LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- சுஜாதா

என் முதல் தொலைக்காட்சி அனுபவம்!

 

கதை ஆசிரியர்: சுஜாதா.
ஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில் ‘தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்’ என்று அடி வரியில் இருந்தது. நான் அப்போது எம்.ஐ.டி’யில் எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு மூன்றாம் ஆண்டு கடைசி செமஸ்டரில் ப்ராஜெக்ட் படலத்தில் ஜாலியாக இருந்தேன்.
ரங்கு கடையில் இதுபற்றித் தீவிர சர்ச்சை நடந்தது. ‘‘இண்டியாவிலேயே டெலிவிஷன் கெடையாது. எப்டிரா ஸ்ரீரங்கத்தில் மட்டும் வரும்?’’
‘‘வரும்ங்கறாரே! அண்ணாசாமி சொல்றார்… அமெரிக்காவில் காட்டறது நமக்கும் தெரியறதாம்.’’
‘‘புளுகுடா. நீ என்னடா சொல்றே… எலெக்ட்ரானிக்ஸ் படிச்சிருக்கியே?’’
‘‘சான்ஸே இல்லை!’’ என்றேன்.
‘‘அவர் வந்தா கேட்டுருவமே.
பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காராமே… ஆள் எப்படி?’’
‘‘சுமார் முப்பது வயசிருக்கும். லேசா தொந்தி முன்&னற்க வழுக்கை. சம்பா சம்பான்னு ஒரு பொண்ணு. சித்துப் பண்ணி வெச்சாப்பல இருக்குமே, நீங்கள்ளாம் பயங்கரமா சைட் அடிச்சிண்டிருந்தீங்களே… அவளைக் கல்யாணம் பண்ணிண்டிருக்கார்’’ என்றான் ரங்கு.’’
‘‘அமெரிக்கால படிச்சிருக்காராம். அதனால வயசு வித்தி யாசம் ஜாஸ்தியா இருந்தாலும் ஒத்துண்டிருக்கா.’’
‘‘இதைவிட அநியாயம் உண்டா ரங்கு?’’ என்று தம்பு ஆத்துப் போனான். தம்பு ஒரு காலத்தில் சம்பாவைக் காதலித்தவன்.
ஒரு முறை தெற்கு வாசலுக்கு கோயில் வழியாகப் போகாமல் தெற்கு உத்தர வீதி வழியாகச் சென்றபோது, அந்த போர்டைப் பார்த்தேன். வாசலில் பையன்கள் கோடுகிழித்து வீதி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந் தார்கள். பெரிய திண்ணையுள்ள அகலமான வீடு. போர்டு புதுசாக எழுதியிருந்தது. அதை வெளிச்சம் காட்ட பல்பெல் லாம் இருந்தது. நெற்றியில் எலுமிச்சை > பச்சைமிளகாய் வைத்துக் கட்டியிருந்தது.
‘‘அது என்னடா ஸி அண்ட் ஜி? ஓமியோபதியா?’’ என்றான் ரங்கு.
‘‘இல்லை ரங்கு. சிட்டி அண்ட் கில்ட்ஸ்னு லண்டன்ல ஒரு இன்ஸ்டிடியூட் நடத்தற பரீட்சை. ஏ.எம்.ஐ.இ. மாதிரி இதும் ஒரு பரீட்சை. பாஸ் பண்ணியிருக்கலாம்.’’
‘‘அதில் டெலிவிஷன் எல்லாம் கத்துத் தருவாளோ?’’
‘‘இருக்கலாம். அதனால அப்படி போர்டு போட்டுண்டு இருக்கலாம். ஆனா, ஸ்ரீரங்கத்தில் டெலிவிஷன் கிடையாது; தெரியாது!’’
அவரே ரங்கு கடைக்கு ஒருமுறை வந்திருந்தார். ‘‘ரங்கு, இன்சுலேஷன் டேப் இருக்குமா?’’
‘‘இல்லை. அது கறுப்பா சேப்பான்னு கூட தெரியாது!’’
‘‘கறுப்பு. இதெல்லாம் கடைன்னா வாங்கி வெச்சுக் கணும்.’’
‘‘எப்படி இருக்கும்?’’
‘‘தொட்டா ஒரு பக்கம் ஒட்டிக்கிறா மாதிரி இருக்கும். ஒயருக்கு கனெக்ஷன் கொடுக்கறப்ப, ஷாக் அடிக்காம இருக்க டேப் சுத்தணும்.’’
ரங்கு தன் தொழில்நுட்ப அறிவை அதற்குமேல் விருத்தி செய்ய விரும்பவில்லை.
‘‘அண்ணாசாமி… என்னமோ சொல்றா, உங்காத்தில டி.வி>யெல்லாம் இருக்காமே?’’
‘‘ஒரு தடவை வந்து பாரேன்…’’
‘‘நான் எங்க கடையை விட்டுட்டு வரது!’’
‘‘ஆமா, வியாபாரம் அப்படியே தட்டுக்கெட்டுப் போறது. ஈ ஓட்டிண்டிருக்கான். போய்ப் பார்த்துட்டுத்தான் வரலாமே!’’ என்றான் தம்பு. அவனுக்கு சம்பாவை பார்க்க வேண்டும்.
‘‘சம்பா சௌக்கியமா மாமா?’’
‘‘டேய்! மாமா இல்லைடா அவர். சரி அண்ணா வரேன். அதென்னதான் சமாசாரம்னு புரியறா மாதிரி சொல்லும். என்னவோ பேசிக்கிறா… அம்மணக்குண்டி பொம்மையெல்லாம் தெரியறதாம்!’’
‘‘சேச்சே… அதெல்லாம் இல்லை!’’
‘‘பின்ன என்னதான் வெச்சிருக்கீர்?’’
‘‘எதிர்காலத்தில இண்டியா வுக்கு டெலிவிஷன் வரத்�
��ான் போறது. இப்பவே டெல்லில பரீட்சார்த்தமா ஆரம்பிச்சிருக்கா. அது நாடு முழுக்கப் பரவினதும் டி.வி. ரிப்பேர் செய்ய நெறைய பேர் தேவைப்படுவா. அதை எதிர் கொள்ள நம் இளைஞர்களைத் தயார் பண்ணப் போறேன். இப்பவே சேந்தா சலுகைல கத்துத் தருவேன்.’’
‘‘எத்தனை?’’ என்றான் ரங்கு.
‘‘அவாவா வசதிக்கு ஏத்தாப்பல.’’
‘‘இதா&ன வேணாங்கறது. சில்றை எத்தனை… கரெக்டா சொல்லுமேன்.’’
‘‘ஏழையா இருந்தா இலவசமா கூட சொல்லித் தருவேன். முதல் பாடம் ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் டெலிவிஷன், எல்லாருக்கும் இலவசம்!’’
‘‘பொம்மை தெரியுமா?’’
‘‘கட்டாயம்.’’
ரங்கு என்னைப் பார்த்தான். ‘‘நான்கூட சேரலாம் போலி ருக்கே. தம்பு சேர்றியா?’’
‘‘ஒரு நாள் போய்த்தான் பார்க்கணும்டா!’’ என்றான். ‘‘உன்னைக் கேட்டா டி.வி. கிடையாதுங்கறே?’’
எம்.ஐ.டி>யில் மூன்றாம் வருஷத்தில் எனக்கு பாடத்தில் டி.வி. உண்டு. அது வி.எச்.எஃப். அலைவரிசையைப் பயன்படுத்துவதும் லைன்ஆஃப் சைட் பற்றியும் படித்திருக்கிறேன். அதை ரங்குவுக்கு விவரிக்க முற்பட்டேன்.
‘‘எல்லாம் சரி. நீ நிஜ டி.வி. பார்த்திருக்கியா?’’
நிஜ டி.வி-யை ஒரு தடவைதான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாக் கண்காட்சியின்போது பிலிப்ஸ்காரர்கள் கிண்டி இன்ஜினீயரிங் காலேஜில் ஒரு க்ளோஸ் சர்க்யூட் டி.வி. வைத்திருந்தார்கள். ஒரு ரூமில் காமிரா, மறு ரூமில் ரிசீவர் வைத்திருந் தார்கள். வந்திருந்த பெண்களையெல் லாம் காட்டினார்கள். கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரம் காத்திருந்ததால் திடுக்கிட்ட முகங்கள் தெரிந்தன.
ரங்குவுடன் தெற்கு உத்தர வீதிக்கு ஒரு நாள் சாயங்காலம் போயிருந்தேன். வாசலில் தெற்குச் சித்திரை வீதியுடன் பென்சில் மாட்ச் ஓடிக் கொண்டிருந் தது. நாங்கள் போனபோது பால்காரன் வந்து மடியில் தண்ணியடித்து பால் கறப்பதற்காக உருவிக் கொண்டிருந் தான். இடைவேளை விட்டிருந்தார்கள்.
