LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF
- சிறுதானிய உணவுகள்

ராகி கொழுக்கட்டை (கேழ்வரகு கொழுக்கட்டை)

தேவையானவை :

1. ராகி மாவு - 1 கப்

2. பாசிப்பருப்பு - ஒரு சிறிய கப்

3. துருவிய தேங்காய் - 1/4 கப்

4. பொடித்த வெல்லம் - 3/4 கப்

5. ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை :

1. முதலில் ஒரு வாணலியில் பாசிப்பருப்பை போட்டு மூன்று நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கி, விசில் காற்று போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக வைத்துக் கொள்ளவும்.

2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு இரண்டு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அரை கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

4. பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

5. அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.

6. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ஆரோக்கியமான ராகி கொழுக்கட்டை ரெடி!!!

by Swathi   on 20 Dec 2015  0 Comments
Tags: Kolukattai   Ragi Kolukattai   Kelvaragu Recipes   Ragi Recipes   ராகி கொழுக்கட்டை   கொழுக்கட்டை   ராகி  
 தொடர்புடையவை-Related Articles
ராகி கொழுக்கட்டை (கேழ்வரகு கொழுக்கட்டை) ராகி கொழுக்கட்டை (கேழ்வரகு கொழுக்கட்டை)
கேழ்வரகு வாழைப்பூ வறுத்த சாதம் கேழ்வரகு வாழைப்பூ வறுத்த சாதம்
பால் கொழுக்கட்டை பால் கொழுக்கட்டை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.