|
|||||
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? |
|||||
பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடந்தது. இந்தக் கலந்தாய்வில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்பதைத் தவிர்த்து உள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வரவில்லை. இதனால், மாணவர் சேர்க்கை இல்லாமல் காலியாக இருக்கும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, அதிகரித்துள்ளது. இந்தத் தகவலைத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை, ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதலே குறையத் தொடங்கியது. அதேசமயம் கலை மற்றும் அறிவியல் துறைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கிடையில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மென்பொருள் நிறுவனங்கள் தொடர்பான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின. இதன் காரணமாகத் தொழில்நுட்ப பணியாளர்களின் தேவைகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, 2018-ஆம் ஆண்டு முதல் பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த ஆண்டும் 1.33 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தனர். 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்குச் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தங்களுடைய நிர்வாக ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் 30 ஆயிரம் இடங்களை அரசிடம் ஒப்படைத்து உள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற்றன. 15 ஆயிரம் பேர் புறக்கணிப்பு இருப்பினும், 1லட்சத்து,33 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து இருப்பதால் கலந்தாய்வு தொடங்கும்போதே 39,148 இடங்கள் காலியாக விடப்படும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பி.இ. படிப்புகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறையும். மேலும், சேர்க்கையின்றி காலியாகும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. |
|||||
by Mani Bharathi on 28 Jun 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|