அண்ணாசாமி, ‘‘வாங்க வாங்க… சம்பா காபி போடு!’’ என்று வரவேற் றார். உத்தர வீதிக்கு சாதாரணமாக நாங்கள் அதிகம் போகமாட்டோம். அவை எல்லாம் எங்களுக்கு அரைவீதிகள். ஒரு பக்கம்தான் வீடு. எதிர்ப்பக்கம் கோயிலின் மதில். முள்ளுச் செடியாக இருக்கும். எத்தனைதான் சொன்னாலும் யாராவது ஒருவர் அல்பசங்க்யைக்கு ஒதுங்கிவிடுவார்கள். மேலும் அந்த நாட்களில் மதில் சிதில நிலையில் இருந்ததால், தலைமேல் விழுந்துவிடும் பயமும் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டுக்கு ஒரு சாரி இல்லாததால் ஏகாந்தமான இடம்.
‘‘மாமா மண்டி போட்டுண்டு க்ளான்ஸ் பண்றப்ப மார்ல பட்டா எல்.பி. கொடுக்கலாமா மாமா?’’ என்று என்னை ஒரு சிறுவன் வந்து கேட்டான்.
எனக்கு உட&ன சொல்லத் தெரிய வில்லை. அண்ணா, ‘‘வாங்க வாங்க’’ என்று வரவேற்று, சலுகையாக பனியன் போட்டுக் கொண்டார். உள்ளே சென்றோம்.
‘‘ஈயம் பூசறீங்களா என்ன?’’
‘‘இல்லை சால்டிரிங்’’ என்றார்.
ஒரு ரேடியோ கவிழ்த்துப் பிரிக்கப்பட்டு, உள்ளே கசகச வென்று பார்ட்டுகளுடன் கிடந்தது. அதன் ஐ.எஃப். டிரான்ஸ்ஃபார்மரை ஒரு குட்டிப் பையன் பலகை மேல் நின்று சீண்டிக் கொண்டிருந் தான்.
என்னவோ சத்தங்கள் கேட்டன.
இந்த ஓரத்தில் நிர்வாணமாக ஒரு ஸ்பீக்கர் வைத்து, ரேடியோவின் பல பாகங்கள் பரவலாக இருக்க… விந்தையாக அதில் கரகரப்ரியாவில் ஒரு மாமி ‘பக்கல நிலபடி’ பாடிக் கொண்டிருந்தாள். ‘ஆர்.எஃப். ஆம்ப்ளிஃபையர்’ வெச்சா எல்லா ஸ்டேஷனும் கேக்கும்!’’ என்றார் அண்ணா.
‘‘எங்கய்யா உம் டெலி விஷன்?’’
ஜமக்காளத்தால் மூடியிருந்த ஒரு வஸ்துவைக் காட்டினார். ‘‘அதுக்குள்ள இருக்கு. பசங்க கிரிக்கெட் ஆடிண்டிருக்கான்… முடிக்கட்டும். பந்து அடிச்சா பிக்சர் டியூபு உடைஞ்சுடும்!’’
‘‘அதுல பொம்மை தெரிய�
��மா?’’ என்றான் ரங்கு.
‘‘ஆமா.’’
‘‘என்ன புருடா விடறீர்?’’ என்று என்னைப் பார்த்தான். ‘‘ஏய் நீ பொம்மை வராதுன்னுதா&ன சொல்றே?’’
‘‘ஆமா…’’ என்றேன்.
‘‘டி.வி. ஸ்டேஷ&ன இல்லாம எப்டி ஓய் பொம்மை தெரியும்? இப்ப ரேடியோவுக்கு, ரேடியோ ஸ்டேஷன் வேணும். டி.வி-க்கு டி.வி. ஸ்டேஷன் வேணுமா, இல்லையா… நீ என்னடா சொல்றே?’’
‘‘நிச்சயம் வேணும். நான் படிச்சபடி நிச்சயம் வேணும்!’’ என்றேன்.
அண்ணா என்னைப் புன்னகையுடன் பார்த்தார். ‘‘அவ்வளவுதான் நீ படிச்சது. நீங்கள்ளாம் ஏட்டுச்சுரைக் காய். டெர்மன் போட்டிருக் கறதை அப்படியே நெட்ரு. நான் பிராக்டிக்கல். இந்த ரேடியோவைப் பார்த்த இல்லை… இது முழுக்க நா&ன அசெம்பிள் பண்ணது. டிரான்ஸ்ஃபார்மர் நா&ன சுத்தினது. டிராக்கிங், அலைன்மெண்ட், ட்யூனிங் எல்லாம் நான் பண்ணது. உன்னால முடியுமா சொல்லு! எங்கிட்ட ஹாம் லைசென்ஸ் இருக்கு.’’
நான் பிடிவாதமாக, ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.
‘‘அப்டின்னு நினைச்சிண்டிருக்கே. நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்பா.’’
ரங்கு, ‘‘ஓய் அவன் டி.வி. எல்லாம் படிச்சவன். எதுக்கு ஊரை ஏமாத்திண்டு, வாண்டுப் பசங்களுக்கெல்லாம் டி.வி. சொல்லித் தரேன்னு, ஒரொரு கிளாஸ§க்கும் அஞ்சு ரூபா வாங்கறிராமே?’’
‘‘ரங்கு, நான் கொடுக்க வசதியுள்ள வாகிட்டதான் வாங்கறேன். என் கரிகுலம் பாரு முதல்ல. டி.வி. ப்ரின்சிப் பிள். அப்புறம் பிராக்டிக்கல். சால்டரிங், பென்ச் வைஸ், கார்ப்பெண்டரி அப்புறம் காயில் சுத்தறது. பார்க் ரேடியோ, பஞ்சாயத்து ரேடியோவெல் லாம் ரிப்பேருக்கு இங்கதான் வரது.’’
நான் பிடிவாதமாக ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.
‘‘முதல்ல அது என்ன பெட்டி… காட்டும். பார்த்தா நெல்லு கொட்டற பீப்பா மாதிரி இருக்கு.’’
அண்ணாசாமி மிகுந்த கோபத்துடன் ‘‘அரைகுறையா படிச்சவா, சந்தேகப் படறவா, கேலி பண்றவாளுக்கெல்லாம் செட்டை காட்டமாட்டேன். ஒஸ்தி செட்டு இது. ஆர்.ஸி.ஏ. தெரியுமா?’’
‘‘காட்றதுக்கு எதும் இல்லைன்னு அர்த்தம்!’’
‘‘என்னவேணா நினைச்சுக்கோ.’’
சம்பா எல்லோருக்கும் வெள்ளி தம்ளரில் காபி கொண்டுவந்து வைத்தாள்.
தம்பு, ‘‘என்ன சம்பா சௌக்யமா?’’ என்று வாத்சல்யமாக விசாரித்தான். ‘‘பழசெல்லாம் ஞாபகமிருக்கா?’’ அண்ணா அதை ரசிக்கவில்லை.
‘‘சம்பா நீ உள்ளபோ!’’ என்றார்.
சம்பா ஏறக்குறைய அவர் மகள் போல இருந்தாள்.
நாங்கள் வெளிவந்தபோது அந்த எல்.பி.டபிள்யூ. தீர்மானத்தில் மாட்ச் கலைக்கப்பட்டுவிட்டது.
தம்பு ஆத்து ஆத்துப் போனான். ‘‘இந்த சம்பாவுக்கு நான் கொடுத்த லெட்டர் எல்லாம்… அவ போட்ட பதில் எல்லாம் காட்டினா ரசாபாசமாய்டும். போனாப் போறதுன்னு விட்டுக் கொடுத்தேன்’’ என்றான்.
‘‘சும்மார்றா! பழசெல்லாம் கிளறாதே.’’
ஒரு காலத்தில் தம்புதான் சம்பாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக நிறையப் போக்குவரத்தெல்லாம் இருந்தது. அவளுக்கோ இவனுக்கோ செவ்வாய் தோஷம் என்று கல்யாணம் நின்றுவிட்டதாம். மேலும் தம்பு அவ்வளவு வசதி யுள்ளவன் இல்லை. ஒரு வருஷம் சன்யாசியாகப் போகிறதாக யோசித்துவிட்டு ஸ்ரீனிவாச நகரில் ஜெயலக்ஷ¢மி என்ற அடக்கமான பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டான். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். இருந்திருந்தால் என்னைவிட ரெண்டு வயதுதான் மூத்தவன்.
‘‘சில பேருக்கு அதிர்ஷ்டம்டா!’’ என்றான் தம்பு பொதுப்படையாக. டி.வி. சர்ச்சை அத்துடன் ஓயவில்லை. அண்ணாசாமி கடைக்கு வரும்போதெல்லாம் தம்பு அவரைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தான்.
