இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2774 சீனியர் பிரிவு மற்றும் ஜூனியர் பிரிவு பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எஞ்சினியரிங் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ எஞ்சினியர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 2774
வயது வரம்பு : சீனியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 20 - 34க்குள் இருக்க வேண்டும்
ஜூனியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18-32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
சம்பள விவரம் : சீனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
ஜூனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. ஆண்களுக்கு ரூ.100/-. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 26.7.2015.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 22.08.2015 மற்றும் 5.9.2015 தேதிகளில் நடைபெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு பற்றிய விரிவான தகவல்கள், வயது வரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://chennai.rrbonlinereg.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
|