LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- கல்வி

பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.

                 

அறிவுடையவரே எல்லாம் உடையவர் என்றும் மதிநுட்பம் மனிதனுக்கு வேண்டும் என்றும் சொல்பவர் வள்ளுவர். மனிதர்க்குள்ள அறிவை இயல்பாக உள்ள இயற்கையறிவு, கல்வி, கேள்விகளால் வளரும் செயற்கை அறிவு என இரு வகைப்படுத்திக் கூறுவர்.   

 

சமீபத்தில் ஊருக்குச் சென்ற போது  மகிழுந்தில் நாங்கள் பயணம்  செய்யும் போது  ஒரு வயதானர் எங்களிடம் உதவி கேட்டார் அடுத்த ஊரில் என்னை இறக்கி விட்டுவிடுங்கள் என்று  முதலில் தயங்கினாலும் பின்னர் அவரின் தோற்றம் விவசாயி என உணர்த்தியது தயங்காமல் மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் போது அவரை பற்றி அறிந்து கொண்டேன். அவர், ஒரு விவசாயி என்றும் தன் நிலத்தில் நெல் பயிரிட்டிருப்பதாகவும் விரைவில் அறுவடை செய்யவிருப்பதாகவும் கூறினார்.  மூன்று மாதத்திற்கெல்லாம் நெற் பயிர்கள் அறுவடைக்கு வந்துவிடும் இந்த காலத்தில் கிடைக்கும் நெல் மற்றும் செயற்கை உரங்களைக் கொண்டு 100(ஜே13 )  நாளில் அறுவடை செய்யமுடியும் என்றார்.

 

நெற்பயிர் என்பது ஒரு வருடப் பயிராக அந்த காலத்தில் இயற்கை உரங்களைக் கொண்டு விவசாயம் செய்தார் என்னுடைய அப்பா ஆனால் இப்பொழுது மூன்று மாதத்தில் நெற்பயிர் அறுவடை செய்கிறார்களே!!. என்கிற, எண்ணத்தில் மூழ்கினேன். இயற்கை உணவு, என்னும் புதிய புரட்சியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கும் இந்த காலத்தில் குழந்தைகளின் கல்வியும் அப்படித்தானே உள்ளது. இயற்கை கல்வி, என்கிற  இயற்கை உரத்திற்குப் பதில் பள்ளி கல்வி, என்கிற செயற்கை உரத்தைக் கொண்டுதானே வளர்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு வைத்து குழந்தைகளின் அறிவை  அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

 

கல்வியில்  வல்லரசு

பின்லாந்து உலகில் தரமான கல்வியைத் தரக்கூடிய நாடு என்பதால் தான் அதனைக் கல்வியின் வல்லரசு என்று அழைக்கிறோம் 100 விழுக்காடு மக்கள்   எழுத்தறிவு பெற்றவர்கள் அதனால் தான்  கல்வியில் முதலிடம்.  தொடக்க கல்வி என்பது 7 வயதில் தொடங்குகிறார்கள்.  வகுப்பறைக்குப் பக்கத்தில் ஓய்வு அறை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு, தேவையென்றால், ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

 

ஆண்டுக்கு  பாதி  நாள்  பள்ளி விடுமுறை  என்பதால் பள்ளி என்கிற மன அழுத்தம் இல்லை உற்சாகம் மட்டுமே தழைத்தோங்கும் சூழ்நிலையை அவர்களுக்கு அந்த நாடு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. ஆற்றல் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றாகவே நடத்துகின்றார்கள். இத்தகு, மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் அக்குழந்தைகள் அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் ஒன்றும் இல்லை.

 

பணிவும் மனவுறுதியும் கொண்ட மகிழ்ச்சியாக வாழும் மனிதர்கள் என்று கூறினால் அதற்கு, முன்னுதாரணமாக திகழ்பவர்கள் ஜப்பானியர்கள்தான். உலகம் அவ்வாறுதான்   அவர்களைப் பார்க்கிறது. இவ்வாறான  பண்புகள்  சிறுவயது   முதலே ஜப்பானிய சிறார்களுக்கு  ஊட்டப்படுகின்றது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் பாடசாலையாகும்.

 

நம் நாட்டில்  இன்றைக்குத் தொடக்கப் பள்ளி என்பது பெரும்பாலும் தனியார் வசம் இருக்கும் ஒரு வணிக மையமாகவே மாறி இருக்கிறது.,செய்கையான இந்த பள்ளி கற்றலின் வழியாக, குதிரைப்  பந்தயத்தைப்  போல்  பள்ளிக்கு  ஓடிக்கொண்டிருக்கும் நம் குழந்தைகளுக்குச் செயற்கையான இந்த கல்வியை விடவும் இயற்கையான கல்வியின் அவசியத்தைக் கூறவிருக்கிறேன். பள்ளி என்னும் வியாபாரத்தைக் குறியாக இருப்பவர்கள் நம் பிள்ளைகளை எப்படி மேம்படுத்துவார்கள்.

 

 

-திருமதி.பாக்கியலட்சுமி வேணு.

by Swathi   on 19 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...? எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.