‘‘என்ன அண்ணா… டி.வி. நன்னாத் தெரியறதா? அமெரிக்காகாரன் கப்பல் கார்ல போறதெல்லாம் தெரியறதாமே!’’
அண்ணாசாமி, ‘‘நம்பாத�
��ாளுக்கு ஒண்ணும் தெரியாது. பகவான் மாதிரி அது. என்ன சொன்னாலும் நம்ப வைக்க முடியாது!’’ என்றார்.
‘‘மாடிபூரா ஏரியல் போட்டிருக் கீராமே… துணி உலத்தவா?’’
‘‘ஆமா யாகி அர்ரே. உங்களுக் கெல்லாம் சொன்னா புரியாது!’’ என்று டெக்னாலஜியை முகத்தில் வீசினார்.
அவர்போனதும், ‘‘யாகி அர்ரேன்னா என்னடா? என்ன புருடா விடறான்பாரு மனுஷன்!’’
‘‘இல்லை ரங்கு. அந்த மாதிரி ஒரு அர்ரே இருக்கு. சிக்னல் வீக்கா இருந்தா அதை அதும் பக்கம் திருப்பினா வாங்கிக்கும் > ஏரியல் மாதிரி.’’
‘‘அப்ப அவர் சொன்ன மாதிரி டி.வி. தெரியும்ங்கறே?’’
‘‘சான்ஸே இல்லை! சிக்னல் இருந்தாத்தா&ன?’’
‘‘அமெரிக்காகாரன் அனுப்பறது?’’
‘‘அதெல்லாம் இவ்வளவு தூரம் கடல் தாண்டி வராது ரங்கு’’ என்றேன்.
ஒரு நாள் ராத்திரி பத்தரைக்கு ரங்குகடையில் மூணுபேர் அலமாரிக்குப் பின்னால் ஜிஞ்சர் அடித்துக் கொண்டிருந்தபோது கடைக் கதவை மூடும் சமயம் அண்ணாசாமி சைக்கிளில் வந்து இறங்கி, ‘‘வாங்கடா எல்லாரும்!’’ என்றார்.
‘‘என்ன ஓய் பதற்றமாயிருக்கீர்? ஒரு ஜி.பி. அடிச்சுட்டுப் போமேன்’’ என்றான் தம்பு.
‘‘எல்லாரும் டி.வி. தெரியாது தெரியாதுன்னு பரிகாசம் பண்ணிங் களே… உட&ன வாங்க எங்காத்துக்கு.’’
‘‘என்ன தெரியறதா?’’
‘‘அச்சுக் கொட்டினாப்பல தெரியாது. ஆனா, தெரியறது!’’
‘‘வாடா இன்ஜினீயர்!’’ என்று என்னையும் விளித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘‘திஸ் இஸ் நாட் பாஸிபிள்’’ என்றேன். அவர் வீட்டுக்குப் போனோம். மாடியில் எடுத்துக்கட்டி ஜன்னல் வழியாக சம்பா டார்ச்லைட்டை வைத்துக் கொண்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள் மாடிபூரா பரவியிருந்த அந்த ஏரியலை இவர் சொல்லச் சொல்ல மொத்தமாகத் திருப்பிக் கொண்டிருந்தாள்.
இங்கே கீழே கூடத்தில் ஒரு கறுப்பு > வெள்ளை டி.வி. இருந்தது அதில் மணல் ஓடிக் கொண்டிருந்தது.
‘‘சம்பா டியர்… திருப்பு திருப்பு!’’ என்றார்.
அவள் ‘‘தெரியறதா… தெரியறதா?’’ என்று கேட்டுக்கொண்டே மாடியில் ஏரியலைத் திருப்பினாள். ஒரு கணத்தின் பிரிவில் அந்தத் திரையில் ஒரு பிம்பம் தெரிந்தது. ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பாஷை தெரியவில்லை.
‘‘நிறுத்து… நிறுத்து! அங்கதான் அங்கயேதான்’’ என்று இங்கிருந்து சத்தம் போட்டார்.
‘‘ரங்கு! இப்ப என்ன சொல்றே?’’
‘‘பஜ்னுதான் இருக்கு… ஆனா, மூஞ்சி தெரியறது.’’
‘‘டி.வி>யே வ்தெரியாதுன்னிங்களே… உங்க எக்ஸ்பர்ட் என்ன சொல்றார் இப்ப?’’ என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தார்.
நான், ‘‘இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லை எங்க புரொபசரைத்தான் கேக்கணும்’’ என்றேன்.
‘‘எதையும் இப்படி அலட்சியமா பேசப்படாது. இன்னம் அர்ரே எலிமெண்ட்ஸ் போட்டா நன்னாவே தெரியும். அதும் ராத்திரி ஆக ஆக… போகப் போக…’’
மேலேயிருந்து சம்பா, ‘‘போருமா… இன்னும் திருப்பணுமா?’’ என்றாள்.
‘‘சம்பா, போதும் கீழ வா! எல்லாருக்கும் பயத்தஞ்கஞ்சி கொடு’’ என்று இவர் சொல்ல, மேலேயிருந்து தொபுக்கடீர் சப்தமும் ஐயோ சத்தமும் கேட்டது.
சம்பா எடுத்துக்கட்டிலிருந்து சுமார் பதினைந்து அடி விழுந்துவிட்டாள்.
அவளை கைத்தாங்கலாக நொண்டிக்கொண்டே அழைத்து வந்தோம். ‘‘பார்த்து நடக்கக்கூடாதோ?’’ என்றார். அவள் கால் சிவப்பாக இருந் தது. செமையாக வீங்கியிருந்தது. நிறைய வலித்திருக்கவேண்டும். தம்பு கண்ணீர் விட்டான்.
‘‘என்ன ஓய்… எங்க ஊர் பொண்ண மாடியெல்லாம் ஏறவிட்டு பாடாப் படுத்தறீர். கொடுமைப் படுத்தறீர்!’’
‘‘உனக்கு என்னடா ஆச்சு?’’ என்றார்.
‘‘என்ன ‘டா’வா? நாக்கை அடக்கிப் பேசும். எல்லா வண்டவாளத்தையும் வெளிலவிட்டா நாறிப்போய்டும்.’’
‘‘என்ன வண்டவாளம்…
அவ என் பெண்டாட்டி. அவளை நான் என்ன வேணா செய்யச் சொல்வன். அதைக் கேக்க நீ யாரு?’’
சம்பா, ‘‘போருமே… போருமே…’’ என்றாள்.
‘‘நான் யார்றா? ரங்கு… சொல்றா நான் யாருன்னு!’’
‘‘தம்பு நீ வாடா! அப்றம் பேசலாம்.’’
‘‘இவர் கேக்கறதைப் பாரு! நான் யாரா…’’ தம்பு, ரங்கு கடையில் ஜிஞ்சர்பரிஸ் போட்டிருந்தான். சுருதி ஏறியிருந்தான். நாக்கு தொளதொளத்து விட்டது.
‘‘நான் யாரு… சொல்றன். இதே சம்பா, இதேசம்பா… எனக்கு மொத்தம் எத்தனை லெட்டர் எழுதிருக்கா தெரியுமா? காட்டட்டுமா… நான் எத்தனை எழுதிருக்கேன் தெரியுமா?’’
அந்தக் கணத்தில் காலம் நின்று போகப் போகிறது என்றுதான் நான் எதிர்பார்த்தேன். இல்லை!
‘‘எல்லா பைத்தியக்கார லெட்டரை யும் சம்பா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டா… காட்டிட்டா… போடா!’’ என்றார்.
கடைசி செமஸ்டருக்கு எம்.ஐ.டி>க்கு சென்னைக்கு திரும்ப வந்தபோது பேராசிரியர் சோமயாஜுலுவை சந்தேகம் கேட்டேன். ஸ்ரீரங்கத்தில் அன்றிரவு டி.வி. தெரிந்தது எப்படி என்று கேட்டேன்.
அவர், ‘‘அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. டக்ட் (க்ஷயுஷபீ) ப்ராபகேஷன் என்று சில வேளை கடலின் இன்வர்ஷன் லேயர் இருக்கும்போது வேவ்கைடு மாதிரி ஃபார்ம் ஆகும் வி.எச்.எஃப். சிக்னல்கள் ஆயிரக் கணக்கான மைல்கள் கூட கடந்து வரும். அனாமலஸ் ப்ராப கேஷன் என்பார்கள். நீ பார்த்தது தெற்காசிய நாடுகளில் எதாவது ஒரு டி.வி>யாக இருக்கலாம்’’ என்றார்.
ரங்கு இப்போதும் அதை ரங்கநாதன் கிருபை என்றுதான் சொல்கிறான்.

          ஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில் ‘தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்’ என்று அடி வரியில் இருந்தது. நான் அப்போது எம்.ஐ.டி’யில் எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு மூன்றாம் ஆண்டு கடைசி செமஸ்டரில் ப்ராஜெக்ட் படலத்தில் ஜாலியாக இருந்தேன்.ரங்கு கடையில் இதுபற்றித் தீவிர சர்ச்சை நடந்தது. ‘‘இண்டியாவிலேயே டெலிவிஷன் கெடையாது. எப்டிரா ஸ்ரீரங்கத்தில் மட்டும் வரும்?’’‘‘வரும்ங்கறாரே! அண்ணாசாமி சொல்றார்… அமெரிக்காவில் காட்டறது நமக்கும் தெரியறதாம்.’’‘‘புளுகுடா. நீ என்னடா சொல்றே… எலெக்ட்ரானிக்ஸ் படிச்சிருக்கியே?’’‘‘சான்ஸே இல்லை!’’ என்றேன்.‘‘அவர் வந்தா கேட்டுருவமே.பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காராமே… ஆள் எப்படி?’’‘‘சுமார் முப்பது வயசிருக்கும். லேசா தொந்தி முன்&னற்க வழுக்கை. சம்பா சம்பான்னு ஒரு பொண்ணு.

