LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.

சென்னை திருவள்ளுவர் அரங்கத்தில் பிப்ரவரி 11 -2024-ம் தேதி உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பில் "Thirukkral Translations in world Languages புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

விழாவுக்குத் தலைமை தாங்கி, உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் நோக்கம் மற்றும் Thirukkral Translations in world Languages என்ற புத்தகத்தின் சிறப்பு குறித்து உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், வலைத்தமிழ் ஆசிரியருமான ச.பார்த்தசாரதி விளக்கினார்.

 

இதை அடுத்து ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு, ஏப்ரல் 5-7, 2024 தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றது. விழாவில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்க மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் சங்கமிக்கும் ஒரு பெரும் மாநாடாக நடந்தேறியது. 

 

இம்மாநாட்டை சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னெடுத்துப் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செய்திருந்தது.

 

அதன் ஒரு பகுதியாகத் தமிழறிஞர் சாலமன் பாப்பையாவால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

 

இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன் , சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் நம்பிராஜன் வைத்திலிங்கம், முனைவர் மருதநாயகம் , ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் விஜய் ஜானகிராமன், சம்பந்தம் , திருக்குறள் ஆர்வலர் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

 

தமிழ்நாடு, சிகாகோ-வைத் தொடர்ந்து அடுத்து மூன்றாவது நாடாகச் சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியிடப்படவிருக்கிறது.. 

 

இதுகுறித்து உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், வலைத்தமிழ் ஆசிரியருமான ச.பார்த்தசாரதி கூறும்போது, "நம் பெரும் கனவு "திருக்குறள் 2030" இலக்கு. ஒவ்வொரு வெளியீடும் , நூல் அறிமுக விழாவும் வெறும் வெளியீடாக, உரையாடல் என்று மட்டுமல்லாமல், வெளியிடப்படும் ஒவ்வொரு இடத்திலும் இன்னும் திருக்குறள் மொழிபெயர்க்கவேண்டிய 158 மொழிகளிலிருந்து குறைந்தது மூன்று மொழிகளில் மொழிபெயர்ப்பைக் கொண்டுவரத் திருக்குறள் ஆர்வலர்களைக்கொண்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நம் இலக்கு "திருக்குறள் 2030".  

 

பல ஆண்டுகளாக முகநூலில் , தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் சிங்கப்பூர் நட்புகளை, இலக்கிய அன்பர்களை, எழுத்தாளர்களை, ஆளுமைகளை , வலைத்தமிழ் ஊடகத்துடன் பயணித்த பல்வேறு நட்புகளை முதன்முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன்.

 

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தைத் தாய்மொழி மாதமாகக் கொண்டாடுகிறீர்கள். உலகின் மூத்த மொழி தமிழ், தமிழில் முதன்மை வாழ்வியல் இலக்கியம் திருக்குறள். அதுகுறித்து ஒரு நெடிய பன்னாட்டு ஆய்வை மேற்கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் வளர்ச்சிப்பணியாக, திருக்குறள் உலகப் பரவலாக்கல் காலத்தின் கட்டாயம் என்றுணர்ந்த, நமக்குள் நம் சிறப்புகளைப் பேசியது போதும் உலகம் பேசட்டும், உலகிற்குக் கொண்டுசெல்வோம் என்று முன்னெடுக்கப்படும் இந்த உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின் இறுதி அறிக்கை நூல் வெளியீட்டை ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் முன்னெடுக்கும் சிங்கப்பூர் வாசகர் வட்டம், MAST அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு நல்கும் அனைத்து அமைப்புகளுக்கும் மிக்க நன்றி... 

 

சிங்கப்பூர் நட்புகள் அனைவரும் ஏப்ரல் 18, வியாழன் , மாலை 6:30 மணிக்கு உங்கள் நேரத்தைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து உரையாட ஆவலாக உள்ளேன். 

 

நேரில் சந்திப்போம்.. உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்காக உங்கள் முன்பதிவு அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

பதிவு செய்ய: https://globaltamilevents.com/thirukkural-translations-in-world-languages-singapore-tview1260.html

 

நூல் தேவையானோர் முன்பதிவு செய்ய: www.eStore.ValaiTamil.com

 

-வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

by Kumar   on 13 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆய்வு நோக்கில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உலகப் பரவலாக்கலும்   -சுருக்கம் ஆய்வு நோக்கில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உலகப் பரவலாக்கலும் -சுருக்கம்
திருக்குறள் சிறப்புத் தளத்தில் மேலும் 4 நூல்கள் சேர்ந்தன திருக்குறள் சிறப்புத் தளத்தில் மேலும் 4 நூல்கள் சேர்ந்தன
ஆறாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆறாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு கனடாவின் ரொறன்ரோ நகரில்
தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சம் தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சம்
திண்டுக்கல் பேகம்பூரில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை திண்டுக்கல் பேகம்பூரில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 179ஆம் திருவள்ளுவர் சிலை - ஆவடி விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 179ஆம் திருவள்ளுவர் சிலை - ஆவடி
திருக்குறள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளீர்களா ? வலைத்தமிழ் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் திருக்குறள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளீர்களா ? வலைத்தமிழ் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்
TIRUKKUṞAḶ TRANSLATION PROJECT 2025 - 2026 TIRUKKUṞAḶ TRANSLATION PROJECT 2025 - 2026
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.