற்றிய விழிப்பணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. PREPARED BY
Devakottai Taluk Legal Services committee officials 1) M.P. Murugan, Chairman 2) K. Manimekalai., 3) S. Veetrichelvan., PLV Front Office. 4) K. Jesudass., PLV KNOWLEDGE IS POWER Leave clashes Live together.
சட்ட விழிப்புணர்வு ஏற்படும் போது சமூக பிரச்சனைகள் குறைகிறது. மக்களுக்கு சட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள உரிமைகள் என்ன? தீர்வு பெறுவதற்கு யாரை அணுக வேண்டும். ஏதாவது ஒரு வகையான வன்முறை அல்லது கொடுமைக்கு ஆளாகும் போது சட்டவழி நிவாரணம் பெறுவது எப்படி? போன்ற சந்தேகங்களுக்கு விடையளிப்பது எங்கள் நோக்கம்.
ஆதி காலத்தில் மனிதர்கள் காடுகளில், குகையில் நாடோடியாய் வாழ்ந்தார்கள். இயற்கை சீற்றம், விலங்குகள் அவர்களது அமைதியான வாழ்க்கைக்கு எதிரிகளாய் இருந்தது. தப்பித்துக் கொள்ள பாதுகாப்பு கருதி கூட்டமாக வாழ துவங்கிய போது சமூகம் உருவானது. சமூக ஒற்றுமைக்கு நல்லிணக்கம் அவசியமானது. எனினும் சமூக வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதனே எதிரியானான். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி ஆகிய செயல்கள் சமூக வாழ்க்கைக்கு விரோதமானது. மனிதனே இயற்கைக்கு விரோதியானான். மனிதனே விலங்குகளை அழிக்க துவங்கினான். இவற்றை கட்டுப்படுத்தவும், தடுத்து நிறுத்தவும் உருவான விதிமுறைகள் தான் சட்டங்கள் ஆனது. சட்டம் மனிதனுக்கு கடமைகளை வகுத்தது. இயற்கையை அழிப்பதும், விலங்குகளை அழிப்பதும் தண்டிக்க தக்க குற்றமானது. குடும்ப தலைவனாக கருதப்படும் ஒவ்வொரு ஆணும், பெற்றோர்கள், மனைவி, 18 வயது நிரம்பாத மகன், திருமணமாகாத மகள் ஆகியோரை காப்பாற்ற கடமைப்பட்டுள்ளான். அவர்களின் கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாட உணவு ஆகிய செலவுகளுக்கு ஆண் மட்டுமே பொறுப்பு. இருப்பிட வசதி செய்து கொடுக்கும் கடமையும் அவருக்கு உண்டு. ஆணுக்கு கடமையாக இருப்பது மற்றவர்களுக்கு உரிமையாகிறது. கடமையை நிறைவேற்ற தவறும் நபர்களை கண்டிக்கவும் தண்டிக்கவும் உருவானது சட்டம். பாதிக்கப்பட்ட நபர்களின் தேவையை, இழப்பை ஈடுசெய்ய வழிவகை செய்வது சட்டம். சட்டம் என்பது ஒரு அரசாங்கத்தால் எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதிசெய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும். கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையிலிருந்து நாகாPகான வாழ்க்கைக்கு மனிதர்களை அழைத்து செல்வது சட்டம். பிறக்கும் போது மனிதர்கள் எவரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சில சூழ்நிலைகளின் காரணமாகத்தான் மனிதர்கள் பெரும்பாலும் குற்றவாளியாகிறார்கள். அதனால்தான் சிறைச் சாலைகளில் “குற்றத்தை வெறு, குற்றவாளிகளை வெறுக்காNது” என்ற வாசகம் இருக்கும். கல்லாமை, கற்றறிந்த ஒரு சிலரும் சட்ட விழி்ப்புணர்வு இல்லாமையால் தவறான நபர்களிடம் சிக்கிக் கொண்டு நாட்களையும் பணத்தையும் இழப்பார்கள். இந்தக் குறைகளை நீக்க வந்ததுதான் இலவச சட்ட உதவி மையங்கள். நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழக்கறிஞர் வைத்து தன் வழக்கை வாதாடுவதற்கு உரிமை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதன் நோக்க் தான் இலவச சட்டத்தின் அம்சமாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச சட்ட உதவி மையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. வசதியற்றவர்கள் தம் வழக்குகளை நடத்த அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்துத் தரவேண்டும் என விருப்பப்பட்டால் இந்த இலவச சட்ட மையத்திற்கு இது குறித்து மனு கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழ்மையான முதியவர்களும், பெண்களுக்கான வழக்கு, ஜீவனர்ச வழக்கு, வரதட்சணை வழக்கு, நிலம் பங்கு பிரிப்பு வழக்கு போன்றவைகளை எந்த ஒரு செலவும் இல்லாமல் இலவச சட்ட உதவி மையம் மூலமாக செய்து முடித்து பயன்பெறலாம் .speedy justice with Lo Adalat 12 அடிப்படை உரிமைகளை தெரிந்து வைத்திருங்கள் ஒருவர் மானத்துடன் உயிர் வாழ என்னென்ன தேவையோ, அவையெல்லாம் ‘அடிப்படை’ உரிமைகள். எந்தத் தனி மனிதரோ, அமைப்போ, நிறுவனமோ, அரசாங்கமே கூட, இந்த உரிமைகளை மறுக்க முடியாது. இவற்றை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்கிறார் நமது இந்திய அரசியலமைப்பு சாசனம். முக்கியமானவற்றை மட்டும் பார்ர்போம். 1. எல்லாருக்கும் சமமான சட்ட உரிமை. இந்த உரிமையை சட்டம், யாருக்கும் மறுக்காது. (பிரிவு Article -14 ) சட்டப்படியான எந்த உரிமையையும் யாருக்கும் யாரும் மறுக்க முடியாது. 2. யாரையும் சட்டம் பாகுபடுத்திப் பார்க்காது. சட்டத்தின் நேர் பார்வையில், எல்லாரும் ஒன்று. ஏiழு, பணக்காரன், படித்தவர், படிக்காதவர், ஆண், பெண் உள்ளிட்ட எந்த வேறுபாடும் சட்டத்தின் முன் இல்லை. சாதி, மதம், இனம், மொழி போன்ற பாகுபாடுகளும் அறவே கிடையாது. (பிரிவு 15) இந்திய அரசியவ் அமைப்பு சட்டம் பிரிவு 15(3), நாட்டிலுள்ள அனைவருக்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்திருப்பதோடு, பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. 3. பொது வேலை (public employment) பெறுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு. (பிரிவு 16) 4. தீண்டாமை ஒழிப்பு, எந்த வடிவத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டாலும், தடை செய்யப்படுகிறது, சட்டப்படி தண்டனைக்கு உரியது. (பிரிவு 17) 5. பேச்சு சுதந்திரம், பேச, ‘வெளிப்படுத்த’, ஆயுதங்கள் இன்றி அமைதியாக ஒன்று சேர, மன்றங்கள் ஷஅமைப்புகள் நடத்த, இந்தியாவுக்குள் எங்கும் சென்று வர, இந்தியாவுக்குள் எங்கும் வசிக்க – எல்லாக் குடிமகன்களுக்கும் உரிமை உண்டு. (பிரிவு 19) ஒரே குற்றத்துக்கு இருமுறை தண்டனை வழங்கப்பட மாட்டாது. (பிரிவு 20) 6. வாழ்வதற்கான, தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமை. (பிரிவு 21) 7. கல்வி உரிமை. 6 முதல் 14 வயது வரை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வியை உறுதி செய்தல். (பிரிவு 21 யு) இது, 2002இல் கொண்டு வரப்பட்ட 86ஆவது திருத்தம். 8. முகாந்திரமற்று யாரையும் கைது செய்வதைத் தடுக்கிறது சாசனம். (பிரிவு 22) கைதான் 24 மணி நேரத்துக்கு உள்ளாக, நீதிபதி முன்பாக நிறுத்தப்பட வேண்டும். 9. குழந்தைத் தொழிலாளர்கள் கூடாது என்கிறது பிரிவு 25. 10. வழிபட, பின்பற்ற – மத சுதந்திரம் வழங்குகிறது பிரிவு 25, கல்வி நிறுவனங்கள் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மத அமைப்புகளுக்கு அனுமதி வழங்குகிறது பிரிவு 26. 11. மொழி, மத சிறுபான்மையினரின் நலன்கள் பிரிவு 29. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு பிரிவு 30. 12. இந்த சாசனம் தரும் உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.