 

         சித்துப் பண்ணி வெச்சாப்பல இருக்குமே, நீங்கள்ளாம் பயங்கரமா சைட் அடிச்சிண்டிருந்தீங்களே… அவளைக் கல்யாணம் பண்ணிண்டிருக்கார்’’ என்றான் ரங்கு.’’‘‘அமெரிக்கால படிச்சிருக்காராம். அதனால வயசு வித்தி யாசம் ஜாஸ்தியா இருந்தாலும் ஒத்துண்டிருக்கா.’’‘‘இதைவிட அநியாயம் உண்டா ரங்கு?’’ என்று தம்பு ஆத்துப் போனான். தம்பு ஒரு காலத்தில் சம்பாவைக் காதலித்தவன்.ஒரு முறை தெற்கு வாசலுக்கு கோயில் வழியாகப் போகாமல் தெற்கு உத்தர வீதி வழியாகச் சென்றபோது, அந்த போர்டைப் பார்த்தேன். வாசலில் பையன்கள் கோடுகிழித்து வீதி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந் தார்கள். பெரிய திண்ணையுள்ள அகலமான வீடு. போர்டு புதுசாக எழுதியிருந்தது. அதை வெளிச்சம் காட்ட பல்பெல் லாம் இருந்தது. நெற்றியில் எலுமிச்சை > பச்சைமிளகாய் வைத்துக் கட்டியிருந்தது.‘‘அது என்னடா ஸி அண்ட் ஜி? ஓமியோபதியா?’’ என்றான் ரங்கு.‘‘இல்லை ரங்கு. சிட்டி அண்ட் கில்ட்ஸ்னு லண்டன்ல ஒரு இன்ஸ்டிடியூட் நடத்தற பரீட்சை. ஏ.எம்.ஐ.இ. மாதிரி இதும் ஒரு பரீட்சை. பாஸ் பண்ணியிருக்கலாம்.’’‘‘அதில் டெலிவிஷன் எல்லாம் கத்துத் தருவாளோ?’’‘‘இருக்கலாம். அதனால அப்படி போர்டு போட்டுண்டு இருக்கலாம். ஆனா, ஸ்ரீரங்கத்தில் டெலிவிஷன் கிடையாது; தெரியாது!’’அவரே ரங்கு கடைக்கு ஒருமுறை வந்திருந்தார். ‘‘

 

          ரங்கு, இன்சுலேஷன் டேப் இருக்குமா?’’‘‘இல்லை. அது கறுப்பா சேப்பான்னு கூட தெரியாது!’’‘‘கறுப்பு. இதெல்லாம் கடைன்னா வாங்கி வெச்சுக் கணும்.’’‘‘எப்படி இருக்கும்?’’‘‘தொட்டா ஒரு பக்கம் ஒட்டிக்கிறா மாதிரி இருக்கும். ஒயருக்கு கனெக்ஷன் கொடுக்கறப்ப, ஷாக் அடிக்காம இருக்க டேப் சுத்தணும்.’’ரங்கு தன் தொழில்நுட்ப அறிவை அதற்குமேல் விருத்தி செய்ய விரும்பவில்லை.‘‘அண்ணாசாமி… என்னமோ சொல்றா, உங்காத்தில டி.வி>யெல்லாம் இருக்காமே?’’‘‘ஒரு தடவை வந்து பாரேன்…’’‘‘நான் எங்க கடையை விட்டுட்டு வரது!’’‘‘ஆமா, வியாபாரம் அப்படியே தட்டுக்கெட்டுப் போறது. ஈ ஓட்டிண்டிருக்கான். போய்ப் பார்த்துட்டுத்தான் வரலாமே!’’ என்றான் தம்பு. அவனுக்கு சம்பாவை பார்க்க வேண்டும்.‘‘சம்பா சௌக்கியமா மாமா?’’‘‘டேய்! மாமா இல்லைடா அவர். சரி அண்ணா வரேன். அதென்னதான் சமாசாரம்னு புரியறா மாதிரி சொல்லும். என்னவோ பேசிக்கிறா… அம்மணக்குண்டி பொம்மையெல்லாம் தெரியறதாம்!’’‘‘சேச்சே… அதெல்லாம் இல்லை!’’‘‘பின்ன என்னதான் வெச்சிருக்கீர்?’’‘‘எதிர்காலத்தில இண்டியா வுக்கு டெலிவிஷன் வரத்���ான் போறது. இப்பவே டெல்லில பரீட்சார்த்தமா ஆரம்பிச்சிருக்கா. அது நாடு முழுக்கப் பரவினதும் டி.வி. ரிப்பேர் செய்ய நெறைய பேர் தேவைப்படுவா. அதை எதிர் கொள்ள நம் இளைஞர்களைத் தயார் பண்ணப் போறேன். இப்பவே சேந்தா சலுகைல கத்துத் தருவேன்.’’‘‘எத்தனை?’’ என்றான் ரங்கு.‘‘அவாவா வசதிக்கு ஏத்தாப்பல.’’‘‘இதா&ன வேணாங்கறது. சில்றை எத்தனை… கரெக்டா சொல்லுமேன்.’’‘‘

 

