LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

பதில் இல்லாத கேள்வி !!!

சிவா  என்னை பார்த்து ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டான் ?  அத்தனை பேர் இருக்கும் போது என்னை பார்த்து ....  

நினைக்க நினைக்க அழுவதா ? சிரிப்பதா?  எனத் தெரியவில்லை , உங்களுக்கு தெரிய வேண்டுமெனில்  14  வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும் .  

கோயம்பத்தூர் " ஜெகநாத நகர் "   CIT , CMC , PSG , GRD என நான்கு கல்லூரிகள் சுற்றி இருப்பதால் , வாடகைக்கு இருப்பதும் , வாடகைக்கு விடுவதுமே பிரதான தொழில் . 

போர் அடித்தால் வகுப்புக்கு போகும்  எங்களுக்கு   ரம்மி ஆடுவதும் , எவனையாவது  மச்சான் ஹீரோ மாதிரி இருக்க என ஏற்றி விடுவதும் , காதல் என்று சொல்லி வந்தால் அவனிடம் உக்கார வைத்து   தேனீர் குடித்தபடி    கதை கேட்பதும் , காதல் தோல்வி என்றால் மிக உற்சாகமாகி நாலு ரவுண்ட் போன பிறகு புலம்பல்களை கேட்பதும் உப தொழில் .

இப்படி முன் மாதிரியாக இருப்பதாலோ ? என்னவோ ?  நண்பர்கள் வட்டம் அதிகம் . அப்படி ஒரு பார்ட்டியில் அறிமுகமானவன் சிவா .

எதையும் அலட்டிக்கொள்ளாமல் எடுத்துக் கொள்ளும் எங்களுக்கு மருத்துவ படிப்பு படிக்கும் சிவாவும் , போதை ஏறினால் அவன் பேசும் ஆங்கிலமும் ஆச்சிரியம் . முதல் சந்திப்பின் போதும் இப்படித்தான் எங்கள் ரூமில்  இருந்தவன் திடீரென்று பேச ஆரம்பித்தான் .

 ஆங்கிலத்தில் செய்தி வாசிப்பதை கேட்பதை போல ஒன்றுமே தெரியவில்லை . அடிக்கடி "Kick the bucket " , "kick the bucket " என்று அவன் சொல்ல எங்களுக்கு பயங்கர கோவம் , ரூமில் இருக்கிறதே ஒரு பக்கெட் அதை ஏன்டா உடைக்கிறாய் என்று சண்டைக்கு போனோம் . 

விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தவன் அதற்கு  "சாவது" என்று ஒரு அர்த்தம் உள்ளது என்று சொன்னான் .  புரிந்ததை போல மொத்தமாக தலையை ஆட்டி வைத்தோம் .

இப்படியாக தினமும் எங்களிடம் வந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கும் அவனிடம் திடீரென்று மாற்றம்.

ஒரு பெண்ணோடு அடிக்கடி காணப்பட்டான் , என்ன என்று கேட்டதுக்கு மழுப்பலாக பதில் சொன்னான். 

எங்களுக்கு தலை வெடித்து விடும் போல இருந்தது , ஒரு  காதல் கதையை கேட்க முடியாமல் போகிறதே  என்று .

பேசிக்கொண்டிருக்கும் அவர்கள் எங்கள் தலை தென்பட்டால் அல்லது நங்கள் அருகில் சென்றால் மௌனமாகி விடுவார்கள் .

ஒரு மாதம் இருக்கும் , சிவா அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு  மிகத் தீவிரமாக பேசி விட்டு போய் விட்டான் 

இதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியாது என்று நாங்கள் அந்தப் பெண்னை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்க 

உங்களுக்குத்தான் புரியவில்லை என்று அந்தப் பெண் அழுதுகொண்டு போக எங்களுக்கு  சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை .

 வழக்கம் போல அன்றிரவு ரம்மி   ஆட்டம் களை கட்டியது. சிவா அடுத்தடுத்து ஒரிஜினல் ரம்மியை இறக்கி விட இன்றைக்கு எப்படியும் போட்டு வாங்கி விடுவது என்ற முனைப்புடன் 

மச்சி  வெளியே வா என்ன பிரச்சனை சொல்லு  என்று சொன்னேன் . தம் அடிக்க வெளியே வந்தோம் .

பேசிக்கொண்டிருக்கையில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், ஒரு நல்ல பாம்பு படம் எடுப்பதை போல  வந்தது அந்தக் கேள்வி 

"மாமா, நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் இந்த சமூகம் ஓத்துக்கொள்ளுமா மாமா ???"

                                                                                                                                                                  -பாவி

                                                                                              by Guest   on 10 Aug 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்ந்த போது உணர்ந்த போது
புளிய மரம் புளிய மரம்
விஞ்ஞானியின் காதல் விஞ்ஞானியின் காதல்
“பீனிக்ஸ்” பறவை “பீனிக்ஸ்” பறவை
புதிதாய் பிறப்போம் புதிதாய் பிறப்போம்
கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள் கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்
சண்டை சண்டை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி
கருத்துகள்
11-Apr-2018 02:36:03 muthuselvam said : Report Abuse
super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.