தேவையானவை :
1. முருங்கைக் கீரை - 2 கப் 2. வெங்காயம் - 1 (பொடித்தது)
3. சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
4. துருவிய தேங்காய் - 1/4 கப்
5. உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு :
1. எண்ணெய் - 2 டீஸ்பூன்
2. கடுகு - 3/4 டீஸ்பூன்
3. உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
4. வர மிளகாய் - 2
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் முருங்கைக் கீரையை போட்டு நீரை ஊற்றி நன்றாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
3. அடுத்து அதில் முருங்கைக் கீரையை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை போட்டு, நன்கு வதக்கி விடவும். வேண்டுமானால், அதில் சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி, மிதமானது தீயில் பத்து நிமிடம் கீரையை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
4. கீரையின் அளவு சுண்டி பாதியானதும் அதில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக் கீரை பொரியல் ரெடி!!!
|