சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளின் அட்டவணை இணைய தளத்தில் வெளியானது..
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க உள்ளது..
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15- ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3- ந் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 21- ல் தொடங்கி மார்ச் 29-ந் தேதி முடிவடைகிறது. அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை விவரங்கள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன
|