LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    பாடல்கள் Print Friendly and PDF

தாலாட்டுப் பாடல்

ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!

ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்

பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !

உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?

ஆராரோ  அரிரரோ
அரிரரோ அராரோ

அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே  யடிச்சரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள்  விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து  வைப்போம்

மாமன் அடித்தானோ
மல்லி பூ சென்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங்  கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே

ஆராரோ  அரிரரோ
அரிரரோ அராரோ

அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

by Swathi   on 01 Feb 2013  20 Comments
 தொடர்புடையவை-Related Articles
பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது
அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக
கிட்டிப் புள்ளு கிட்டிப் புள்ளு
கிள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி
வினா விடை வினா விடை
கண்ணாம்பூச்சி கண்ணாம்பூச்சி
ஊஞ்சல் பாட்டு ஊஞ்சல் பாட்டு
நண்டூருது நரி ஊருது நண்டூருது நரி ஊருது
கருத்துகள்
01-Aug-2017 16:29:01 Velvizhi said : Report Abuse
தாலாட்டு எப்படி பாடுவது என்று தெரியவில்லை. . இதனுடைய ஆடியோ கிடைக்குமா ? ஆடியோவை கேட்டு பாடுவதற்கு.
 
23-Jun-2017 18:08:20 லோகு said : Report Abuse
Audio of this needed.. link pls.. Good to kmow!.. thanks
 
14-Feb-2017 02:38:36 தமிழ் Selvam said : Report Abuse
கொன்னையூர் ஏரியா வைந்தானை, கும்மி பாடல்கள் தொகுப்பு கிடைக்குமா? கிடைத்தால் தரமுடியுமா ?
 
12-Aug-2016 06:06:13 Jamuna said : Report Abuse
Intha padalgalai audio vaga pathivirakkam seiya mudiyuma
 
02-Aug-2016 05:30:07 murugesh said : Report Abuse
அருமையாய் உள்ளது .
 
26-Jul-2016 05:23:00 suseela said : Report Abuse
ஞானசம்பந்தர் பாடிய கண்ணன் தலாட்டுப் பாடல் தர முடியுமா?
 
15-Jun-2016 08:42:33 Arun said : Report Abuse
Nattar pedal innum bala vendum .
 
27-Mar-2016 00:20:56 Yuga said : Report Abuse
இதன் audio கிடைக்குமா
 
16-Feb-2016 08:16:26 kiru said : Report Abuse
நட்டார் பாடல் பட்டிய விடயங்கள்
 
07-Feb-2016 06:14:09 அனுஷா said : Report Abuse
கிராமிய தெய்வப் பாடல் தர முடியுமா?
 
10-Jan-2016 11:09:10 Bassmandurai.A said : Report Abuse
ஞானசம்பந்தர் பாடிய கண்ணன் தலாட்டுப் பாடல் தர முடியுமா?
 
16-Jul-2015 09:25:31 Thenmozhi said : Report Abuse
என் தம்பி பையனுக்காக "குதிரை மேலே ஏறிச்சென்றார் ராஜா தேசிங்கு" பாடல் வரிகளை கண்டுபிடித்து தர முடியுமா? தேன்மொழி
 
14-Mar-2015 07:17:12 anojan said : Report Abuse
சூப்பர்!!!! சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை
 
01-Mar-2015 06:59:20 விக்னேஷ் said : Report Abuse
Nalla paralgal kondullulathu
 
23-Feb-2015 06:12:38 எ.ல்.shehan said : Report Abuse
என்னும் பல பாடல்களை இணைத்து கொள்ளவும்
 
10-Feb-2015 06:37:19 aishwariyaa said : Report Abuse
தன்க்யௌ வெரி மச்
 
10-Feb-2015 06:37:12 aishwariyaa said : Report Abuse
தன்க்யௌ வெரி மச்
 
10-Feb-2015 06:37:10 aishwariyaa said : Report Abuse
தன்க்யௌ வெரி மச்
 
23-Dec-2014 01:17:18 nabeela said : Report Abuse
சொல்ல வார்த்தைகளே இல்லை
 
04-Dec-2014 10:35:58 manoranjan said : Report Abuse
அருமை!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.