LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா

உலகத் திருக்குறள் முற்றோதல்

கடிதத்தின் நோக்கம்: உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆர்வலர்கள் நமது "Thirukkural Translations in world Languages"  ஆய்வு நூலை உங்கள் மாவட்டத்தில் ஒரு கூட்டம் போட்டு அறிமுகப்படுத்தி உலகப்பொதுமறையான திருக்குறள் ஏன்  உலகப்பரவலாக்கள் செய்யப்படவேண்டும்? அதற்கு அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்ப்பதன் தேவை குறித்து பேசவேண்டும்.. ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பிரதி நூல் அனுப்பிவைக்கப்படும். மேலும் நூல் வேண்டுவோர் https://estore.valaitamil.com/  இணையதளத்தில் வாங்கிக்கொள்ளலாம். உங்கள் மாவட்டத்தில் நிகழ்ச்சி நடத்த ஆர்வமுள்ளவர்கள் உங்கள் விருப்பத்தையும், உங்கள் முகவரியையும் பகிரவும். ஒரு நூல் கட்டணமில்லாமல் அனுப்பிவைக்கப்படும்.

மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு , அன்பு நிறை வணக்கம்.

உலகத்தின் மூத்த மொழி தமிழ். அதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்  ஒப்பற்ற வாழ்வியல் நூல் திருக்குறள். திருக்குறளைப் பற்றி உலகம் கடந்த சில நூற்றாண்டு காலமாக பேசியுள்ளது.

இருப்பினும் , குறளுக்கு அதற்கு உரிய  உலகம் தழுவிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் மேலைநாட்டு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் போதிய அளவு  குறளை மேற்கோள்காட்டி, குறிப்பிட்டு ஆவணப்படுத்தவில்லை என்பதால் உலகப்பொதுமறையாக இன்னும் சென்று சேரவில்லை என்பது அறிஞர்கள் கருத்து.

இந்நிலையில்  திருக்குறள் தோன்றிய மண்ணில் வாழும் நாம் என்ன செய்யவேண்டும்?

திருக்குறள் உலகப்பொதுமறை என்று நாம் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? உலகம் ஏற்றுக்கொள்ளவேண்டாமா? 

திருக்குறளை முழுமையாக வாசித்து, உள்வாங்கி, வாழ்ந்து நாம்தான் நம் முன்னோர்களின் படைப்பை உலக மக்களுக்கு கொண்டுசேர்க்கவேண்டும். உலக மக்கள் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்கள் இலக்கியங்களில் , அவர்கள் போற்றும் தத்துவங்களில் இல்லாத முழுமைபெற்ற வாழ்வியல் நெறிகள் அவர்கள் கேள்விப்படாத ஒரு மொழியில் இருப்பதை ஏற்றுக்கொள்ள வைப்பதென்பது அவ்வளவு எளிதன்று.

இது  தொடர்பாக நம் முன்னோர்கள், தமிழ்ச் சான்றோர்கள் , புலம்பெயர் தமிழர்கள் பல வகையில் முயன்று எடுத்துள்ள, எடுத்துவரும்  முன்னெடுப்புகளை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்வோம். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில், அவர்கள் தொடங்கிய  இந்தப்  பயணத்தை ,மேலும் நாம் விரைவு படுத்தவேண்டும்.

பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் திருக்குறளை ஏற்றுக்கொள்ள அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்து அவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

உலகில் 10000 பேருக்கு மேல் பேசும் ஒவ்வொரு உலக மொழியிலும்,  உலகின் அனைத்து நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்க்கபட வேண்டும் என்பதை நம் இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கவும், உலக நாடுகளில் யுனெசுகோவின்   அங்கீகாரம் பெறவும்  நம் முன்னோர்கள் உணர்வுடன் கடத்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பல நூல்களில், மேடைகளில் பேசி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை வலியுறுத்தி தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் இன்றும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இதுவரை பெரிய நகர்வுகள் இல்லை என்பதை நம் குழு ஆய்வு செய்து அறிந்துகொண்டது.

இன்று திருக்குறள் பரவலாக்கம் இருக்கும் நிலையிலிருந்து ,நடைமுறைத் தீர்வாக சில முன்னெடுப்புகளை மேற்கொண்டால் சில நம்பிக்கைகளை வென்றெடுக்கலாம் என்று சிந்தித்தோம்.

திருக்குறள் என்பது தமிழர்களுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல, உலக உயிர்களுக்காக, ஒருவருடன் ஒருவர் அன்புடன் ஒத்திசைவுடன் மகிழ்ச்சியோடு வாழ மனிதகுலம் முழுமைக்கும் எழுதப்பட்ட ஒரு உன்னத நூல்.

அது தமிழ்மொழியில் வந்துள்ளதால், நாம் பெருமைகொள்ளலாம். அத்தோடு நின்றுவிடாமல், உலகத்தின் பொதுமறையை உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவரவர், அவரவரால் முடிந்த பங்களிப்பை, விருப்பு வெறுப்பின்றி, நான் என்ற தன்முனைப்பு இல்லாமல் நான் - நீ என்ற வேற்றுமை  இல்லாமல் , ஒற்றுமையோடு ஹார்வார்டு தமிழிருக்கை அமைக்க , ஜல்லிக்கட்டு வெற்றிபெற கைகோர்த்து நின்றதுபோல் நிற்கவேண்டும்.

இதுகுறித்து முதன்முதலில் 2018 ல் ஒரு சிந்தனை வந்தபோது, உலகில் இதுவரை எத்தனை மொழிகளில் வெளிவந்துள்ளது என்ற பட்டியல் முழுமையாக  ஆய்வின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதா?  அதை ஆவணப்படுத்தி வெளியிட்டால், இன்னும் எத்தனை மொழிகளில் மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற தெளிவு ஏற்படும், அதை செய்து முடிக்க வாய்ப்பு ஏற்படுமே என்று முகநூலில் பதிவிட்டோம்.  அதில் கிடைத்த  பதில் இதுவரை இப்படிப்பட்ட ஆய்வு முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை, எந்த எண்ணிக்கையை குறிப்பிட்டாலும், அது அவரவர்க்கு கிடைத்த குறிப்பிட்ட தகவல்கள் அடிப்படையில்தான் அமையுமே தவிர, உலக நாடுகளைத் தொடர்புகொண்டு ஆராய்ந்து, திருக்குறள் வரலாற்றில்  தமிழ்நாட்டுக்கு , இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் என்ன நடந்துள்ளது என்பதை  இதுவரை யாரும் ஆய்வாக முழுமையாக மேற்கொள்ளவில்லை என்ற உறுதிப்படுத்தப்பட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. 

இது முடியுமா, முடியாதா என்று சிந்திக்காமல் வலைத்தமிழ் குழு களத்தில் இறங்கியது.  2019ல் ஒரு குழுவை அமைத்து உலக நாடுகளில் வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பை , அந்தந்த நாடுகளிலிருந்து பெற்று தமிழ்நாட்டுக்கு  கொண்டுவந்து சேர்க்க  திட்டமிடப்பட்டது.

இதற்கு அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில்  செயின்ட் லூயிஸ் நகரில் வசிக்கும் திருக்குறள் ஆர்வலர், வலைத்தமிழ் தன்னார்வலர், திரு.இளங்கோவன் தங்கவேலுவை இக்குழுவிற்கு ஒருங்கிணைப்பு செய்யக்கூறி, உரிய உதவிகளை வலைத்தமிழ் செய்யும், தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று  அறிவித்து திட்டம்தொடங்கப்பட்டது.

அதனடிப்படையில் தேடும்போது, திருக்குறள் மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஆழமான தேடுதலுடன் இயங்கிவரும், இணையத்தில் தகவல்களை பதிவுசெய்துவரும்  கால்நடை மருத்துவத்தில் இயக்குநராக டெல்லியில் பணியாற்றி வரும் டாக்டர் ந. வ. கு.அஷ்ரப் என்பவரை அறிந்தோம்.  உடன் டாக்டர் அஷ்ரப், வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர் , பாமரருக்கும் பரிமேலழகர் நூலாசிரியர் திரு.இராஜேந்திரன்  IRS (ஓய்வு) இருவரையும் அழைப்பு கொடுத்து குழுவில் இணைத்தோம். டெக்சாஸில் இருந்து தனது 44 வயதில் குறள் மனனம் செய்த திரு.செந்தில் துரைசாமி, சென்னையிலிருந்து இளைஞர் அஜய் குமார் செல்வன் உள்ளிட்ட ஆறுபேர் இணைத்து குழுவாக களத்தில் இறங்கினோம்.

குழுவின் செயல்பாட்டில் வேகம் எடுத்து.  மாதம்  ஒரு கூட்டம், தேவையானால் இரண்டு கூட்டங்கள் என்று அவரவர் சில நாடுகளை , சில மொழிபெயர்ப்புகளை  பிரித்துக்கொண்டு களத்தில் இறங்கி தேட ஆரம்பித்தோம்.  வலைத்தமிழ் பன்னாட்டு இதழுக்கு ஓரளவு உலகளாவிய இலக்கியத் தொடர்புகள் உள்ள காரணத்தாலும், குழுவில் உள்ள பலரும் தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றிய அனுபவம் உள்ள அதிகாரிகளாக  இருந்தது, ஒரு திட்டத்தை நேர்த்தியாக திட்டமிட்டு முடிக்கும்  அனுபவம் கொண்ட அமெரிக்கத் தன்னார்வலர்கள் என்று பல திறமைகள் ஒருங்கே சேர்ந்து பயணித்தது இந்தத் திட்டத்தின் வலிமை. 

மேலும் இக்குழுவில் உள்ள இருவர் மொரீசியஸ் நாட்டின் மேனாள் கல்வியமைச்சரும் யுனெசுகோவில் 15 ஆண்டுகளுக்குமேல் பாரிஸ் , டெல்லி யுனெசுகோ அலுவலகத்தில் இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் தலைமையில் இயங்கும் "Thirukkral For UNESCO"  குழுவிலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயணித்து 26 ஆங்கிலக் கருத்தரங்கங்கள் நடத்திய அனுபவம் இக்குழுவின் உலகப்பார்வையை மேலும் விரிவாக்கியது.

