|
|||||
சிறுகீரையின் சிறந்த 10 பயன்கள் !! |
|||||
சிறுகீரை சிண்டுக்கீரை இனத்தை சேர்ந்தது. இதன் தண்டுகள் பெரிதாக நீண்டும், இலைகள் சிறியதாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகக் கூடிய கீரை இது. சிறுகீரையை விஷக்கடி முறிவாகப் பயன்படுத்தலாம். சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளை அகற்றவல்லது. இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து போன்றவை மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச் சத்தும் மற்றும் புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. 100 கலோரி சக்தியைக் கொடுக்கவல்ல கீரை இது. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன. கண் எரிச்சல், கண் கட்டி, போன்ற பிரச்னைகள் குறையும். சிறுகீரையுடன் துவரம்பருப்பும். வெங்காயமும் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கடைந்து, தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும். கல்லீரலுக்கு வலிமையை கொடுக்கும். சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தருகிறது. ஆறாத புண்களை தீர்க்கிறது. கல்லீரல் நோய்களைத் தடுக்கிறது. சிறுகீரை ரத்த சோகையை நீக்கும். மலச்சிக்கலை தீர்க்க வல்லது. |
|||||
by Swathi on 08 Nov 2013 2 Comments | |||||
Tags: Siru Keerai Keerai Small Spinach சிறு கீரை கீரை Greens | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|