|
|||||
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! |
|||||
நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. பல்வேறு காரணங்களால் இத்திட்டம் முழுமையாக செயல்படாமல் உள்ளது. முக்கூடல் அருகே பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளிக்கு தேவையான பொருட்களை அவ்வப்போது நன்கொடையாக வழங்கி வருகிறது. இதுவரை 2 கம்ப்யூட்டர்கள், 2 லேப்டாப்கள், இரும்பு அலமாரி, ஒலிபெருக்கி போன்றவை ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து, பள்ளிக்கு வழங்கி உள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ‘ஸ்மார்ட்’ வகுப்பறை துவங்க நிதி ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் ரூ.35 ஆயிரம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளியில் ஏற்படுத்தியது. இதன் அறிமுக கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சங்கரம்மாள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளிக்கு மாவட்டத்தின் தூய்மை பள்ளி விருது கிடைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதியதாக துவக்கப்பட்டுள்ள ‘ஸ்மார்ட்’ வகுப்பறையில் தற்போது 8ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் படக்காட்சிகளுடன் விளக்கி கற்பிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
|||||
by Mani Bharathi on 11 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|