LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் தல - சொல்கிறார் ஸ்டண்ட் சில்வா

மங்காத்தா, வீரம், தற்போது என்னை அறிந்தால் என வரிசையாய் தல படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ‘ஸ்டண்ட்’ சில்வா மாஸ்டர். அப்படி என்னதான் உங்க கெமிஸ்ட்ரி என்று கேட்க அதிரடியாய் ஃபோன் செய்தால், காதல் ததும்ப ஒரு மெலோடி பாடல் ரிங்க்டோனாய் நம்மை வருடுகிறது. நொடி பொழுதில் நம்பர் மாறி உள்ளதா என்று பார்க்க. ‘Hello!’ சொல்லுங்க , எப்படி இருக்கீங்க என்று கனிவாய் நலம் விசாரிக்க தொடங்கியவரை நிறுத்தி நமது பேட்டியை ஆரம்பித்தோம். அனைத்து கேளிவிகளுக்கும் புன்னகைத்த வண்ணம் பதில்களை கூறினார் அதிரடி மன்னன் ‘ஸ்டண்ட்’ சில்வா.   

தொடர்ந்து ‘தல’ படங்கள் ஸ்டண்ட் செய்வதன் கரணம் என்ன?


சிரிப்புடன், “ அது எனக்கு தெரியலங்க, Director வெங்கட்பிரபு தான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மங்காத்தாவின் சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. சிவா சார்கூட முன்னரே பணி புரிந்திருந்ததால் வீரம் கிடைத்தது. அதில் ரயில் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் அந்த கூட்டணியை தொடர்ந்துள்ளார் கௌதம் சார். அவருடனும் விண்ணைத்தாண்டி வருவாயா , நடுநிசி நாய்கள் என நான்கு படங்கள் வேலை செய்துள்ளோம். அஜித் சார்க்கும் என்னை பிடிக்கும் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்”.


‘வீரம்’ ரயில் சண்டைக்காட்சி மாதிரி ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஷ்பெஷல் ஏதும் உள்ளதா?


“ எல்லா ஸ்டண்ட்டும் ‘Live’ஆ செய்திருக்கிறோம். சில விஷயங்கள் படம் ரிலீஸ் முன்னாடி எப்படி சொல்வது.” என ஜகா வாங்கியவரை சமாளித்து பதிலை வாங்கினோம்.

“ அஜித் சார் எதாவது ஒரு ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த படத்தில் ‘தல’ தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார்.”

டிரைலர்ல உங்க முகம் தெரிஞ்சதே... உங்க கதாபாத்திரத்தை பற்றி சொல்லுங்க.

“என்னங்க, என்ன மாட்டி விடுறிங்க. சின்ன ரோல் தான் கௌதம் சார் நடிக்க சொன்னார் நடிச்சிட்டேன்.”


எல்லா ஸ்டண்ட் மாஸ்டர்க்கும் ஒரு முத்திரை பதிக்க வீண்டும் என்ற ஆசை இருக்கும் உங்களுக்கு என்ன மாதிரி ஆசை?

எனக்கு தனியாக எந்த பெயரும் வாங்க வேண்டும் என்று ஆசையில்லை. அந்த கதையை மீறாமல், கதாபாத்திரத்தின் எல்லைகளை மீறாமல் சண்டை காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
 

‘தல’கூட  ஷூட்டிங் செய்த அனுபவம் எப்படி இருந்தது?

“சென்னைல நிறையா ஷூட் பண்ணினோம். எல்லாரிடமும் அக்கறையா இருப்பார். சண்டை காட்சிகளின்போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் கொள்வார். சிறு தவறு செய்தாலும் பெரியவர் சிறியவர் என்று பாராமல் உடனே ‘Sorry’ கேட்டு விடுவார். Sorry மற்றும் Thanks மனிதனின் Ego வை குறைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார். அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.  அவரது விடா முயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று. எதையும் முடியாது என்று கூறமாட்டார்.”

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழில் படங்களில் வேலை செய்கிறார்கள். அது பற்றி..
.

அது ஆரோக்கியமான விஷயம். அவர்களது ‘Work Style‘ வேற மாதிரி இருக்கும். முன்னரே அனைத்தையும் திட்டமிட்டு வேலை செய்வார்கள் . எல்லா வகையிலும் பாதுகாப்பு வழிமுறைகளை ஆய்வு செய்து வேலையை தொடங்குவார்கள்.

எப்படி ‘On-Spot’ல திட்டமிடுகிறீர்கள் என்று அவர்கள் நம்மை பார்த்து கேட்பதுமுண்டு. ஹாலிவுட், பாலிவுட் என்று நமது ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் வேலை செய்து வருகிறார்கள்.

by Swathi   on 19 Jan 2015  0 Comments
Tags: Thala   Ajith   Yennai Arindhaal   Stunt Silva   ஸ்டண்ட் சில்வா   அஜீத்   என்னை அறிந்தால்  
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.