வங்கிக் கடன், கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்: 1. வங்கியில் கடன், கிரடிட் கார்டு, கல்வி கடன் வசூல் என எதுவாக இருந்தாலும் எல்லாமே சிவில் நடைமுறைதான். 2. எக்காரணம் கொண்டும் வங்கிகள் கடனாளர் மீது கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. இது ரிசர்வ் வங்கியின் வழிமுறை. 3. கடனின் தவணைகள் தாமதமானால், வங்கி முறைப்படி பணத்தை கேட்கலாம் அல்லது கடிதம் அனுப்பலர், மாறாக கடன் வாங்கியோரின் வீட்டினுள் நுழைந்து பணம் வசூலிக்க முயலுவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 441யின் படி குற்றம். 4. பணத்தை கேட்டோ, வசூலிக்கவோ வங்கி ஊழியர்களோ, முகவர்களோ செல்போனில் அவதூறாக பேசினாலோ, மிரட்டினாலோ IPC Section 499 and 503யின் படி குற்றம். 5. கடன் தவணையை கேட்டு தொடர்ந்து வங்கி தொல்லை கொடுத்தால் மேற்கண்ட பிரிவுகளை குறிப்பிட்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். 6. அதேநேரம் உங்கள் பகுதியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் ; Order VII, Rule 1 of Civil Proceedure Code apy; மனு தாக்கல் செய்துOrder XXXIX, Rule 1 of Civil Proceedure Codeapy; தடை உத்தரவை பெறலாம். 7. கடன் தவணை நிலுலை தொகையை வசூலிக்க வங்கி சிவில் நடைமுறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊழியர்களை, முகவர்களை கொண்டு மிரட்டுவது குற்றம். பைனான்ஸ் வாங்கிய வண்டியை, தவணை பணம் கட்டவில்லை என்று, வங்கி நிர்வாகம், கடன் பெற்றவரிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுக்கக் கூடாது என்று டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு. தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், கடன் பெற்றவர், கடனை சரியாக கட்டவில்லை என்று, வங்கி, வலுக்கட்டாயமாக வண்டியை தூக்க கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கடன் ஒப்பந்தம் சிவில் காண்ட்ராக்ட் ஆகும். அதனால் சிவில் ரெடிமெடி மூலமே, அதாவது, நீதிமன்றம் மூலமே, வண்டி பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம; ICICI வங்கி எதிர் பிரகாஷ் கௌர் என்ற வழக்கில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு இல்லாமல், வங்கி, கடன் வாங்கியவர் வீட்டுக்கு சென்று. வலுக்கட்டாயமாக வண்டியை பறிமுதல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கை மெதுவாக இருக்கலாம். ஆனால் அதற்காக பைனான்சியர் அடியாட்களை வைத்து, கடன் கொடுத்ததற்காக, வண்டியை பறிமுதல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் CITI CORP MARUTI FINANCE LTD., என்ற வழக்கிவ் உத்தரவிட்டுள்ளது. வலுவான சட்டம் இருக்கும் ஒரு நாகாPகமுள்ள சமூகத்தில், இப்படிப்பட்ட, உடனடி நீதி, என்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
ஒம்புட்ஸ்மேன் (Ombudsman) ஒம்புட்ஸ்மேன் என்பதன் தமிழ் அர்த்தம் வங்கி முறைகேள் அலுவலர் (Banking Ombudsman) என்பதாகும். இவர் வங்கிகளில் வாடிக்கையாளருக்கு ஏற்படும் குறைகளைச் சரி செய்வதற்காக நமது இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி உருவாக்கப்பட்ட ஒரு அதிகாரி ஆவார். ஜனவரி 1ஆம் நாள் 2006ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்திய அரசின் இத்திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது. இந்த இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படையில் தான் இது இயங்குகிறது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர் வங்கிகள் மீதான குறைகளை நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்திய பிறகும் குறைகள் தீர்க்கப்படவில்லையென்றால் வங்கி முறைகேள் அலுவலரிடம் முறையிட்டு அதற்கான தீர்ப்பை பெறலாம். Dr. Balu K
பிரிந்துவிட்ட கணவன் - மனைவி மீண்டும் சேர்ந்து வாழ துணை புரியும் சட்டங்களின் பிரிவுகள் என்னென்ன பார்ப்போம். இந்துக்களுக்கு இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 9. அதாவது இந்து திருமணச் சட்டத்தின் 9வது பிரிவு, கூட்டு உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஏற்பாட்டை உள்ளடக்கியது ஆகும். அதன்படி வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் தங்களை மற்றவரின் சமூகத்திலிருந்து விலக்கிக் கொண்டால் அதாவது நியாயமான காரணமின்றி பிரிந்து வாழந்தால் பாதிக்கப்பட்ட கணவரோ மனைவியோ திரும்பவும் திருமண வாழ்க்கையை மறு சீரமைக்க சட்டப்பூர்வ உரிமை உண்டு. இந்த மனு விண்ணப்பம் மறுக்கப்படுவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வமான காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கருதினால் மனுவில் உள்ள அறிக்கைகளின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் கணவர் அல்லது மனைவியின் இணை உரிமைகளை மறுசீரமைப்பதற்கான ஆணையை நீதிமன்றம் நிறைவேற்றலாம். கிறிஸ்தவர்களுக்கான சட்டம் கிறிஸ்தவர்களுக்கு இந்திய விவாகரத்துச்சட்டம் 1869 பிரிவு 32. section 32 of the Indian divorce act. இந்த சட்டமும் மேலே கூறியது போல பிரிவுகள் தான் வேறுபடும். அதே நடைமுறை தான். அதே போலதான் இனிவரும் இரண்டு பிரிவினருக்கான சட்டங்களும். இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கான