          ஏழையா இருந்தா இலவசமா கூட சொல்லித் தருவேன். முதல் பாடம் ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் டெலிவிஷன், எல்லாருக்கும் இலவசம்!’’‘‘பொம்மை தெரியுமா?’’‘‘கட்டாயம்.’’ரங்கு என்னைப் பார்த்தான். ‘‘நான்கூட சேரலாம் போலி ருக்கே. தம்பு சேர்றியா?’’‘‘ஒரு நாள் போய்த்தான் பார்க்கணும்டா!’’ என்றான். ‘‘உன்னைக் கேட்டா டி.வி. கிடையாதுங்கறே?’’எம்.ஐ.டி>யில் மூன்றாம் வருஷத்தில் எனக்கு பாடத்தில் டி.வி. உண்டு. அது வி.எச்.எஃப். அலைவரிசையைப் பயன்படுத்துவதும் லைன்ஆஃப் சைட் பற்றியும் படித்திருக்கிறேன். அதை ரங்குவுக்கு விவரிக்க முற்பட்டேன்.‘‘எல்லாம் சரி. நீ நிஜ டி.வி. பார்த்திருக்கியா?’’நிஜ டி.வி-யை ஒரு தடவைதான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாக் கண்காட்சியின்போது பிலிப்ஸ்காரர்கள் கிண்டி இன்ஜினீயரிங் காலேஜில் ஒரு க்ளோஸ் சர்க்யூட் டி.வி. வைத்திருந்தார்கள். ஒரு ரூமில் காமிரா, மறு ரூமில் ரிசீவர் வைத்திருந் தார்கள். வந்திருந்த பெண்களையெல் லாம் காட்டினார்கள். கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரம் காத்திருந்ததால் திடுக்கிட்ட முகங்கள் தெரிந்தன.ரங்குவுடன் தெற்கு உத்தர வீதிக்கு ஒரு நாள் சாயங்காலம் போயிருந்தேன். வாசலில் தெற்குச் சித்திரை வீதியுடன் பென்சில் மாட்ச் ஓடிக் கொண்டிருந் தது. நாங்கள் போனபோது பால்காரன் வந்து மடியில் தண்ணியடித்து பால் கறப்பதற்காக உருவிக் கொண்டிருந் தான். இடைவேளை விட்டிருந்தார்கள்.அண்ணாசாமி, ‘‘வாங்க வாங்க… சம்பா காபி போடு!’’ என்று வரவேற் றார். உத்தர வீதிக்கு சாதாரணமாக நாங்கள் அதிகம் போகமாட்டோம். அவை எல்லாம் எங்களுக்கு அரைவீதிகள்.

 

 

             ஒரு பக்கம்தான் வீடு. எதிர்ப்பக்கம் கோயிலின் மதில். முள்ளுச் செடியாக இருக்கும். எத்தனைதான் சொன்னாலும் யாராவது ஒருவர் அல்பசங்க்யைக்கு ஒதுங்கிவிடுவார்கள். மேலும் அந்த நாட்களில் மதில் சிதில நிலையில் இருந்ததால், தலைமேல் விழுந்துவிடும் பயமும் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டுக்கு ஒரு சாரி இல்லாததால் ஏகாந்தமான இடம்.‘‘மாமா மண்டி போட்டுண்டு க்ளான்ஸ் பண்றப்ப மார்ல பட்டா எல்.பி. கொடுக்கலாமா மாமா?’’ என்று என்னை ஒரு சிறுவன் வந்து கேட்டான்.எனக்கு உட&ன சொல்லத் தெரிய வில்லை. அண்ணா, ‘‘வாங்க வாங்க’’ என்று வரவேற்று, சலுகையாக பனியன் போட்டுக் கொண்டார். உள்ளே சென்றோம்.‘‘ஈயம் பூசறீங்களா என்ன?’’‘‘இல்லை சால்டிரிங்’’ என்றார்.ஒரு ரேடியோ கவிழ்த்துப் பிரிக்கப்பட்டு, உள்ளே கசகச வென்று பார்ட்டுகளுடன் கிடந்தது. அதன் ஐ.எஃப். டிரான்ஸ்ஃபார்மரை ஒரு குட்டிப் பையன் பலகை மேல் நின்று சீண்டிக் கொண்டிருந் தான்.என்னவோ சத்தங்கள் கேட்டன.இந்த ஓரத்தில் நிர்வாணமாக ஒரு ஸ்பீக்கர் வைத்து, ரேடியோவின் பல பாகங்கள் பரவலாக இருக்க… விந்தையாக அதில் கரகரப்ரியாவில் ஒரு மாமி ‘பக்கல நிலபடி’ பாடிக் கொண்டிருந்தாள். ‘ஆர்.எஃப். ஆம்ப்ளிஃபையர்’ வெச்சா எல்லா ஸ்டேஷனும் கேக்கும்!’’ என்றார் அண்ணா.‘‘எங்கய்யா உம் டெலி விஷன்?’’ஜமக்காளத்தால் மூடியிருந்த ஒரு வஸ்துவைக் காட்டினார். ‘‘அதுக்குள்ள இருக்கு. பசங்க கிரிக்கெட் ஆடிண்டிருக்கான்… முடிக்கட்டும். பந்து அடிச்சா பிக்சர் டியூபு உடைஞ்சுடும்!’’‘‘அதுல பொம்மை தெரிய���மா?’’ என்றான் ரங்கு.‘‘ஆமா.’’‘‘என்ன புருடா விடறீர்?’’ என்று என்னைப் பார்த்தான். ‘‘ஏய் நீ பொம்மை வராதுன்னுதா&ன சொல்றே?’’‘‘ஆமா…’’ என்றேன்.‘

 

          ‘டி.வி. ஸ்டேஷ&ன இல்லாம எப்டி ஓய் பொம்மை தெரியும்? இப்ப ரேடியோவுக்கு, ரேடியோ ஸ்டேஷன் வேணும். டி.வி-க்கு டி.வி. ஸ்டேஷன் வேணுமா, இல்லையா… நீ என்னடா சொல்றே?’’‘‘நிச்சயம் வேணும். நான் படிச்சபடி நிச்சயம் வேணும்!’’ என்றேன்.அண்ணா என்னைப் புன்னகையுடன் பார்த்தார். ‘‘அவ்வளவுதான் நீ படிச்சது. நீங்கள்ளாம் ஏட்டுச்சுரைக் காய். டெர்மன் போட்டிருக் கறதை அப்படியே நெட்ரு. நான் பிராக்டிக்கல். இந்த ரேடியோவைப் பார்த்த இல்லை… இது முழுக்க நா&ன அசெம்பிள் பண்ணது. டிரான்ஸ்ஃபார்மர் நா&ன சுத்தினது. டிராக்கிங், அலைன்மெண்ட், ட்யூனிங் எல்லாம் நான் பண்ணது. உன்னால முடியுமா சொல்லு! எங்கிட்ட ஹாம் லைசென்ஸ் இருக்கு.’’நான் பிடிவாதமாக, ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.‘‘அப்டின்னு நினைச்சிண்டிருக்கே. நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்பா.’’ரங்கு, ‘‘ஓய் அவன் டி.வி. எல்லாம் படிச்சவன். எதுக்கு ஊரை ஏமாத்திண்டு, வாண்டுப் பசங்களுக்கெல்லாம் டி.வி. சொல்லித் தரேன்னு, ஒரொரு கிளாஸ§க்கும் அஞ்சு ரூபா வாங்கறிராமே?’’‘‘ரங்கு, நான் கொடுக்க வசதியுள்ள வாகிட்டதான் வாங்கறேன். என் கரிகுலம் பாரு முதல்ல. டி.வி. ப்ரின்சிப் பிள். அப்புறம் பிராக்டிக்கல்.

