சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது மான் கராத்தே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்ததாக தனுஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
முதலில் இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமன்னா, அமலா பால் ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கதான் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக இருவரும் ஒத்து வராததால், இறுதியில் ஸ்ரீ திவ்யாவையே மீண்டும் புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஸ் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரித்து இருந்தார். இந்த படமும் வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது.
|