LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- கட்டுரைகள்

ஈமெயில் பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி?

கடந்த அய்ந்தாண்டுகளில் இளைய சமூகம் ஈ மெயில் பயன்பாட்டினை அதிகரித்து வந்துள்ளது. தற்போது சாதாரண அஞ்சல் என்பது இல்லவே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஈ மெயில் இப்போது இளைய சமூகத்தால் எவ்வாறு உபயோகிக்கப் பட வேண்டும் என அறிந்து கொள்வது இன்றி அமையாதது. ஈ மெயில் நமக்கு பல வழிகளில் பயண பாடு உடையது. நாம் இதனை விழி வாய்ப்பு தேடும் சமயங்களில் கவர லெட்டர் எனப்படு முகப்பு அஞ்சலாகவோ அல்லது பொதுவான வர்த்தக காரியங்களுக்கு பயன்படும் தொடர்புக் கடிதமாகவோ பயன் படுத்தலாம். அப்போது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நமது ஈ மெயில் குறைந்தது 200 அல்லது 300 வார்த்தைகளை அடக்கியதாக இருக்க வேண்டும்.. அலுவலகக் கடிதங்கள் எழுதும் போது முகவரிகளை எவ்வாறு நாம் மற்ற கடிதங்களை எழுதுகையில் இடுகிறோமோ அவ்வாறே இட வேண்டும். முகப்பில் அனுப்புனர் கடிதம் அல்ல து பெருபர் முகவரி என்று இடலாம்.கடிதங்கள் குறிப்பிட்ட அளவில் அதாவது புல் பிளாக் லெட்டெர் அல்லது செமி ப்ளோக் லெட்டெர் என்று முழுதும் இடப்புறம் ஆரம்பிக்கும் ஒன்றாகவோ அல்லது இடம் வளம் என்று கடிதம் கலந்து எழுதப்பட்டதாகவோ முறையான ஒழுங்குடன் இருக்கலாம்.கடித ஆரம்பம் அய்யா என மரியாதை விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் ஒரு கடிதத்தை வோர்ட் பைலில் தயார் செய்து வைத்துக் கொண்டு பின் மெயிலில் வெறும் பிந்து அட்டச்மெண்ட் என்றும் கொடுக்கலாம். மெயில் முகவரி நல்ல தமிழில் இருப்பதும் கண்ணியமாக இருப்பதும் நல்லது.

 

உதாரணமாக தியாகு@ஜிமெயில் என்பது கண்ணியமாக உள்ளது. அதற்குப் பதிலாக செக்ஸ்ய்சர@ஜிமெயில்.கம என்பது போன்ற முகவரிகளையோ அல்லது தியாகுகமெஒச் ,தியகுஹர்டின் போன்ற முகவரிகளையோ பயன்படுத்தாதீர்கள் . அதே போல தலை எழுத்தினையும் அதிகம் குறிப்பாக ஆங்கில கடிதத்தில் பயன்படுத்தாதீர்கள் .

 

 கீழே உங்களுக்குத் தேவையான டிப்ஸ் ஐ வரிசைப்படுத்தி கொடுத்துள்ளேன் . வாசித்துப் பயன் பெறவும்.

1. உங்கள் ஈமெயிலுக்கு நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) எளிதில் கண்டறியமுடியாதபடி மிகவும் வலுவாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அதை மற்றவர்கள் கண்டுபிடித்து துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு உருவாகும்.

 

- உங்கள் கடவுச் சொல் குறைந்தது 12 எழுத்துக்கள் நீளம் உடையதாக இருப்பது நல்லது.

 

- உங்கள் ஈமெயில் ஐடியையே கடவுச் சொல்லாக பயன்படுத்த வேண்டாம்

 

- 1, 2, 3, 4, 5 அல்லது 111111 அல்லது 22222 அல்லது 33333 அல்லது abcdef, Asdfgh அல்லது உங்கள் நிறுவனப் பெயர் முதலான கடவுச்சொற்களை தவிர்ப்பது சிறந்தது.

 

2. குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் கடவுச்சொல்லை மாற்றவேண்டும்

 

3. உங்கள் கடவுச்சொல்லை வேறு எவா¢டமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. பிரபல நிறுவனங்கள் எதுவும் உங்கள் ஈமெயில் ஐடி கடவுச்சொல் விவரங்கள் தரச்சொல்லி கேட்பதில்லை.