 

          சால்டரிங், பென்ச் வைஸ், கார்ப்பெண்டரி அப்புறம் காயில் சுத்தறது. பார்க் ரேடியோ, பஞ்சாயத்து ரேடியோவெல் லாம் ரிப்பேருக்கு இங்கதான் வரது.’’நான் பிடிவாதமாக ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.‘‘முதல்ல அது என்ன பெட்டி… காட்டும். பார்த்தா நெல்லு கொட்டற பீப்பா மாதிரி இருக்கு.’’அண்ணாசாமி மிகுந்த கோபத்துடன் ‘‘அரைகுறையா படிச்சவா, சந்தேகப் படறவா, கேலி பண்றவாளுக்கெல்லாம் செட்டை காட்டமாட்டேன். ஒஸ்தி செட்டு இது. ஆர்.ஸி.ஏ. தெரியுமா?’’‘‘காட்றதுக்கு எதும் இல்லைன்னு அர்த்தம்!’’‘‘என்னவேணா நினைச்சுக்கோ.’’சம்பா எல்லோருக்கும் வெள்ளி தம்ளரில் காபி கொண்டுவந்து வைத்தாள்.தம்பு, ‘‘என்ன சம்பா சௌக்யமா?’’ என்று வாத்சல்யமாக விசாரித்தான். ‘‘பழசெல்லாம் ஞாபகமிருக்கா?’’ அண்ணா அதை ரசிக்கவில்லை.‘‘சம்பா நீ உள்ளபோ!’’ என்றார்.சம்பா ஏறக்குறைய அவர் மகள் போல இருந்தாள்.நாங்கள் வெளிவந்தபோது அந்த எல்.பி.டபிள்யூ. தீர்மானத்தில் மாட்ச் கலைக்கப்பட்டுவிட்டது.தம்பு ஆத்து ஆத்துப் போனான். ‘‘இந்த சம்பாவுக்கு நான் கொடுத்த லெட்டர் எல்லாம்… அவ போட்ட பதில் எல்லாம் காட்டினா ரசாபாசமாய்டும். போனாப் போறதுன்னு விட்டுக் கொடுத்தேன்’’ என்றான்.‘‘சும்மார்றா! பழசெல்லாம் கிளறாதே.’’ஒரு காலத்தில் தம்புதான் சம்பாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக நிறையப் போக்குவரத்தெல்லாம் இருந்தது. அவளுக்கோ இவனுக்கோ செவ்வாய் தோஷம் என்று கல்யாணம் நின்றுவிட்டதாம். மேலும் தம்பு அவ்வளவு வசதி யுள்ளவன் இல்லை. ஒரு வருஷம் சன்யாசியாகப் போகிறதாக யோசித்துவிட்டு ஸ்ரீனிவாச நகரில் ஜெயலக்ஷ¢மி என்ற அடக்கமான பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டான். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். இருந்திருந்தால் என்னைவிட ரெண்டு வயதுதான் மூத்தவன்.

 

            ‘‘சில பேருக்கு அதிர்ஷ்டம்டா!’’ என்றான் தம்பு பொதுப்படையாக. டி.வி. சர்ச்சை அத்துடன் ஓயவில்லை. அண்ணாசாமி கடைக்கு வரும்போதெல்லாம் தம்பு அவரைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தான்.‘‘என்ன அண்ணா… டி.வி. நன்னாத் தெரியறதா? அமெரிக்காகாரன் கப்பல் கார்ல போறதெல்லாம் தெரியறதாமே!’’அண்ணாசாமி, ‘‘நம்பாத���ாளுக்கு ஒண்ணும் தெரியாது. பகவான் மாதிரி அது. என்ன சொன்னாலும் நம்ப வைக்க முடியாது!’’ என்றார்.‘‘மாடிபூரா ஏரியல் போட்டிருக் கீராமே… துணி உலத்தவா?’’‘‘ஆமா யாகி அர்ரே. உங்களுக் கெல்லாம் சொன்னா புரியாது!’’ என்று டெக்னாலஜியை முகத்தில் வீசினார்.அவர்போனதும், ‘‘யாகி அர்ரேன்னா என்னடா? என்ன புருடா விடறான்பாரு மனுஷன்!’’‘‘இல்லை ரங்கு. அந்த மாதிரி ஒரு அர்ரே இருக்கு. சிக்னல் வீக்கா இருந்தா அதை அதும் பக்கம் திருப்பினா வாங்கிக்கும் > ஏரியல் மாதிரி.’’‘‘அப்ப அவர் சொன்ன மாதிரி டி.வி. தெரியும்ங்கறே?’’‘‘சான்ஸே இல்லை! சிக்னல் இருந்தாத்தா&ன?’’‘‘அமெரிக்காகாரன் அனுப்பறது?’’‘‘அதெல்லாம் இவ்வளவு தூரம் கடல் தாண்டி வராது ரங்கு’’ என்றேன்.ஒரு நாள் ராத்திரி பத்தரைக்கு ரங்குகடையில் மூணுபேர் அலமாரிக்குப் பின்னால் ஜிஞ்சர் அடித்துக் கொண்டிருந்தபோது கடைக் கதவை மூடும் சமயம் அண்ணாசாமி சைக்கிளில் வந்து இறங்கி, ‘‘வாங்கடா எல்லாரும்!’’ என்றார்.‘‘என்ன ஓய் பதற்றமாயிருக்கீர்? ஒரு ஜி.பி. அடிச்சுட்டுப் போமேன்’’ என்றான் தம்பு.‘‘எல்லாரும் டி.வி. தெரியாது தெரியாதுன்னு பரிகாசம் பண்ணிங் களே… உட&ன வாங்க எங்காத்துக்கு.’’‘‘என்ன தெரியறதா?’’‘‘அச்சுக் கொட்டினாப்பல தெரியாது. ஆனா, தெரியறது!’’‘‘வாடா இன்ஜினீயர்!’’ என்று என்னையும் விளித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘‘திஸ் இஸ் நாட் பாஸிபிள்’’ என்றேன். அவர் வீட்டுக்குப் போனோம்.