சட்டம். சிறப்புத் திருமணச்சட்டம் 1954 பிரிவு 22. Section 22 in The Special Marriage Act, 1954 திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தால் அதாவது வேறுபட்ட மதம,் சாதியில் திருமணம் செய்து கொண்டவர்கள் இந்த சட்டத்தின்படி சேர்நது வாழ மனு அளித்து நீதிமன்றம் மூலமாக முயற்சிக்கலாம். இஸ்லாமியர்களுக்கான சட்டம் இதேபோல் இஸ்லாமிய மத சம்பிரதாயத்தின் படி நிக்காஹ’ (திருமணம்) செய்து கொண்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியத் தனிச் சட்டங்கள் என இந்தச் சட்டங்கள் எல்லாம் பிரிந்து வாழும் தம்பதி மீண்டும் சட்டப்படி இணைந்து வாழ வழிவகை செய்கிறது. மணமுறிவு, விவாகரத்து வழங்கிட நீதிமன்றத்திற்கு மட்டுமே உரிமையுள்ளது. ஊர் பெரியோர், உற்றார் உறவினர்களால் செய்து வைக்கப்படும் மணமுறிவுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. கணவனும் மனைவியும் பத்திரம் எழுதி விவாகரத்து செய்வதும் முடியாது. முதல் திருமணத்தை நீதிமன்றத்தின் வாயிலாக ரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்வது குற்றம். இரண்டாவது திருமணத்தின் மூலமாக வரும் மனைவிக்கு கணவனிடமிருந்து சட்டப்படி சொத்து எதையும் பெற முடியாது.
Cyber Crime Law in India Information Technology Act 1. Tampering with computer source Documents Sec.65 2. Hacking with computer systems, Data Alteration Sec.66 3. Sending offensive messages through communication service, etc Sec.66A 4. Dishonestly receiving stolen computer resource or communication device Sec.66B 5. Identity theft Sec.66C 6. Cheating by personation by using computer resource Sec.66D 7. Violation of Privacy Sec.66E 8. Cyber terrorism Sec.66F 9. Publishing or transmitting obscene material in electronic form Sec.67 10. Publishing or transmitting of material containing sexually explicit act, etc. in electronic form Sec.67A 11. Punishment for publishing or transmitting of material depicting children in sexually explicit act, etc. in electronic form Sec.67B 11. Preservation and Retention of information by intermediaries Sec.67C 12. Powers to issue directions for interception or monitoring or decryption of any information through any computer resource Sec.69 13. Power to issue directions for blocking for public access of any information through any computer resource Sec.69A 14. Power to authorize to monitor and collect traffic data or information through any computer resource for Cyber Security Sec.69B 15. Un-authorized access to protected system Sec.70 16. Penalty for misrepresentation Sec.71 17. Breach of confidentiality and privacy Sec.72 18. Publishing False digital signature certificates Sec.73 19. Publication for fraudulent purpose Sec.74 20. Act to apply for offence or contraventions committed outside India Sec.75 21. Compensation> penalties or confiscation not to interfere with other punishment Sec.77 22. Compounding of Offences Sec.77A 23. Offences with three years imprisonment to be cognizable Sec.77B 24. Exemption from liability of intermediary in certain cases Sec.79 25. Punishment for abetment of offences Sec.84B 26. Punishment for attempt to commit offences Sec.84C Note: Sec.78 of I.T. Act empowers Police Inspector to investigate cases falling under this Act. 27. Offences by Companies Sec.85 28. Sanding threatening messages by e-mail Sec.503 IPC 29. Word, gesture or act intended to insult the modesty of a woman Sec.509 IPC 30. Sending defamatory messages by e-mail Sec499 IPC 31. Bogus websites, Cyber Frauds Sec.420 IPC 32. E-mail Spoofing Sec.463 IPC 33. Making a false document Sec.464 IPC 34. Forgery for purpose of cheating Sec.468 IPC 35. Forgery for purpose of harming reputation Sec.469 IPC 36. Web-jacking Sec.383 IPC 37. E-mail Abuse Sec.500 IPC 38. Punishment for criminal intimidation Sec.506 IPC 39. Criminal intimidation by an anonymous communication Sec.507 IPC 40. When copyright infringed:- Copyright in a work shall be deemed to be infringed Sec.51 41. Offence of infringement of copyright or other rights conferred by this Act. Any person who knowingly infringes or abets the infringement of Sec.63 42. Enhanced penalty on second and subsequent convictions Sec.63A 43. Knowing use of infringing copy of computer programme to be an offence Sec.63B 44. Obscenity Sec.292 IPC 45. Printing etc. of grossly indecent of scurrilous matter or matter intended for blackmail Sec.292A IPC 46. Sale, etc., of obscene objects to young person Sec.293 IPC 47. Obscene acts and songs Sec.294 IPC 48. Theft of computer Hardware Sec.378 49. Punishment for theft Sec.379
