LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன்

இறைவனோடு ஒரு தொடர்பாடல்

என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!!!

நீங்கள் அழைக்கும் நபர்
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் ....
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

இறைவா தயவு செய்து ...
இணைப்பை துண்டித்துவிடாதே....
உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு ....
நீ துண்டிக்கும் வரையும் நான் ...
துண்டிக்கபடமாட்டேன் என்றார் ...
இறைவன் ......!!!
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

உன் படைப்பில் ஏன் இத்தனை ....
வேறுபாடுகள் - அறிவாளி ...
அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ...
படித்தவன் படிக்காதவன் ....
இன்னும் இன்னும் எத்தனையோ ....
ஏன் இத்தனை வேறுபாடுகள் ....?

இறைவன் சிரித்துகொண்டு ...
சொன்னார் என் படைப்பில் ...
வேறுபாடு என்றும் இல்லை ...
உங்கள் எண்ணத்தாலும் ....
செயலாலும்தான் இத்தனை ...
வேறு பாடுகள் நீங்கள் தான் ...
வேறு படுத்தினீர்கள்
வேறுபடுகிறீர்கள் என்றார் ....!!!

இப்போதும் பார் நீ கூட
இறைவனோடு பேசுகிறாய் ...
என்று உன்னோடு ஆழ்மனதோடு ....
பேசுகிறாய் -கண்டு பிடித்துவிட்டாய் ....
கடலின் பாதையை .....!!!
ஒன்றுமே சொல்லாமல் இறைவன் ...
போய் விட்டார் - மன்னிக்கவும்
என்னுள் அடங்கிவிட்டார் .....!!!
எத்தனை உண்மையான வசனம் இது ....!!!

 

 - கவிப்புயல் இனியவன்

by Swathi   on 27 Mar 2016  0 Comments
Tags: Kadavul   Kadavul Kavithai   God Poetry Tamil   Iniyavan   Aanmeega Kavithai   ஆன்மீக கவிதை   கடல் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
முதுமையின் வலிகள் முதுமையின் வலிகள்
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உன் காதல் வேண்டும் .....! உன் காதல் வேண்டும் .....!
நீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன்
என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! - கவிப்புயல் இனியவன் என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.