 

              மாடியில் எடுத்துக்கட்டி ஜன்னல் வழியாக சம்பா டார்ச்லைட்டை வைத்துக் கொண்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள் மாடிபூரா பரவியிருந்த அந்த ஏரியலை இவர் சொல்லச் சொல்ல மொத்தமாகத் திருப்பிக் கொண்டிருந்தாள்.இங்கே கீழே கூடத்தில் ஒரு கறுப்பு > வெள்ளை டி.வி. இருந்தது அதில் மணல் ஓடிக் கொண்டிருந்தது.‘‘சம்பா டியர்… திருப்பு திருப்பு!’’ என்றார்.அவள் ‘‘தெரியறதா… தெரியறதா?’’ என்று கேட்டுக்கொண்டே மாடியில் ஏரியலைத் திருப்பினாள். ஒரு கணத்தின் பிரிவில் அந்தத் திரையில் ஒரு பிம்பம் தெரிந்தது. ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பாஷை தெரியவில்லை.‘‘நிறுத்து… நிறுத்து! அங்கதான் அங்கயேதான்’’ என்று இங்கிருந்து சத்தம் போட்டார்.‘‘ரங்கு! இப்ப என்ன சொல்றே?’’‘‘பஜ்னுதான் இருக்கு… ஆனா, மூஞ்சி தெரியறது.’’‘‘டி.வி>யே வ்தெரியாதுன்னிங்களே… உங்க எக்ஸ்பர்ட் என்ன சொல்றார் இப்ப?’’ என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தார்.நான், ‘‘இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லை எங்க புரொபசரைத்தான் கேக்கணும்’’ என்றேன்.‘‘எதையும் இப்படி அலட்சியமா பேசப்படாது. இன்னம் அர்ரே எலிமெண்ட்ஸ் போட்டா நன்னாவே தெரியும். அதும் ராத்திரி ஆக ஆக… போகப் போக…’’மேலேயிருந்து சம்பா, ‘‘போருமா… இன்னும் திருப்பணுமா?’’ என்றாள்.‘‘சம்பா, போதும் கீழ வா! எல்லாருக்கும் பயத்தஞ்கஞ்சி கொடு’’ என்று இவர் சொல்ல, மேலேயிருந்து தொபுக்கடீர் சப்தமும் ஐயோ சத்தமும் கேட்டது.சம்பா எடுத்துக்கட்டிலிருந்து சுமார் பதினைந்து அடி விழுந்துவிட்டாள்.அவளை கைத்தாங்கலாக நொண்டிக்கொண்டே அழைத்து வந்தோம். ‘

 

                ‘பார்த்து நடக்கக்கூடாதோ?’’ என்றார். அவள் கால் சிவப்பாக இருந் தது. செமையாக வீங்கியிருந்தது. நிறைய வலித்திருக்கவேண்டும். தம்பு கண்ணீர் விட்டான்.‘‘என்ன ஓய்… எங்க ஊர் பொண்ண மாடியெல்லாம் ஏறவிட்டு பாடாப் படுத்தறீர். கொடுமைப் படுத்தறீர்!’’‘‘உனக்கு என்னடா ஆச்சு?’’ என்றார்.‘‘என்ன ‘டா’வா? நாக்கை அடக்கிப் பேசும். எல்லா வண்டவாளத்தையும் வெளிலவிட்டா நாறிப்போய்டும்.’’‘‘என்ன வண்டவாளம்…அவ என் பெண்டாட்டி. அவளை நான் என்ன வேணா செய்யச் சொல்வன். அதைக் கேக்க நீ யாரு?’’சம்பா, ‘‘போருமே… போருமே…’’ என்றாள்.‘‘நான் யார்றா? ரங்கு… சொல்றா நான் யாருன்னு!’’‘‘தம்பு நீ வாடா! அப்றம் பேசலாம்.’’‘‘இவர் கேக்கறதைப் பாரு! நான் யாரா…’’ தம்பு, ரங்கு கடையில் ஜிஞ்சர்பரிஸ் போட்டிருந்தான். சுருதி ஏறியிருந்தான். நாக்கு தொளதொளத்து விட்டது.‘‘நான் யாரு… சொல்றன். இதே சம்பா, இதேசம்பா… எனக்கு மொத்தம் எத்தனை லெட்டர் எழுதிருக்கா தெரியுமா? காட்டட்டுமா… நான் எத்தனை எழுதிருக்கேன் தெரியுமா?’’அந்தக் கணத்தில் காலம் நின்று போகப் போகிறது என்றுதான் நான் எதிர்பார்த்தேன். இல்லை!‘‘எல்லா பைத்தியக்கார லெட்டரை யும் சம்பா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டா… காட்டிட்டா… போடா!’’ என்றார்.கடைசி செமஸ்டருக்கு எம்.ஐ.டி>க்கு சென்னைக்கு திரும்ப வந்தபோது பேராசிரியர் சோமயாஜுலுவை சந்தேகம் கேட்டேன். ஸ்ரீரங்கத்தில் அன்றிரவு டி.வி. தெரிந்தது எப்படி என்று கேட்டேன்.அவர், ‘‘அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. டக்ட் (க்ஷயுஷபீ) ப்ராபகேஷன் என்று சில வேளை கடலின் இன்வர்ஷன் லேயர் இருக்கும்போது வேவ்கைடு மாதிரி ஃபார்ம் ஆகும் வி.எச்.எஃப். சிக்னல்கள் ஆயிரக் கணக்கான மைல்கள் கூட கடந்து வரும். அனாமலஸ் ப்ராப கேஷன் என்பார்கள். நீ பார்த்தது தெற்காசிய நாடுகளில் எதாவது ஒரு டி.வி>யாக இருக்கலாம்’’ என்றார்.ரங்கு இப்போதும் அதை ரங்கநாதன் கிருபை என்றுதான் சொல்கிறான்.

by parthi   on 13 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சூழல், சூழல் சூழல், சூழல்
கடைசி கடிதம் கடைசி கடிதம்
அவ்வளவுதானா...! அவ்வளவுதானா...!
மனம் தேடும் ஆசை மனம் தேடும் ஆசை
பழி உணர்ச்சி பழி உணர்ச்சி
சூழல், சூழல் சூழல், சூழல்
இளம் மாங்கன்று இளம் மாங்கன்று
குருவி குஞ்சு குருவி குஞ்சு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.