LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!

வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம். இயந்திரம் மூலம் பணம் பெரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இன்றைய நிலையில், வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தற்போது ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெற முடியும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.


இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது, 


''ஒருவரால் அனுப்பப்படும் பணத்தை பெறும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. எனவே, இவர்களுக்கு பணத்தை ரொக்கமாக பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டியது அவசியம். பணத்தை அனுப்புபவரின் வங்கி கணக்கிலிருந்து, அனுப்பப்பட்ட தொகை ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பெறப்படுகிறது. பணத்தை பெறுபவருக்கு அவரது செல்போனுக்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். இதனை வைத்து அவர் அருகிலுள்ள ஏ.டி.எம்.மிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.


இந்த திட்டம் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் சேவையை வழங்குவதற்கு வங்கிகளுக்கும், செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இன்னும் சில மாதங்களில் இந்த புதிய வசதி செயல்பாட்டுக்கு வரும். இதற்காக தொழில்நுட்ப வசதியும் உரிய முறையில் மேம்படுத்தப்படும். நம் நாட்டில் 90 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. எனவே, மொபைல் பேங்கிங் வசதியை எளிதில் அறிமுகப்படுத்தலாம் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

by Swathi   on 13 Feb 2014  1 Comments
Tags: ஏ.டி.எம்   ஏ.டி.எம் வசதி   பணம் பெரும் வசதி   ரிசர்வ் வங்கி   வங்கி கணக்கு   வங்கி கணக்கு இல்லாதவர்கள்   RBI  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!
வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !! வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!
2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் !! 2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் !!
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி !! 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி !!
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு !! 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு !!
எல்லா ஏடிஎம்மிலும் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவச பண பட்டுவாடா !! எல்லா ஏடிஎம்மிலும் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவச பண பட்டுவாடா !!
ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் !! ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் !!
வங்கிகளின் 0 % வட்டி கடனுக்கு ரிசர்வ் வங்கி தடை !! வங்கிகளின் 0 % வட்டி கடனுக்கு ரிசர்வ் வங்கி தடை !!
கருத்துகள்
14-Feb-2014 03:29:21 sundar said : Report Abuse
goooooooooooooooooooooood
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.