LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1328 - கற்பியல்

Next Kural >

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ? ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய வுப்பு- இதுபோது இவள் நெற்றி வெயர்க்குமளவு செய்த கலவி்யின்கண் உள்ள இனிமையை ; ஊடிப்பெருகுவமோ -இன்னுமொருகால் இவள் ஊடி யாம் பெறவொண்ணுமோ! இனிமை ஒருங்கே நுகரும் ஐம்புலவின்பம். இனி அவ்வப்போது அரிதென்று பெற்றதன் சிறப்புக் கூறியவாறு. நுதல் வெயர்ப்பச் செய்தது ஒரு சிறந்த கலவிவகை யெனினுமாம். 'கொல்' அசைநிலை 'ஓ' ஐயவினா , 'இவளூடி' என்பது தனிநிலை யமைப்பு.
கலைஞர் உரை:
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.
சாலமன் பாப்பையா உரை:
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
முன் புணர்ந்ததனால் உடல் வேர்க்கும்படி உண்டான அலுப்புத் தீருவதும் வெளியாகிக் குறைந்துவிட்ட சீவ சத்தான இந்திரியம் ஊறுவதும் பிரிந்திருப்பதனால்தான் பெற முடியும்.
Translation
And shall we ever more the sweetness know of that embrace With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.
Explanation
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.
Transliteration
Ootip Perukuvam Kollo Nudhalveyarppak Kootalil Thondriya Uppu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >