|
||||||||
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் |
||||||||
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் • (வெந்நீர்) வெளாவுதல், (தண்ணீர்) சேந்துதல்,(தலை) துவட்டுதல் • சட்டுவம், வாணலி, தாம்பாளம், சிப்பல் தட்டு, வெங்கலப் பானை, ஆப்பக்கூடு, கிண்டி, பாலாடை, கல்சட்டி, ஜோடுதவலை, கங்காளம், அருக்கஞ்சட்டி, குண்டான், ஏனம், கூஜா • முறம், ஜல்லடை, உரல், உலக்கை, ஏந்திரம், ஆட்டுக்கல், அம்மி, கல்லுரல் • (வெந்நீர்) அண்டா, சிம்னி, லாந்தர், அரிக்கேன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு, • பம்ப் ஸ்டவ், சீமை எண்ணெய், கழநீர் • (அரிசி) புடைக்கிறது, நோம்பறது, களையறது, (வாழைப்பூ) கள்ளன், மடல் • மடிக்கோல், வாங்கி, துரட்டுக்கோல், கொறடு, நடைவண்டி, பாக்குவெட்டி • உழக்கு, ஆழாக்கு, மரக்கால், படி, வீசை, பலம், மாகாணி, தம்படி, கழக்கோடி,பலக்கல், நாழி • குருணை, மணை, கோலக்குழாய் • குமுட்டி, விறகு, கோட்டை அடுப்பு, ஊதுகுழல், கொட்டாங்கச்சி, தடுக்கு • பலப்பம், சிலேட், சுருணை, தப்படி, எருமுட்டை, குதிர் • ஓடு,, கீத்து, வாரை, உத்தரம், மாடம், • திண்ணை, ரேழி,கூடம், மச்சு, தாவாரம், சமையல் உள், அடுக்களை, முத்தம் (முற்றம்), வெந்நீர் உள் • பரண், அட்டம், பிறை, எரவாணம், நிலப்படி, தொட்டி முத்தம், வெந்நீர் உள், விசுப்பலகை • கொல்லை, புழக்கடை, கிணறு, கக்கூஸ் • ஜகடை, ராட்டினம், தொட்டி, தோய்க்கிற கல், • பொத்தான், நிஜார், சொக்காய், • ஈயம் பூசறது, கலாய் பூசறது, மந்திரிக்கிறது, • (நெய்,ரசம்) குத்து • உலை பூர விடு, வெழுமூணா (அரைக்கிறது) • (வாழை) சீப்பு, (வாழைப்பூ) காக்கா, பிரண்டை • உப்புசம், கீக்கடம், நமநம • தூரமணாள், திரண்டுகுளி • மக்கிளிச்சுக்கிறது, பன்னாடை, (வெற்றிலை) கவுளி • வயக்காடு (வயல்) • (பல்லாங்குழி) பசு, காசு தட்டறது, தாயம், ஏழு கல்லு, பாண்டி, பச்சைக்குதிரை, அப்பீட், பேந்தா, குந்துமணி • சூடுகொட்டை, கொடுக்காப்புளி, • ஜடை குச்சு, அரணாக் கயறு, சிலாம்பு, கழனிப் பானை, தவிடு, உமி • ரசவாங்கி • பொருமறது (வயறு), கொட்டாங்கச்சி, விளக்குமாறு, தலை துவட்டரது • நண்டும் சிண்டும் / குஞ்சும் குளுவானும், பக்ஷணம், கடுதாசி • செறா (small piece of wood), ளொலக்கம், இண்டு- இடுக்கு, நொளப்பரது • இலுப்ப சட்டி, ஜாடி, சம்படம், உரை (Pillow Cover) • நமட்டு (சிரிப்பு), இங்கா, பிசிறு, கொசுறு, தான்தோன்றி தனம் • பிசகரது (ஸ்ருதி), சொரஸம், மொள்ளரது (தண்ணீர்), குறும்பை
-திரு.ராஜப்பா
|
||||||||
by Lakshmi G on 02 Jan 2021 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|