|
||||||||
இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை |
||||||||
குருவின் மடியில் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட ஈஷாவின் புதிய வெளியீடுகளில் ஒன்றான “இமயத்தின் ரகசியங்கள்” புத்தகத்தைப் பற்றி ஒரு பார்வை இங்கே…
இமயம் பல்லாயிரம் ஆண்டுகளாகவே ஒரு புதிராக மக்களுக்கு இருந்துவருகிறது. ஞானம் தேடுபவர்களின் மனதில் முதலில் தோன்றுவது இமயம்தான். ஞானிகள், மக்களிடம் பகிர முடியாத தங்கள் ஞானங்களை எல்லாம் இமயத்தில்தான் சக்திஅதிர்வுகளாக பொதித்து வைத்திருக்கிறார்கள்.
சார்தாம் என்று சொல்லக்கூடிய நான்கு முக்கிய புனிதத் தலங்களும் இமயத்தில் இருக்கின்றன. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே ஒருமுறையாவது இமயத்தை தரிசிக்க வேண்டும் என்று சத்குரு சொல்வார்.
ஒவ்வொரு ஆண்டும், தியான அன்பர்களை இமயத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் சத்குருவிற்கு இருந்ததுண்டு. அப்போது பல்வேறு காலகட்டங்களில், இமயத்தின் பல இடங்களில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தின் கேள்வி-பதில்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
காந்திசரோவரில் சத்குரு அவர்களுக்கு நிகழ்ந்த ‘நாதப்பிரம்மா’ அனுபவம்;
ஈஷா அன்பர்களிடம் இருந்த சத்குருவின் புகைப்படத்தை கண்ட ஒரு யோகினி இவர் இன்னும் உடலோடு இருக்கிறாரா என்று அதிசயித்தது,
“நான்தான் சிவா” என்று ஈஷா அன்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சாது, சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு சத்குரு வந்தவுடன், தானாகவே ஓடிச் சென்று கீழே விழுந்து அவர் பாதத்தில் நமஸ்கரித்தது,
மேலும் சத்குரு சென்ற பிறவிகளில் தனது சீடர்களுடன் இமயத்தில் தரிசித்த இடங்கள் என்று பல சுவையான சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
குருவின் மடியில் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட ஈஷாவின் புதிய வெளியீடுகளில் ஒன்றான “இமயத்தின் ரகசியங்கள்” புத்தகத்தைப் பற்றி ஒரு பார்வை இங்கே… இமயம் பல்லாயிரம் ஆண்டுகளாகவே ஒரு புதிராக மக்களுக்கு இருந்துவருகிறது. ஞானம் தேடுபவர்களின் மனதில் முதலில் தோன்றுவது இமயம்தான். ஞானிகள், மக்களிடம் பகிர முடியாத தங்கள் ஞானங்களை எல்லாம் இமயத்தில்தான் சக்திஅதிர்வுகளாக பொதித்து வைத்திருக்கிறார்கள். சார்தாம் என்று சொல்லக்கூடிய நான்கு முக்கிய புனிதத் தலங்களும் இமயத்தில் இருக்கின்றன. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே ஒருமுறையாவது இமயத்தை தரிசிக்க வேண்டும் என்று சத்குரு சொல்வார். ஒவ்வொரு ஆண்டும், தியான அன்பர்களை இமயத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் சத்குருவிற்கு இருந்ததுண்டு. அப்போது பல்வேறு காலகட்டங்களில், இமயத்தின் பல இடங்களில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தின் கேள்வி-பதில்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. காந்திசரோவரில் சத்குரு அவர்களுக்கு நிகழ்ந்த ‘நாதப்பிரம்மா’ அனுபவம்; ஈஷா அன்பர்களிடம் இருந்த சத்குருவின் புகைப்படத்தை கண்ட ஒரு யோகினி இவர் இன்னும் உடலோடு இருக்கிறாரா என்று அதிசயித்தது, “நான்தான் சிவா” என்று ஈஷா அன்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சாது, சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு சத்குரு வந்தவுடன், தானாகவே ஓடிச் சென்று கீழே விழுந்து அவர் பாதத்தில் நமஸ்கரித்தது, மேலும் சத்குரு சென்ற பிறவிகளில் தனது சீடர்களுடன் இமயத்தில் தரிசித்த இடங்கள் என்று பல சுவையான சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. |
||||||||
by Swathi on 29 Mar 2014 0 Comments | ||||||||
Tags: இமயம் ரகசியங்கள் சத்குரு இமயத்தின் ரகசியங்கள் Secrets Himalaya Sadhguru | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|