LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் (Tamil Baby Name )

தமிழ்ப்பெயர்கள் பொது பொருள்கள்

நன்றி: தமிழ் வளர்ச்சிக்கழகம்

அனைத்திலும் விடுபட்டவை

அகன் - உள்ளத்தன்
அஞ்சான் - அஞ்சாதவன், அச்சமற்றவன்
அஞ்சி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர்
அண்ணல் - தலைமைப்பண்புடைவன்
அத்தி - தமிழரசன் ஒருவனின் பெயர்
அப்பன் - மேலோன்
அம்பி - ஓடம்
அமுதன் - இனியவன், அமுதத்தையொத்தவன்
அமுது - இனிமை
அரசன் - வேந்தன்
அரசு - வேந்து
அரியன் - அருமையானவன், அரிபோன்றவன்
அருவி - நீரூற்று, மலையின்வீழ்புனல்
அலை - நீரலை, நீர்த்திரை
அழகன் - அழகானவன்
அழகு - எழில்
அறவன் - அறமுடையவன்
அறவோன் - அறமுடையவன்
அறிஞன் - அறிவுடையவன்
அறிவன் - அறிவுடையவன்
அறிவு - அறிவுடையவன்
அன் - ஆண்பால்ஈறு
அன்பன் - அன்புடையவன்
அன்பு - அன்புடைமை


ஆளன் - ஆள்பவன்
ஆளி - ஆள்பவன்
ஆற்றல் - திறனுடையவன்
ஆற்றலன் - திறலன், திறலோன்


இசை - புகழ், பண்
இசைஞன் - பாடகன்
இயன் - பின்னொட்டு
இன்பம் - உவகை, மகிழ்ச்;சி
இன்பன் - மகிழ்ச்சியுடையவன்
இனியன் - இனிமையானவன்


உடையான் - உடையவன்
உரவோன் - உறுதியுடையவன்
உருவன் - உருவமுடையவன்
உழவன் - உழுபவன்
உறைவோன் - வாழ்பவன் - தங்குபவன்


ஊரன் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்
ஊரான் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்
ஊரோன் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்


எரி - நெருப்பு
எழிலன் - அழகன், எழுச்சியுடையவன்
எழிலான் - அழகன், எழுச்சியுடையவன்
எழிலோன் - அழகன், எழுச்சியுடையவன்
எழினி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர்
எளியன் - எளிமையானவன்
எளியோன் - எளிமையானவன்


ஏந்தல் - மேலோன், தலைமைப்பண்புடையவன், உயர்ந்தோன்
ஏந்தி - மேலோன், தலைமைப்பண்புடையவன், உயர்ந்தோன்
ஏரன் - உழவன், அழகன், எழுச்சியுடையவன்
ஏறு - ஆண்புலி, ஆணரிமா, காளை


ஐயன் - தலைமைப்பண்பினான், மேலோன்
ஐயா - தலைமைப்பண்பினான், மேலோன்


ஒலி - ஓசை
ஒலியன் - ஒலிப்பவன்
ஒளி - வெளிச்சம்
ஒளியன் - ஒளியையுடையவன்


ஓவியன் - சித்திரம்வரைபவன்

கடல் - பருமை, பெருமை, மிகுதி
கண்ணன் - கண்போன்றவன், கண்ணில்நிற்பவன்
கண்ணு - கண்போன்றவன், கண்ணில்நிற்பவன்
கணை - அம்பு
கதிர் - பகலவன், ஞாயிறு, சுடர்,கூலக்கதிர்
கதிரவன் - பகலவன், ஞாயிறு, சுடர்
கதிரன் - பகலவன், ஞாயிறு, கதிரவன், சுடர்
கதிரோன் - பகலவன், ஞாயிறு, கதிரவன், சுடர்
கரை - எல்லை
கலை - கல்;வி
கலைஞன் - கல்வியுடையவன்
கழியான் - கழிநிலத்தவன்
கனல் - நெருப்பு
கனி - பழம், இனிமை

கா
காடன் - காட்டிலுறைபவன், காடுடையான்
காரி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்
காவலன் - காப்பவன்

கி
கிழான் - உரிமையுடையவன்
கிள்ளி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்
கிளி - கிள்ளை

கீ
கீரன் - கழகப்புலவரொருவர் பெயர்

கு
குடிமகன் - குடிப்பிறப்புடையோன், குடிப்பிறந்தோன்
குமரன் - இளமையுடையவன், இளைஞன்
குரிசில் - உயர்ந்தோன், தலைவன், பெரியோன்
குளத்தன் - குளத்தையுடையவன்
குன்றன் - குன்றிலுறைபவன், குன்றையுடையவன், குன்றனையன், பெரியோன்

கூ
கூடலன் - கூடனிலத்தவன்
கூத்தன் - ஆடுபவன்

கே
கேழன் - நிறத்தன்
கேள்வன் - அன்பன், உறவினன், நண்பன்

கொ
கொடி - கொடி
கொடியோன் - கொடியையுடையவன்
கொழுந்து - சுடர், இளந்தளிர், இளமை, மென்மை
கொற்றவன் - வேந்தன், வெற்றியுடையவன், காவலன்
கொற்றன் - வெற்றியுடையவன்
கொன்றை - ஒருமரம்

கோ
கோ - வேந்தன்
கோடன் - மலையன்
கோதை - தமிழரசன் ஒருவன்பெயர், மாலை
கோமான் - அரசன், வேந்தன்
கோவன் - அரசன், வேந்தன்
கோன் - அரசன், வேந்தன்

சா
சந்தனம் - மணங்கமழ்மரம், மணச்சாந்து
சாந்து - சந்தனச்சாந்து
சாரல் - பக்கமலை
சான்றோன் - பெரியோன்
அன்பு, நாண், ஒப்புரவு,
கண்ணோட்டம் (அருள்), வாய்மை
ஆகிய ஐந்து குணங்களுடையவன்







 
சீ
சீரன் - சிறப்புடையவன்
சீராளன் - சிறப்புடையவன்
சீரோன் - சிறப்புடையவன்

சு
சுடர் - ஒளி
சுடரோன் - ஒளியுடையவன்
சுனை - நீர்ச்சுனை
சுனையான் - நீர்ச்சுனையையுடையவன்

சூ
சூடன் - அணிந்தவன்
சூடி - அணிந்தவன்

செ
செந்தில் - ஓரிடப்பெயர்
செம்மல் - தலைமைப்பண்புடையவன்
செல்வன் - செல்வமுடையவன்
செழியன் - பாண்டியவரசர் குலப்பெயர்
சென்னி - சோழவரசர் குலப்பெயர்

சே
சேந்தன் - செம்மையானவன், சிவந்தவன்
சேய் - குழந்தை, சிவந்தவன்
சேரலாதன் - சேரர்குலப் பேரரசன் ஒருவன்பெயர்
சேரன் - சேரமன்னர் குலப்பெயர்
சோலை - பொழில்
சோலையன் - சோலையையுடையவன்
சோழன் - சோழவரசர் குலப்பெயர்


தகை - தகுதியுடையவன், தகைமையுடையவன்
தகையன் - தகுதியுடையவன், தகைமையுடையவன்
தங்கம் - தங்கம்
தங்கன் - தங்கம் போன்றவன், தங்கத்தையுடையவன்
தணலன் - நெருப்னையவன்
தணிகையன் - தணிகை என்னும் இடத்தைச்சேர்ந்தவன்
தம்பி - பின்பிறந்தவன், இளையவன்
தமிழ் - இனிமை, நீர்மை
தமிழன் - தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவன்
தலைவன் - முதன்மையானவன், முதல்வன்
தழலன் - நெருப்பனையன்
தழலோன் - நெருப்பனையன்
தனையன் - மகன்

தா
தாரான் - மாலையணிந்தவன்
தாரோன் - மாலையணிந்தவன்
தாளன் - முயற்சியுடையவன்
தானையன் - படையுடையவன்


தி
திண்ணன் - உறுதியுடையவன்
திருவருள் - அருளுடையவன்
திருவன் - செல்வமுடையவன்
திறத்தன் - திறமையுடையவன், தன்மையுடையவன்
திறல் - திறமையுடையவன்
திறலோன் - திறமையுடையவன், தன்மையுடையவன்

தீ
தீ - நெருப்பு

து
துணை - உதவி
துணைவன் - உதவுபவன், நட்பினன், துணைநிற்பவன்
துரை - மேலானவன்
துறை - துறைசார்ந்தவன்
துறைவன் - கடனாடன், நெய்தல்; நிலத்தவன், துறைசார்ந்தவன்

தூ
தூயவன் - தூய்மையானவன், பண்புடையோன்
தூயன் - தூய்மையானவன், பண்புடையோன்
தூயோன் - தூய்மையானவன், பண்புடையோன்

தெ
தெய்வம் - மேலோன்
தென்றல் - இளங்காற்று
தென்னவன் - தென்னாட்டவன், பாண்டியர் பெயர்
தென்னன் - தென்னாட்டவன், பாண்டியர் பெயர்

தே
தேவன் - மேலோன்
தேறல் - தேன்
தேன் - இனியவன், தேனனையவன்

தொ
தொடை - மாலை

தோ
தோணி - ஓடம்
தோழன் - தோழமையுடையவன், துணைவன்
தோன்றல் - தலைவன், மேலோன்


நம்பி - ஆடவருட்சிறந்தவன்
நல்லன் - நல்லவன்
நல்லோன் - நல்லவன்
நன்னன் - தமிழ்ச்சிற்றரசன் ஒருவன் பெயர், நன்மையுடையவன்

நா
நாகன் - தமிழர் பண்டைக்குலப்பெயர்
நாடன் - நாட்டையுடையவன,; நாட்டைச்சார்ந்தவன்
நாவன் - நாவில் வல்லவன், சொல்வன்மையுடையவன்

நி
நிலவன் - நிலவுபோன்றவன்
நிலவு - நிலவுபோன்றவன்

நெ
நெஞ்சன் - உள்ளமுடையவன்
நெடியோன் - உயர்ந்தவன், பெரியோன்
நெறியன் - நல்வழிச்செல்வோன்

நே
நேயன் - அன்பன்
நேரியன் - நேர்மையானவன்


பகலவன் - ஒளியுடையவன், ஞாயிறு
பகலோன் - ஒளியுடையவன், ஞாயிறு
பரிதி - ஒளியுடையவன், ஞாயிறு

பா
பா - பாட்டு
பாடி - பாடுபவன்
பாண்டியன் - முதற்றமிழரசர் குலப்பெயர்
பாரி - தமிழ்க்குறுனிலமன்னன்பெயர்(வள்ளல்)
பாவலன் - பாவில்வல்லவன்

பி
பித்தன் - ஊன்றிய உணர்வுடையவன்
பிள்ளை - பிள்ளை
பிறை - பிறைமதி

பு
புகழ் - மேன்மை
புகழன் - புகழுடையவன்
புகழோன் - புகழுடையவன்
புதியவன் - புதுமையானவன்
புரவலன் - காவலன், அரசன்
புலவன் - புலமையுடையவன்

பூ
பூவன் - மலர்போன்றவன்

பெ
பெரியன் - பெருமையுடையவன், உயர்ந்;தோன், சான்றோன்.

பே
பேகன் - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்.

 

பொ
பொருநன் - போர்செய்பவன், ஒப்பானவன்
பொருப்பன் - மலைநாடன், மலைபோன்றவன்.
பொழில் - சோலை
பொழிலன் - சோலையையுடையவன்
பொறை - பொறுமையுடையவன், சேரர்குலப்பெயர்
பொறையன் - பொறுமையுடையவன்
பொன்னன் - பொன்போன்றவன், பொன்னையுடையவன்

போ
போர் - அமர்
போரோன் - போர்செய்பவன், போர்க்குணமுடையவன்


மகன் - ஆண்மகவு, ஆடவன்
மணி - மதிப்புடையவன், அழகுடையவன்
மதி - அறிவு, திங்கள், நிலவு
மருகன் - மரபினன், மருமகன்
மருதன் - மருதநிலத்தவன், வயலூரான்
மல்லன் - வீரன், போர்வலியன்
மலை - உறுதி, பெருமை
மலையன் - உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன்
மலையோன் - உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன்
மழவன் - இளமையானவன்
மள்ளன் - வலிமையுடையவன், இளைஞன், படைவீரன்
மறவன் - வீரன்
மன்னன் - அரசன்

மா
மா - செல்வம், பெருமை, வலி, அழகு
மாண்பன் - மாட்சிமையுடையவன்
மார்பன் - மார்பையுடையவன்
மாறன் - பாண்டியமன்னர் குலப்பெயர்
மான் - ஆண்பால் ஈறு
மானன் - மானமுடையவன்
மி
மின்னல் - ஒளி

மு
முகன் - முகத்தையுடையவன்
முகிலன் - முகில்போன்றவன்
முடி - தலைமை
முத்தன் - முத்துப்போன்றவன், முத்தையுடையவன்
முத்து - முத்துப்போன்றவன், முத்தையுடையவன்
முதல்வன் - தலைவன், முன்னவன்
முரசு - போர்முரசனையர், வெற்றிமுரசனையர்
முருகன் - அழகன்
முருகு - இளமை, அழகு
முறுவல் - நகையுணர்வுடையவன்
முறையோன் - நெறியுடையோன்
முனைவன் - முன்னவன், தலைவன், முதல்வன்

மெ
மெய்யன் வழுதி
மெய்யன் - உண்மையுடையவன்

மே
மேழி - கலப்பை (உழுபவன்)

மை
மைந்தன் - வீரமுள்ளவன், மகன், இளையவன்

மொ
மொழி - மொழி

மௌ
மௌவல் - முல்லை

யா
யாழோன் - யாழையுடையவன்


வடிவேல் - கூர்வேல்
வண்ணன் - அழகன்
வரம்;பன் - எல்லையானவன்
வல்லவன் - ஆற்றலுடையோன்
வல்லோன் - ஆற்றலுடையோன்
வலவன் - ஆற்றலுடையோன்
வழுதி - பாண்டியர் குலப்பெயர்
வள்ளல் - வரையாது வழங்குபவன்
வளத்தன் - வளமுடையவன்
வளவன் - வளமுடையவன்

வா
வாகை - வெற்றி, வெற்றிமாலை
வாணன் - ஆற்றலுடையவன்
வாள் - வாளனையவன்

வி
வில் - வில்லனையவன்
வில்லவன் - வில்லனையவன்
வில்லோன் - வில்லனையவன், வில்லையுடையவன்
விழியன் - கண்ணழகுள்ளவன், கண்ணுடையவன்
விளம்பி - சொல்லுபவன்
விறல் - வீரம், வெற்றி
விறலன் - வீரன், வெற்றியன்.
விறலோன் - வீரன், வெற்றியன்

வீ
வீரன் - வீரமுள்ளவன், மறமுடையோன்

வெ
வெண்ணி - ஓரூர்
வெற்பன் - மலைநிகர்த்தவன், மலையுடையவன்
வெற்றி - வெற்றியடைதல்
வெற்றியன் - வெற்றியுடையன்
வென்றி - வெற்றியுடையன்
வென்றியன் - வெற்றியுடையன்

வே
வேங்கை - புலி
வேந்தன் - காவலன், அரசன்
வேல் - கூர்ங்கருவி
வேலன் - வேலையுடையவன்
வேலவன் - வேலையுடையவன்
வேலோன் - வேலையுடையவன்
வேள் - விரும்பப்படுபவன்
வேளிர் - தமிழ்க்குறுநிலமன்னர்; குலப்பெயர்
(சேரர்)

 

 

by Swathi   on 09 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மூத்தோர் உலகு என்ற அமைப்பு தொடங்கப்பட்டது மூத்தோர் உலகு என்ற அமைப்பு தொடங்கப்பட்டது
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்:புதிதாக 10000 பெயர்கள் சேர்ப்பு உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்:புதிதாக 10000 பெயர்கள் சேர்ப்பு
தமிழ்ப்பெயர்களுக்கான ஒருங்கிணைந்த செயல்பாடாக  உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் தமிழ்ப்பெயர்களுக்கான ஒருங்கிணைந்த செயல்பாடாக உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்
தேமொழி அவர்களிடமிருந்து அவரது தந்தையார்  மருத்துவர் மு.சிவக்கண்ணு  அவர்கள் தொகுத்து மணமக்களுக்கு மன்றல் பரிசாகக் கொடுத்துவந்த நூல். தேமொழி அவர்களிடமிருந்து அவரது தந்தையார் மருத்துவர் மு.சிவக்கண்ணு அவர்கள் தொகுத்து மணமக்களுக்கு மன்றல் பரிசாகக் கொடுத்துவந்த நூல்.
குழந்தைக்குப் பெயர் வைக்க உதவும் இணையப் பக்கங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்க உதவும் இணையப் பக்கங்கள்
தமிழி பெயர்கள் கல்வெட்டுகளிலிருந்து எடுக்கப்பட்டவை தமிழி பெயர்கள் கல்வெட்டுகளிலிருந்து எடுக்கப்பட்டவை
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்
தமிழ்ப்பெயர்கள் குறித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் முன்னெடுப்பு தமிழ்ப்பெயர்கள் குறித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் முன்னெடுப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.