இரண்டு இந்துக்களுக்கிடையே நடைபெறும் திருமணத்திற்கு தான் இந்து திருமணச் சட்டம் பொருந்தும். இரண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்களுக்கிடையே நடைபெறும் திருமணங்களுக்கு இந்த திருமணச் சட்டம் பொருந்தாது. இந்து திருமணச் சட்டம் பிரிவு 2ல் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டம் பிரிவு 2(1)(ய) ஆனது, இந்து மதத்தை சார்ந்துள்ள ஒரு நபருக்கு தான் பொருந்தும். அந்த இந்து மதம் எந்த முறையில் வளர்ச்சியில் இருந்தாலும் அந்த பிரிவு பொருந்தும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் அல்லது ஜீ மதத்தை சார்ந்தவர்கள் இந்து என்பதிலிருந்து விலக்கப்பட்டு உள்ளார்கள் என்று உட்பிரிவு ‘சி’ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு இரண்டு இந்துக்களிடையே ஒரு திருமணம் நடைபெற்றிருக்க வேண்டுமென இந்து திருமணச் சட்டம் பிரிவு 5ல் கூறப்பட்டுள்ளது. எனவே இநது திருமணச் சட்டமானத இரண்டு இந்துக்களுக்கிடையே நடைபெற்றுள்ள திருமணத்திற்கு தான் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் பிரிவு 4ல் “திருமணம் நடைபெறும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே கிறிஸ்தவராக இருந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றிருந்தால் மட்டுமே அந்த திருமணம் செல்லும் என்றும், அப்படி இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது என்று” கூறப்பட்டுள்ளது. இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் பிரிவு 4 மற்றும் இந்து திருமணச் சட்டம் பிரிவு 5 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது, குல வழக்கப்படி இரண்டு இந்துக்களிடையே நடைபெற்றுள்ள திருமணத்தை இந்து திருமணச் சட்டம் செல்லத்தக்கது என்று ஏற்றுக் கொள்கிறது. திருமணம் செய்து கொள்கிற இரண்டு நபர்களில் ஒருவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருந்து, மற்றொரு நபர் இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், இந்து திருமணச் சட்டம் அந்த திருமணத்திற்கு பொருந்தாது. அத்தகைய திருமணத்திற்கு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டமே பொருந்தும். இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு, ஒரு திருமணம் நடைபெறவில்லை என்றால், அந்த திருமணம் இல்லாநிலை திருமணமாக (void) கருதப்படும். சிறப்பு திருமணச் சட்டத்தை விடவும், மேலோங்கு செயல் திறன் (Over riding Effect) இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்ட்த்திற்கு அளிக்கப்படவில்லை. சிறப்பு திருமணச் சட்டத்திற்கு அந்த மேலோங்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திருமணச் சட்டம் பிரிவு 4ல் சிறப்பு திருமண செய்வதற்கான நடைமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதன்பஎ திருமணம் ஒன்று நிகழ்வதற்கு திருமண தம்பதிகள் இருவரும் அட்டவணை 2ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் அவர்கள் இருவரும் அல்லது ஒருவர் திருமணத்திற்கு முன் 30 நாட்களுக்கு குறைவில்லாமல் வாழந்த பகுதியைச் சேர்ந்த திருமண அலுவலரிடம் திருமணம் பற்றிய அறிவிப்பை எழுத்து மூலம் கொடுக்க வேண்டும்.
பிரிவு 5ன் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்புகள் அனைத்தும் திருமண அலுவலர் பதிவேட்டுடன் இணைத்து வைக்க வேண்டும். அதோடு அவர் உடனடியாக அந்த அறிவிப்புகள் ஒன்றின் உண்மை நகலை அதற்கென உள்ள திருமண பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். நபர் எவரும் அந்த பதிவேட்டை பார்வையிடுவதற்கு விரும்பும் பொழுது, அதை எல்லா காலங்களிலும் பார்வையிட வழிவகை செய்ய வேண்டும். மேலும் திருமண அலுவலர் அந்த அறிவிப்பு நகல் ஒன்றை அவரது அலுவலகர்தில் வெளிப்படையாக தெரியுரறு ஒட்டி விளம்பரம் செய்ய வேண்டும். திருமணம் செய்து கொள்ள இருக்கும் தரப்பினர்கள் பிரிவு 5ன் கீழ் அறிவிப்பு கொடுத்த திருமண அலுவலரின் வட்டார எல்லைக்குள் நிலையான குடியிருப்பை கொண்டிராத போது, திருமண இலுவர், அவ்விருவரும் நிலையான குடியிருப்பை கொண்டிருக்கும் திருமண அலுவலருக்கு அந்த அறிவிப்பினை அனுப்பி வெளிப்படையாக தெரியும் இடத்தில் அதை ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும். ஆட்சேபணைகள் ஏதாவத தெரிவிக்கப்பட்டால், அந்த ஆட்சேபணைகளை குறித்து திருமண அலுவலர் முடிவெடுக்க வேண்டும். அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு, ஆட்சேபணைகள் ஏதும் இல்லை என்றால் அந்த தம்பதிகளின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை ஆட்சேபணை இருந்தால் அது குறித்து திருமண அலுவலர் முடிவு எடுக்கலாம். அந்த முடிவின் மீது தம்பதிகள் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம். இதுவே சட்டப்படியான செயலாகும். மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் திரு.P.R. சிவக்குமார் மற்றும்; S. வைத்தியநாதன் ஆகியோர்கள் ஆவார்கள். H.C.P.NO-1722/20015, DT-18.12.2015
பணி விலகல் கடிதம் கொடுத்தால் தமிழ்நாடு சார் நிலைப் பணியாளர்கள் பணி விதிகளின் விதி 41(A) ன்படி 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு காத்திருக்காமல் தனது பணி விலகல் கடிதத்தை அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்… தமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் விதிகளின் விதி 41(A) மூன்று காரணிகளை உள்ளடக்கியது. 1. மூன்று மாதங்களுக்கு குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை அரசு ஊழியர் கொடுக்க வேண்டும். 2. அதனை வேலை அளித்த அதிகாரமுடைய நபர் ஏற்க வேண்டும். 3. அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்பப் பெறுதல் குறித்து விதி 41(A)(a) ல் கூறப்பட்டுள்ளது பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது குறித்து தகுதி பெற்ற அதிகாரி குறிப்பிட்ட கால அவகாசம் அளித்து, அந்தப் பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களை குறிப்பிட்டு ஓர் உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். அதிகாரம் பெற்ற நபர் பணி விலகல் கடிதத்தை குறித்து எந்தவொரு உத்தரவையம் அறிவிப்பு காலத்திற்குள் பிறப்பிக்கவில்லை என்றால் விதி 41(A)(c) ன்படி அந்தக் கடிதம் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். இந்த வகையில் அந்த விதியிலுள்ள கூறுகள் அரசு ஊழியருக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணி விலகல் குறித்த அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்கு பின்னர் அந்தப் பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவை பிறப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும், அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது.
