|
|||||
சிறுதானியங்களும் அதன் சிறப்பு பயன்களும் !! |
|||||
சோளம் : குழந்தையின் எடையை ஆரோக்கியத்துடன் கூட்டும், எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்து குறைவினால் வரும் ஆஸ்டியோபோராசிஸ் உள்ள பெண்களுக்குச் சோளம் கொடுக்கும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே கிடையாது. கேழ்வரகு (ஆரியம், கேவரு, ராகி, கோப்பை) : பாலை விட 3 மடங்கு அரிசியை விட 10 மடங்கு கால்சியம் கேழ்வரகில் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய்க்கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிக மிக அவசியமான உணவு கேழ்வரகு. கேழ்வரகில் "மித்தியானைன்" என்னும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருக்கிறது. அது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட பெரிதும் உதவும். கம்பு(பாஜ்ரா) : அரிசியை காட்டிலும் 8 மடங்கு கால்சியம் உள்ளது, வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாக தர வேண்டிய தானியம். லோ கிளைசிமிக் உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. குதிரைவாலி, வரகு, சாமை : குதிரைவாலி, வரகு, சாமை இவற்றில் செய்யும் சாதத்தில் புரதம், இரும்பு, உயிர்சத்து அதிகம், நார்ச்சத்து மிக அதிகம். நார்ச்சத்து இதய நாளங்களில் படியும் கொழுப்பை கரைக்கவும், சர்க்கரை அளவு திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு உதவுகிறது. |
|||||
by Swathi on 28 May 2014 2 Comments | |||||
Tags: Small Grains Solam Kelvaragu Kuthiraivali கம்பு கேழ்வரகு குதிரைவாலி | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|