அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது.தேவர்களுக்கு அசுரர்களால் துன்பம் உண்டாகவே, தங்களைக் காத்தருளும்படி சிவனிடம் வேண்டினர். சிவன்
தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு, அக்னி இருவரும் கங்கையில் சேர்த்தனர். அதிலிருந்து ஆறு குழந்தைகள்
உருவாகி, கங்கையிலிருந்த தாமரை மலர்களில் தவழ்ந்தனர். அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்பு பார்வதி, ஆறு குழந்தைகளையும்
ஒன்றாக்கினாள். முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தந்தார். கங்கையில் குழந்தையாக தவழ்ந்ததால் முருகனுக்கு, "காங்கேயன்' என்ற பெயர் ஏற்பட்டது.
இப்பெயரிலேயே இத்தலத்தில் முருகன் அருளுகிறார். சன்னதி முன் மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். இவருக்கு தனி வாசலும், துவாரபாலகர்களும்
இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு வருபவர்கள் முதலில் அருணகிரியாரை தரிசித்து விட்டு அதன்பின்பே, முருகனை தரிசிக்கிறார்கள்.
அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. தேவர்களுக்கு அசுரர்களால் துன்பம் உண்டாகவே, தங்களைக் காத்தருளும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு, அக்னி இருவரும் கங்கையில் சேர்த்தனர். அதிலிருந்து ஆறு குழந்தைகள் உருவாகி, கங்கையிலிருந்த தாமரை மலர்களில் தவழ்ந்தனர். அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்பு பார்வதி, ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினாள்.
முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தந்தார். கங்கையில் குழந்தையாக தவழ்ந்ததால் முருகனுக்கு, "காங்கேயன்' என்ற பெயர் ஏற்பட்டது. இப்பெயரிலேயே இத்தலத்தில் முருகன் அருளுகிறார். சன்னதி முன் மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். இவருக்கு தனி வாசலும், துவாரபாலகர்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு வருபவர்கள் முதலில் அருணகிரியாரை தரிசித்து விட்டு அதன்பின்பே, முருகனை தரிசிக்கிறார்கள். |