LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து

மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து Thirukkural Translations In World Languages நூலை வழங்கி தமிழ் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய முன்னெடுப்புகளை விரிவாக எடுத்துரைத்தேன் ஒரு கோரிக்கையாகவும் ஆவணப்படுத்தி வழங்கினேன்.தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடம் சந்தித்து உரையாடுமாறு கேட்டுக்கொண்டார். உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் செயல்பாடு, உலகத் தமிழ் வளர்ச்சிமன்றத்துடன் இணைந்து நாம் வழங்கும் ஆண்டுக்கு 40000 (நாற்பதாயிரம்) திருக்குறள் நூல்கள் வீதம் அடுத்த பத்து ஆண்டுகளில் வழங்கவிருக்கும் செயல்பாடு , அதற்கான இலவச முற்றோதல் பயிற்சி, மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறையின், கல்வித்துறையின் தேவையான ஒத்துழைப்பு என்று விரிவாக உரையாடியது பெரும் நம்பிக்கையைத் தந்தது.

கட்சி அரசியலுக்கு அப்பால் ஆழ்ந்த வாசிப்பும், எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உடைய, மக்கள் பணியில் பெரும் நம்பிக்கையோடு பயணிக்கும் நாம் பெரிதும் மதிக்கும் அன்பிற்குரிய திரு.சி. மகேந்திரன் தோழர் அவர்களை சந்தித்து Thirukkural Translations In World Languages நூலை வழங்கி உரையாடினோம். குழுவின் பெரும் முயற்சியை பாராட்டினார். திருக்குறள் 2030 திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

பல்துறை திறமைகொண்ட திரை ஆளுமை, சொற்பொழிவாளர், ஓவியர், "திருக்குறள் 100" என்று 100 திருக்குறளை எடுத்துக்கொண்டு நான்கு மணி நேரம் உரை நிகழ்த்தி பரப்புரை செய்துவரும் திரு.சிவக்குமார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உலக மொழிகளில் திருக்குறள் தொகுப்புத் திட்டக்குழு உருவாக்கிய "Thirukkural Translations in World Languages" நூலை வழங்கினேன். வாழ்த்தினார்.

உலகத் தமிழ் சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள்:
உலகத் தமிழர்கள், தமிழ் அமைப்புகள், திருக்குறள் அமைப்புகள், திருக்குறள் ஆர்வலர்கள் இந்நூலைப் பெற்று வாசித்து, இதுவரை தொகுத்ததை உள்வாங்கி உறுதிசெய்யப்பட்ட தகவல்களை பகிர்வதும், பயன்படுத்துவதும் ,நூலில் இல்லாத உங்களிடம் உள்ள அரிய தகவல்களை வழங்கி அடுத்த பதிப்பை மேலும் செம்மையாக்க துணைநிற்பதும் தமிழுக்கு, தமிழில் முதன்மையான திருக்குறளுக்கு செய்யும் பெரும் பங்களிப்பாகும். தமிழர்கள் தனித்தனியே தனித்து அறிவாளிகளாக நிற்பவர்கள் குழுவாக கூட்டு மனோபாவத்தோடு செயல்பட முடியாதவர்கள் என்று பலர் சொல்வதை கேட்டுள்ளோம். இக்குழு பல துறைகளிலிருந்து கைகோர்த்து ஒரு நோக்கத்திற்காக , திருக்குறளுக்காக ஐந்து ஆண்டுகள் வேலைசெய்து ஒரு சில கேள்விகளுக்கு விடையளித்துள்ளது. எனவே உங்களுக்கு வைக்கும் அன்பான கோரிக்கை இந்நூலின் ஒரு பிரதியைப் இன்றே https://estore.valaitamil.com/ என்ற இணையத்திலோ அல்லது புலனத்தில் செய்தி அனுப்பி +15715996029 எண்ணிலோ எளிதாகப் பெற்று வாசியுங்கள். உங்கள் கருத்தை, விமர்சனத்தை எங்களுக்கு எழுதுங்கள். வாருங்கள் ஊர் கூடி தேர் இழுப்போம்.. திருக்குறள் 2030 இலக்கை 2030 வரை காத்திராமல் ஓரிரு ஆண்டுகளில் சாத்தியமாக்குவோம்.

 

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

by Swathi   on 01 Jun 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா?  - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா? - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு
மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள் மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள்
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்  183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை!
தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம் தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம்
கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர் கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர்
திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.