 

4. உங்கள் அலுவலக உபயோக ஈமெயில் ஐடி-க்களை பொதுவான பாரம்களில் பயன்படுத்தவேண்டாம். அவை ஸ்பேமர்கள், ஹேக்கர்கள் முதலான ஆன்லைன் திருடர்கள் கைகளில் சிக்கிவிடும் அபாயம் உள்ளது. பொது பாரம்களில் உங்கள் ஈமெயில் ஐடிக்களை பதிவு செய்வதினால் உங்களுக்கு தேவையற்ற ஈமெயில்கள் வரும் மற்றும் உங்கள் அக்கவுண்ட்டில் அவர்கள் அத்துமீறி நுழைந்து முறைகேடாகப் பயன்படுத்தவும் கூடும்.

 

5. உங்கள் ஈமெயில் கிளையண்டில் (மைக்ரோசாப்ட் அவுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்டு முதலானவை) செய்திகளை டவுன்லோடு செய்து அவற்றை சர்வா¢லிருந்து அழித்துவிடுங்கள். உங்கள் இன்பாக்சில் ஆயிரக்கணக்கான செய்திகள் இருந்தால் அவை ஈமெயில் டவுன்லோடு ஆகும் வேகத்தை குறைக்கும், உங்கள் மெயில் திறக்கவும் நேரம் பிடிக்கும்.

 

6. உங்கள் இன்பாக்ஸில் ஒருவார மெயில் அல்லது 15 எம்பி-க்கு மேல் வைத்திருக்கவேண்டாம். ஏதேனும் காரணத்தால் இன்பாக்சில் வைத்திருக்க வேண்டி வந்தால் 7 நாட்களுக்கும் மேலான மெயில்களை தனி போல்டாரில் மாற்றி வைக்கவும்

 

7. வெப் மெயில் வசதியை பயணத்தின் போது மட்டும் பயன்படுத்தவும்

 

8. யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயில், முதலான இலவச ஈமெயில் சேவைகளை அளிக்கும் தளங்களுக்கு மொத்தமாக (பல்க்) செய்திகளை அனுப்புவதைத் தவிர்க்கவும். அப்படிச் செய்தால் உங்கள் டொமைன் மற்றும் ஐபி முகவரி முடக்கிவைக்கப்படும் அபாயம் உள்ளது.

 

9. 'சப்ஜெக்ட்' என்பதிலும் செய்தியின் "பாடி' பகுதியிலும் அனைத்து எழுத்துக்களும் கேபிடல் எழுத்துகளாக இருப்பதைத் தவிர்க்கவும்

 

10. அனைத்து எழுத்துக்களையும் கேபிடலாக டைப் செய்து அனுப்பப்படும் செய்திகள் ஸ்பேம் மெயிலாகக் கருதப்படும்

 

11. முன்பின் தொரியாத நபர்களிடமிருந்து வரும் மற்றும் சந்தேகத்துக்கு¡¢ய தலைப்புச் செய்திகளுடன் (சப்ஜெக்ட்) வரும் ஈமெயில்களை திறக்கவேண்டாம்.

 

12. அவற்றில் வைரஸ்கள் அல்லது மால்வேர்கள் இருக்கலாம்.

 

13. நீங்கள் ஒரு பொது இடத்தில் (சைபர் கபே) ஈமெயில் பயன்படுத்தினால் வீடு அல்லது அலுவலகம் திரும்பியவுடன் உங்கள் கடவுச்சொல்லை மறக்காமல் மாற்றிவிடவும்

 

14. புதிதாக ஏதும் செய்தி வந்துள்ளதா என்று அடிக்கடி பார்க்கவேண்டாம். 'புதிய செய்திகளை ஆட்டோமேட்டிக்காக செக் செய்யவும்' என்றிருப்பதை புதிய செய்திகளை 15 அல்லது 20 நிமிடங்களுக்கொருமுறை செக் செய்யவும்' என்று மாற்றி அமைக்கவும்.

 

நன்றி : ரா பாலகிருஷ்ணன்

by Swathi   on 20 Sep 2014  0 Comments
Tags: Email Problems   Minnanjal   ஈமெயில்   Minnanjal           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.