இறந்தவர்களின் வீடுகளில் பிணம் வீட்டிற்குள் இருக்கும் போது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு மார்பில் அடித்துக் கொண்டே பாடப்படுவதால் இதற்கு மாரடிப்பாட்டு எனப் பெயர் பெற்றது. இதற்கென்றே கூலிக்கு மாரடிக்கும் கலைஞர்கள் உள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சாந்தவர்களாலும், மிகவும் வறுமை நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இதில் பங்கேற்பர். பெரும்பாலும் வயதானவர்கள் இறந்தாலே மாரடிப்பாட்டு பாடப்படுகிறது. கிராமங்களிலும், நகரங்களிலும் பாடப்படுகிறது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவே இப்பாடல் பாடப்படுகிறது.
|