உச்சநீதிமன்றம் “பஞ்சாப் நேஸனல் வங்கி Vs P.K. மெட்டல் (1989-SUPP-2-SCC-175)” என்ற வழக்கில், பணி விலகல் கடிதம் 3 மாதங்களுக்கு பின்னரே நடைமுறைக்கு வரும். அதற்கு முன்பாக ஊழியரை பணியிலிருந்து விலகும்படி அதிகாரி வற்புறுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. பணி விலகல் அறிவிப்பு கொடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் அதனை திரும்பப் பெற அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிரமயை விதி 41(A)(b) எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறி மேற்படி ஊழியருக்கு மீண்டும் வேலையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வாட்ஸ் ஆப்பில் நோட்டீஸ் அனுப்பினாலும் செல்லும். வழக்கு தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினாலும் செல்லும் என மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் செய்வத எப்படி? புகார்களில் முகாந்திரம் இருந்தால் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டியதில்லை. புகாரில் குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் தெரியால் போனால், முதல்கட்ட விசாரணை நடத்தி முகாந்திரம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்குப் பின், புகாரில் உண்மையில்லை எனத் தெரிந்து, அந்தப் புகார் முடிக்கபட்டால், புகார்தாரருக்கு அதற்கான ஆவணத்தை, ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். அதில் புகார் முடிக்கப்பட்ட காரணத்தை குறிப்பிட வேண்டும். புகாரில் உண்iஇருந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் கடமை தவறும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் உண்மையானதா? பொய்யானதா? என்பதை பார்க்காமல், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். குடும்பத் தகராறு, வணிகக் குற்றங்கள், மருத்துவ கவனக்குறைவு. ஊழல், தாமதப் புகார்கள் மீது 7 நாட்களுக்குள் முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டும். அதற்குமேல் புகாரை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை காவல்நிலையக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். காவல்நிலைய பொது குறிப்பேடு, நிலையக் குறிப்பேடு, தினக் குறிப்பேட்டில் காவல் நிலையங்களுக்கு வரும் அனைத்து புகார்களின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை:DECISION OF HONOURABLE SUPREME COURT OF INDIA, Dated August 11, 2020. VINEETA SHARMA Vs. RAKESH SHARMA & ORS.
1956ல் ‘இந்து வாரிசு உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 25.3.1989க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவனை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர உரிமை உண்டு. எனினும் சொத்து பாகப்பிரிவினை 25.3.1989க்கு முன்பு செய்யப்பட்டிருந்தால் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ‘இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால் பெண்கள் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்தும் இந்து குடும்பத்தில் பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இநது வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், 2015 மற்றும் 2018ல் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் இந்த விவகாரத்தில் சட்டாPதியான கேள்வி எழுந்தது. இதற்கிடையே டெல்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நாசர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தநிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:- ஒரு இந்து குடும்பத்தில் அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், நத்தை இந்து வாரிசு உரிமை சட்டம் - 2005 திருத்தத்துக்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலலே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு. ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 – RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும். ‘எனக்கு இந்தக் காரணத்துக்காக அந்தத் தகவல் தேவைப்படுகிறது’ என்று நாம், தேவைக்கான காரணங்களைத் தகவல் கொடுப்போரிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம். 30 நாட்களுக்கு மேலாகிவிட்டால் தகவலை இலவசமாகத் தர வேண்டும். நேரடியாக நம்முடைய விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்திய சான்றான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை போன்றவைகள் உள்ளனவா என உறுதி செய்துகொள்ளுதல் அவசியம். பதிவு அஞ்சலுடனான (ரிஜிஸ்டர் போஸ்ட்) பதில் அட்டை (AD)- யில் உள்ள தபால் துறை முத்திரை, நமக்கான ஓர் அத்தாட்சி ஆகும். www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். நாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் தறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், மாநில தலைமை தகவல் ஆணையர், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 2, தியாகராயர் சாலை, ஆலையம்மன் கோயிவ் அருகில், தேனாம்பேட்டை, சென்னை-600018 or தபால் பெட்டி எண்: 6405, தேனாம்பேட்டை, சென்னை -600018 என்ற முகவரிக்கு உரியவர். அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, பேக்ஸ்:044-24357580 Email: sicnic,in Web: www.tnsic.gov.in. மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு > “CENTRAL INFORMATION COMMISSION, II Floor, August Kranti Bhavan, Bhikaji Kama Place, NEW DELHI – 110 066 என்ற இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் என்றால் www.rtionline.gov.in/ என்ற தளத்தில் மத்திய அரசின் கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம். www.rtionline.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் அல்லது எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். உச்சநீதிமன்றம் “R.M. மல்காணி Vs மகாராஷ்டிரா மாநிலம் (1973-1-SCC-471)” என்ற வழக்கில், ஒரு பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவில் வழக்கு சம்மந்தப்பட்ட உரையாடல்கள் இருந்து, அந்தக் குரல்கள் அடையாளம் தெரிந்துள்ள நிலையிலும், பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடல் அழிக்கப்பட கூடியதல்ல என்பதையும் மெய்பித்தால், அதனை ஓர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றம் ‘ஜியாவுதீன் பர்காவுதீன் புகாரி Vs பிர்ஜ் மோகன் இராம்தாஸ் நெகரா மற்றும் பலர் (1976-2-SCC-17)” என்ற வழக்கில், ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களையும், ஆவணங்கள் என்று இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 3ன் கீழ் கூறப்பட்டுள்ள விளக்கத்தின் படி ஏற்றுக் கொள்ளலாம் என்றும் புகைப்படங்களுக்கும், பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றாலும் கீழ்க்கண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் மட்டுமே பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களை சான்றாவணமாக ஏற்றுக்கொள்ள முடியம். 1. பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களை பேசியவரின் குரலை பதிவு செய்தவர் அல்லது பேசியவரின் குரலை அறிந்துள்ள வேறு நபர்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். 2. ஒருவரால் பேசப்பட்ட பேச்சுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக நிரூபிக்கும் விதமாக, அந்த பேச்சினை பதிவு செய்தவர் நேரடி சாட்சி அல்லது சூழ்நிலை சாட்சிகள் மூலம் நிரூபிப்பதோடு, பதிவு செய்யப்பட்ட அந்த சங்கதியில் மாறுதல் செய்வதற்கு எந்த வழியுமில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். 3. இந்திய சாட்சிய சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள அந்த சங்கதி அந்த வழக்கிற்கு தொடர்புடையது என்றும் எடுத்துக் காட்டப்பட வேண்டும். இந்திய சாட்சிய சட்டத்தில் ஆவணம் அல்லது பத்திரம் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தின் படியும், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் படியும் பார்த்தால் ஒரு குறுந்தகடை (Compact Disk) ஆவணமாக ஏற்றுக்கொள்ள தடை ஏதும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. A.NO – 1525/2015, DT- 24.11.2015 ஷாம்சர் சிங் வர்மா Vs ஹரியானா மாநில அரசு (2016-1-TNLR-192)
தனிப்புகார் நடைமுறை Private Complaint Procedure ஒரு குற்றச் சம்பவம் சம்பந்தமாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திட மறுத்திடு் போது குற்ற விசாரணை முறைச் சட்டம்,பிரிவு 200-இன் கீழ் ஒரு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அதில் புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்த பிறகு குற்றச் சம்பவம் நடந்ததற்கு அடிப்படை ஆதாரம் இருந்தால் அந்த வழக்கை கோப்பில் எடுத்துக்கொள்ளும். போஸ்கோ சட்டம் என்றால் என்ன..? அதன் புதிய சட்ட திருத்த மாற்றங்கள் என்ன..? 18வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது. வயது வரம்பும் 18ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2012ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. போஸ்கோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம். இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகவு் உள்ளது. கூடவே அபராதமும் விதிக்கப்படும். போஸ்கோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6ன் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு. போஸ்கோ சட்டப்பிரிவு 7 மற்றும் 8ன்படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் தீண்டல்கள் செய்வது, குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.
போஸ்கோ சட்டப்பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு. போஸ்கோ சட்டப்பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது,. தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லுது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். போஸ்கோ சட்டப்பிரிவு 13 மற்றும் 14 ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். இது இணைய தளம், கணினி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபடட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். போஸ்கோ சட்டப்பிரிவு 18்ன் படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படு்ம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருத்தத்தை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்து மைனர் சொத்தை கோர்ட் அனுமதி இல்லாமல் விற்கலாமா…? மைனர் சொத்துக்களை அவரின் இயற்கை கார்டியன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அது மைனரின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்றும், இந்து மைனாரிட்டி மற்றும் கார்டியன்ஷிப் ஆக்ட் 1956ன் பிரிவு 8ல் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் அசையாச் சொத்துக்களை கோர்ட் அனுமதியில்லாமல் விற்க முடியாது என்றும் சொல்லி உள்ளது, அவ்வாறு கோர்ட் அனுமதி கொடுக்கும் போது, அந்த விற்பனையானது மைனரின் அவசியத்துக்காக விற்கப்பட்டால் மட்டுமே கோர்ட் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கோர்ட் அனுமதியைப் பெறாமல் மைனரின் சொத்தை, தகப்பனார் கார்டியனாக இருந்து விற்நு இருந்தால் அந்த கிரயத்தை அந்த மைனர் 18 வயது முடிந்து மேஜர் வயதை அடைந்தவுடன் அதிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அந்த கிரயத்தை செல்லாது என கோர்ட் மூலம் தீர்ப்பு வாங்கலாம். அதில் மைனரின் நன்மைக்காக இந்த சொத்து விற்கப்படவில்லை என்று கூறித்தான் தீர்ப்பை வாங்க முடியும். அவ்வாறான வழக்குகளை அந்த மைனர் 18 வயது முடிந்து மூன்று வருடங்களுக்குள் அதாவது அவரின் 21 வயதுக்குள் வழக்கு போட்டு விட வேண்டும். இதற்குப்பின் அதாவது 21 வயது முடிந்தவுடன் அப்படி ஒரு வழக்கை போட முடியாது என லிமிடேசன் சட்டம் பிரிவு 60ல் சொல்லப்பட்டுள்ளது. (வுரந டுiஅவையவழைn யுஉவ ளுநஉவழைn 60) பல மைனர்கள் இருந்து, அவர்கள் எல்லோரும் கார்டியனின் மைனர் சொத்தின் கிரயத்தை ரத்து செய்ய Nவுண்டிய நிலை இருந்தால், இது கூட்டாக வழக்குப்போடும் நிலை. இதில் மூத்த மைனருக்கு 21 வயதுக்கு மேல் ஆகிவிட்டிருந்தால் அவர் வழக்கு போட முடியாது. ஆனால் இளைய மைனருக்கு 21 வயதுக்கு கீழே இருந்தால் அவர் தனியே தன் பாகத்துக்கு வழக்கை போடலாம் என்றும், கூட்டுகுடும்ப சொத்துக்களில் மூத்த மைனர் கர்த்தாவாக இருக்க வேண்டி இருந்தால், அவருக்கு 21 வயது முடிந்தவுடனேயே இளைய மைனர்களுக்கு அவ்வாறு 21 வயது வரவில்லை என்றாலும் எந்லோருமே வழக்குப் போடும் உரிமையை இழந்துவிடுவர் என விமிடேஷன் சட்டம் பிரிவு 7ல் சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் கூட்டுக்குடும்பச் சொத்தில் கர்த்தாவின் (மேனேஜரின்) உரிமை பறிபோய் விட்டால், ஜூனியர் மெம்பர்களின் உரிமையும் கூடவே பறிபோய்விடும் என்று இந்த விதி கூறுகிறது. ஏனென்றால் இது ஒரு கூட்டான உரிமையாகும். ஒரு மனிதனுடைய வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் சட்ட நெறிமுறைகளின் படி அல்லாமல் வேறு எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று “ஜோலி ஜார்ஜ் வர்க்கீஸ; Vs பேங்க ஆஃப் கொச்சின் (1980-AIR-470)” என்ற வழக்கில் தீர்ப்பாக கூறப்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்யும் நடவடிக்கை