|
||||||||
இறைவனின் சந்நிதியில் விளக்கேற்றுவதன் பயன்கள் |
||||||||
இறைவனின் சந்நிதியில் விளக்கேற்றுவதன் பயன்கள் ஜோதிடர் வேல்முருகன்
வீட்டிலோ அல்லது கோவிலிலோ கடவுளிடம் பிரார்த்தனையின்போது விளக்கேற்றி வழிபடுகிறோம். அந்தக்காலத்தில் விளக்கு ஏற்றுவதற்கு முக்கியமான காரணம் இருட்டை நீக்கி ஒளி பெறுவதற்காகத்தான். விளக்கின் வெளிச்சத்தில் கடவுளைத் தரிசனம் செய்ய விளக்கு பயன்பட்டது. தற்காலத்தில் நவீனமான பிரகாசமான மின்விளக்கின் ஒளியே அதிகமாக இருப்பதால் சம்பிரதாயமாக விளக்கு ஏற்றப்படுகிறது. நேற்று பயன்படுத்திய அதே திரியை பெரும்பாலோர் விளக்கேற்ற மறுபடியும் பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். இறைவனுக்கு ஒருமுறை நிவேதனம் செய்யப்பட உணவுப்பண்டங்கள், பழங்கள், பால், மலர்கள், மாலைகள் ஆகியவற்றை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. அதைப்போலவே ஒருமுறை விளக்கெரியப் பயன்படுத்திய திரியை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் புதிய திரியைக் கொண்டே விளக்கேற்றவேண்டும்.
பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி நமக்கும் இறைவனுக்கும் ஒரு தூதனாகச் செயல்படுகிறது. நம் பிரார்த்தனைகளை கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு செல்லும் தூதனாக அக்னி செயல்படுவதால் வெளிச்சத்திற்காக மட்டுமின்றி நம் எண்ணங்கள் இறைவனிடம் சென்று அடைவதற்காகவே நாம் விளக்கேற்றுகிறோம். இதனால்தான் திருமணதின்போதும் ஹோமங்கள் செய்து அக்னி சாட்சியாக திருமணங்கள் செய்யப்படுகிறது. திருமணச் செய்தி இறைவனிடம் அக்னியின் மூலமாக சென்று சேர்கிறது. ஹோமம் என்பது அதிகப் பொருள் செலவில் செய்யப்படும் பிரார்த்தனை. விளக்கேற்றுதல் சுலபமான எளிமையான பிரார்த்தனை. நம் பிரார்த்தனைகள் நிறைவேற வீட்டிலும், கோவிலிலும் புதிய திரியைக் கொண்டு விளக்கேற்றி இறைவனின் அருளைப் பெறுவோம்! |
||||||||
Benefit of lighting lamp during prayer | ||||||||
Lighting lamp during prayer is very essention to make our prayer effective. We transfer our prayer through light to God. |
||||||||
by Swathi on 27 Jul 2012 0 Comments | ||||||||
Tags: light lamp prayer god message messenger reuse of lamp | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|