2018 ஆம் ஆண்டு தொடங்கி , திட்டமிட்ட மிகுந்த உழைப்பின் பலனாக ,ஐந்து ஆண்டுகளுக்கும்  மேலான  தொடர் பயணத்தில் அனைத்து மொழிபெயர்புகளையும் அடையாளம் கண்டுவிட்டோம் என்ற  ஒரு நம்பிக்கை பிறந்தது.

அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு முதன்முறையாக ஒரு தொகுப்பாக ஒரே இடத்தில சேர்க்கப்பட்டது.  அடுத்து இந்த விவரங்களை தொழில்நுட்ப உதவியுடன் உலகின் எத்தனை நாடுகள், எத்தனை மொழிகள், எத்தனை மொழிபெயர்ப்புகள், ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள், யுனெசுகோ உறுப்பு நாடுகள்,அங்கு பேசப்படும் மொழிகள், திருக்குறள் எந்தெந்த நாட்டின் எந்தெந்த மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது,எவற்றில் இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டும், என்று அனைத்து கோணங்களிலும்  ஆய்வு செய்யப்பட்டு 218 பக்கங்களின் , முழு வண்ணத்தில் "Thirukkural Translation in World Languages" என்ற ஆங்கில நூல் கடந்த பிப்ரவரி 11,2024 அன்று சென்னையில் நடத்த  திருக்குறள் ஐம்பெரும் விழாவில் நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்த நூல் தமிழில் வெளிவரும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நூல். 

இதில், இதுவரை குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 58 மொழிகளில்  உள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களின் விவரங்களை  முழுமையாக ஆவணப்படுத்திய முதல் என்றால் அது மிகையாகாது.

இன்னும் 158 மொழிகளில் குறளை மொழிபெயர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி அதற்கான தீர்வுகளை நோக்கி நகரும் தொடர்  செய்ல்பாடாக ஆசிரியர் குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியிட்டு விழா முடிந்த கையோடு  கலைந்து சென்றுவிடாமல் பல்வேறு குழுக்களை அமைத்து அடுத்தகட்ட செயல்பாடுகளை முன்னெடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான  திட்டம் வகுத்துள்ளோம்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ,ஆங்காங்கே உள்ள திருக்குறள் அமைப்புகள் , ஆர்வலர்கள், தமிழ்ச்சங்கங்களை , இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்த   நூல் அறிமுக நிகழ்ச்சியை பொருட்செலவு  இல்லாமல் எளிமையாக, திருக்குறள் வழியில் நேர்த்தியாக மேற்கொண்டு,  திருக்குறளை உலகப் பொதுமறையாக  கொண்டுசேர்க்க நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கும் நிகழ்வாக இது அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் ,இது திருக்குறளுக்கான பரப்புரை நிகழ்ச்சியாக, மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதலுக்கு அதிக மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியாகவும்  அமையவேண்டும் என்பதும் எமது விருப்பம்.

இதற்காக "Thirukkural Translations in World Languages" ஆங்கில நூல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்டத்திற்கு ஒரு நூல் அனுப்பப்பட்டு, நூல் அறிமுக நிகழ்ச்சியை நடத்தும் வழிமுறை, இந்நூலைக் குறித்த கூட்டத்தில் பகிரவேண்டிய விவரங்கள் அனைத்தும் அனுப்பப்படும்.   நூல் தேவைப்படுவோர் https://estore.valaitamil.com/ இணையதளத்தில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தவும்.

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்டப் பொறுப்பாளர்கள் இது குறித்து கேள்விகள் இருந்தால் அழைக்கலாம். இல்லையேல், நூல் அறிமுக விழா நடத்த ஆர்வம் உள்ளது என்று தெரிவிக்கவும்.

ஆர்வம் உள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு மட்டும் நூலின் ஒரு பிரதியும் , கூட்டத்தில் உரையாடவேண்டிய நூலைப்பற்றிய விவரக்குறிப்பும் தமிழிலும் அனுப்பப்படும்.

இந்த அரிய  வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் மாவட்டத்திற்குத் தேவையான மாவட்ட முற்றோதல் பயிற்சியாளர், மாவட்டப் புரவலர் , முற்றோதல் செய்ய விரும்பும் மாணவர்கள் என்று அனைவரையும் மாவட்டத்திற்குள் அறிந்துகொள்ள, தொடர்பை  ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

 

நன்றி!  வணக்கம்,

 

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

by Swathi   on 13 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன்  அவர்களை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன் மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்
எனைத்தானும் நல்லவை கேட்க: இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட 70 காணொளிகளைக்  காண: எனைத்தானும் நல்லவை கேட்க: இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட 70 காணொளிகளைக் காண:
ஹாங்காங் நாட்டில் Thirukkural Translations in World Languages நூல் வெளியீடு ஹாங்காங் நாட்டில் Thirukkural Translations in World Languages நூல் வெளியீடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.