நியாயமானதாகவும், காரணம் கூடியதாகவும், சட்டப்படியும் இருக்க வேண்டும். ஒரு தீர்ப்புக் கடனாளியை கைது செய்து சிறைக்கு அனுப்புவதற்கு முன்பாக, அந்த தீர்ப்புக் கடனாளிக்கு, தீர்ப்புத் தொகையை செலுத்தும் அளவிற்கு போதுமான வசதி இருந்தும், அவர் வேண்டுமென்றே பணத்தை செலுத்தவில்லை என்ற முடிவுக்கு நிறைவேற்றுதல் நீதிமன்றம் வர வேண்டும். எனவே தீர்ப்புக் கடனாளிக்கு போதிய வருவாய் உள்ளது என்பதை தீர்ப்பை பெற்றவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதன்பிறகு தான் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 55ல் கைது மற்றும் சிறையில் அடைத்து வைத்தல் பற்றி கூறப்பட்டுள்ளது. ஒரு தீர்ப்புக் கடனாளி தன்னை நொடிப்பு நிலையராக அறிவிக்க கோரி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புவதாக நிறைவேற்றுதல் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 55(4) ல் கூறப்பட்டுள்ளது. அண்ணாதுரை தன்னை நொடிப்பு நிலையராக அறிவிக்க கோரி நீதிமன்றத்திவ் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ளதால், நிறைவேற்றுதல் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிறப்பித்த உத்தரவு சட்டப்படி தவறான உத்தரவாகும். எனவே நிறைவேற்றுதல் நீதிமன்றம் அண்ணாதுரையை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். CRP.NO – 1333/2015 DT-27.8.2015 அண்ணாதுரை Vs சுப்புராஜ் 2015-5--LW-131
குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 125(3) படி. ஜீவனாம்ச பாக்கிக்காக கணவரை விசாரணை நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த சட்ட பிரிவுப்படி, ஒரு மாத சிறை தண்டனை மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட முடியும். அதன் பிறகு, மனைவி தனி மனு போட்டு, அதன் பேரில் நீதிமன்றம் உத்தரவிட முடியும். நீதிமன்றம், கணவரை சிறையில் அடைக்க உத்தரவிடும் முன், 2 சூழலை ஆராய வேண்டும். 1. கணவர், வேண்டுமென்றே எந்த வித நியாயமான காரணம் இல்லாமல், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. 2. ஜீவனாம்ச பாக்கிக்கு வாரன்ட் கொடுத்து வாய்ப்பளிப்பது. அதன் பிறகும், கணவர் பாக்கி வைத்திருந்தால், ஒரு மாத சிறை தண்டனை கொடுக்கலாம். அதாவது வாரன்ட் அனுப்பி, கணவர் வசம் கேட்டு, பாக்கி ஏதும் இல்லாவிட்டால், தண்டனை கொடுக்க தேவை இல்லை. பாக்கி இருந்தால், ஒரு மாத சிறை தண்டனை வழங்கலாம். Citations: 1. 1999 (5) SCC 672 2. 2000 (1) PLJR 578 உரிமையியல் வழக்கில், ஜெராக்ஸ் காப்பியை, சான்று ஆவணமாக குறியீடு செய்ய முடியுமா? நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அசல் ஆவணங்களின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும், புகைப்பட நகல்கள் பொதுவாக அசல் ஆவணங்களோடு ஒத்துப்போவதில்லை என்றும் கீழ்கண்ட வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது. சிறப்பு வட்டாட்சியர், பொன்னேரி வட்டம் Vs K. லீலம்மாள் மற்றும் பலர் (2000-1-LW-402) தமிழ்நாடு இண்டீஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் Vs N. சுவாமிநாதன் மற்றும் பலர் (2002-4-MLJ-147) மீனாட்சியம்மாள் மற்றும் பலர் Vs கோபால கிருஷ்ணன் மற்றும் பலர் (2004-3-CTC-481) பொன்னம்பலம் Vs பிச்சை (2008-2-LW-809) அதேபோல் உச்சநீதிமன்றம் “ஷாலிகமார் கெமிக்கல்ஸ் குவார்ட்ஸ் விமிடெட; Vs சுரேந்திரா ஆயில் அண்ட் டால் மிக்ஸ்” என்ற வழக்கில் பதிவுச் சான்றிதழின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு பிரதிவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விசாரணை நீதிமன்றம் அந்தப் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. எனவே ஓர் உரிமையியல் வழக்கில் ஓர் ஆவணத்தின் ஜெராக்ஸ் காப்பியை சான்றாவணமாக குறியீடு செய்வதற்கு மறுதரப்பினர் எந்தவிதமான ஆட்சேபனையையும் முன்வைக்கவில்லை என்றாலும்கூட அந்த ஜெராக்ஸ் காப்பியை சான்றாவணமாக குறியீடு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRP.NO – 1963/2013 DT – 1.6.2017 அவனி Vs சோமசுந்தரம் மற்றும் பலர் 2017-3-TNCJ-241
மோட்டர் வாகனச் சட்டம் தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டார் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் தெரிந்திருக்க வேண்டும். இதோ உங்களுக்காக….. 1. உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது பிரிவு 180ன்படி குற்றம் 2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் பிரிவு 181ன்படி குற்றம் 3. உரிமம் சார்ந்த குற்றங்கள், ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் - பிரிவு 182 (1) ன்படி குற்றம் 4. அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் பிரிவு 183(1)ன்படி குற்றம் 5. மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் முதலானவை (ஓட்டுவதற்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல்) பிரிவு 183 (2)ன்படி குற்றம் 6. அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184 ரூ.1000 அபராதம் மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல்; CMV R21(25) பிரிவு 177 - ரூ.100 அபராதம் 7. குடிப்போதையில் வண்டி ஓட்டுதல் பிரிவு 185 மற்றும் கைது மற்றும் வழக்கு 8. மனநிலை, உடல்நிலை சரியில்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் - பிரிவு 186 - ரூ.200 அபராதம் 9. போட்டி போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுதல், வாகனசோதனை மேற்கொள்ளுதல் பிரிவு 189 - ரூ.500 அபராதம் 10. அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது பிரிவு 190(2) - ரூ.50 அபராதம் 11. அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் பிரிவு 190(2) -ரூ.50 அபராதம். 12. காற்று ஒவிப்பான், பல்லிசை ஒலிப்பான் பிரிவு 190(2)ன்படி குற்றம் 13. பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் பிரிவு 192ன் படி குற்றம் 14. அனுமதிக்கபட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் பிரிவு 194ன்படி குற்றம் 15. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்; (uninsured) பிரிவு 196ன் படி குற்றம் 16. வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் - பிரிவு 198ன் படி குற்றம் 17. போக்குவரத்திற்கு இடையூர் செய்தல் - பிரிவு 201ன்படி குற்றம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ம் தேதியன்று, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள உறுதிமொழி: இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காம வகையில் கவனமுடன் நடந்த கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.
கடன்பெறும் போது கடன் தொகையை குறி்ப்பிடாமல் பத்திரம் அல்லது புரொ நோட் எழுதிக் கொடுப்பது. தேதி மற்றும் தொகை குறிப்பிடாமல் கொடுக்கப்படும் காசோலை பிரச்சனையை உருவாக்கும்.
தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண் 4423452365 & 1091 திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம். இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-iதொடர்புகொள்ளலாம். குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ, கல்லூரியிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568 என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்வதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.
மனாPதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044-26530504, 044-26530599 என்கிற எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள் கொண்டு நிறுவனத்தின் எண். மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392, 9171313424 என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத் தாய் என்றால் என்ன? அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன என்பனவற்றை அறியலாம்.
ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான 044-25353999, 90031 61710, 99625 00500 எண்களைத் தொடர்பு கொள்ளலாம். சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும், உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும். ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் 044-24749002 மற்றும் 044-26744445 என்கிற எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான டோல்ஃப்ரீ எண் 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044-28592828 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்:டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். ஆண்களுக்குச் சமமமாக பெண்களும் பணியிடங்களில் அதிகாரம் பெற்றுத் திகழும் இந்நாட்களில் பெண்கள், பெண்குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது குறித்த சில ஆலோசனைகள் இவை… 1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில், பேருந்தில் ஏறாதீர்கள். நிறைய ஆட்கள், நபர்கள், பெண்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்.. 2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள். எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்…. (அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்) 3. பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்… 4. இரவில் வீதியல் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்டபடி நடங்கள். அதற்காக திரு திருவென முழிக்கக் கூடாது. பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள். தொலைபேசியை பையில் வைத்துவிட்டு ஹெட்போனில் பேசுங்கள். 5. கேலி, கிண்டல் செய்யும் ஆண்களை அந்த நேரத்தில் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள். நீங்கள் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக் கட்டுங்கள்… 6. கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள். வேண்டியவர்களே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள். 7. மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரையும் பார்த்து எதையும் செய்யாதீர்கள்… 8. உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது. நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்.. 9. மாணவ மாணவிகள் தங்கள் மீது பாலியல் ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய தகவல்களை பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். 10. பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்க வேண்டும். 11. அதிக அளவிலான பாலியல் குற்றங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளின் அக்கறையால் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பெற்றோரை விட குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவது ஆசிரியர்களிடம் தான். எனவே தங்கள் மாணவிகள் மேல் அதிகம் அக்கறை கொண்ட ஆசிரியைகள் அவர்களின் சிறு மாற்றத்தைக் கூட கவனித்து ஆறுதலுடன் பேசுகிறார்கள். அப்படித்தான் பல குற்றங்கள் வெளி வந்து இருக்கின்றன. இதற்கு உறுதுணையாக இருப்பது சைல்டு லைன் என்கிற குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைன் 1098 என்ற எண்ணில் இலவச தொலைபேசி சேவையுடன் இந்த அமைப்பு இயங்குகிறது. பள்ளிக்கூட ஆசிரியைகள் சைல்டுலைன் அமைப்பை தொடர்பு கொண்டு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சைல்டுலைன் அமைப்பு பார்த்துக்கொள்ளும். மகளிர் போலீஸ் நிலையங்கள் இந்த விஷயத்தில் மிகப்பெரிய பொறுப்புடன் திகழ்கின்றன. போக்சோ சட்டம் என்றாலே உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விடும்.
1971ம் ஆண்டு மருத்துவாPதியான கருக்கலைப்பு சட்டத்தை இந்தியா கொண்டு வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் இந்திய கிரிமினல் சட்டப்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாகக் கருதப்பட்டு மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை, அபராதம் வழங்கப்பட்ட வந்தது. ஜனவரி 29, 2020 அன்று மத்திய அரசு, கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை, ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதால் அளித்துள்ளது. பெண்களுக்கு தங்கள் விருப்பப்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் இனப்பெருக்கம் சார்ந்த சுதந்திரத்தை இந்தச் சட்டம் அளிக்கும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இதே மத்திய அரசு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் அபார்ஷன் செய்யும் உச்சவரம்பை கூட்டுமாறு வந்த வழக்கில் பதிலளிக்கும் முகமாக, ‘நாட்டில் பிறக்க இருக்கும் ஒவ்வோர் உயிரையும் காப்பாற்றும் கடமை அந்த நாட்டின் அரசுக்கு உண்டு. எனவே, உயிருடன் வாழத் தகுதியான சிசுவை அபார்ஷன் செய்ய அனுமதிக்க இயலாது’ என்றது. இருப்பினும் கடந்த நான்கு மாதங்களில் மகப்பேறு நல மருத்துவர்கள், சமூக நலப்பணியாளர்கள், மகளிர் இயக்கங்கள் போன்றோரிிடம் கருத்துகள் கேட்கப்பட்டு இந்தச் சட்டத்தை முன்மொழிந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் மருத்துவக் கருக்கலைப்பு திருத்தச் சட்டம் (2020) என்பது, இதுவரை 1971லிருந்து வழக்கில் இருந்துவந்த மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தை மாற்றி, வரும் பாராளுமன்றக் கூட்டத்தில் முறைப்படி சட்டமாக இயற்றப்படலாம்.
இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கிறது என நீங்கள் நினைத்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். நன்றி M.P. MURUGAN, SUBORDINATE JUDGE, DEVAKOTTAI |
||||||||
by Lakshmi G on 20 Nov 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|