|
|||||
தங்க மீன்கள் - திரை விமர்சனம் ! |
|||||
![]() நடிகர், நடிகைகள் : ராம், சாதனா, ஷெல்லி கிஷோர்
இசை : யுவன் சங்கர் ராஜா
இயக்கம் : ராம்
தயாரிப்பு : கெளதம் வாசுதேவ் மேனன்
பள்ளிக்கட்டணத்தையே செலுத்த முடியாத தந்தையிடம், மகள் ஆசை ஆசையாக வோடபோன் நாயைக் கேட்டால் என்னவாகும் என்பதே படத்தின் முழு கதை.
பாத்திரக்கடையில் பாலிஸ் போடும் வேலை பார்க்கிறார் ராம், அங்கு ஆறு மாத சம்பள பாக்கி இருந்தாலும், மகளுக்காக வேலை பார்க்கிறார். இதனால் மகளின் பள்ளிக் கட்டணத்தை கட்டமுடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் குடும்பச் சூழ்நிலை காரணமாக கேரளாவுக்கு செல்கிறார் ராம். திரும்பி வர நினைக்கும் போது மகள் வோடபோன் நாய்க்குட்டி வேண்டும் என கேட்கிறாள். நாய் குட்டி விலை சுமார் ஆயிரம், ரெண்டாயிரம் இருக்கும் என நினைத்து ராம் கடைக்கு போக, அங்கு நாய் குட்டியின் விலை 25,000 என்றதும் அதிர்ந்து போகிறார். இந்நிலையில் மகளோ , அப்பா நாய் குட்டி வாங்கி வரமாட்டார் என நினைத்து குளத்தில் விழுந்து, இறந்து, தங்க மீனாகி விடலாம் என முடிவு செய்கிறார். இறுதியில், மகள் தங்க மீன் ஆனாளா அல்லது ராம் நாய்க்குட்டி வாங்கி வந்து மகளை மீட்டார என்பது தான் படத்தின் மீதி கதை.
ராம் தந்தை கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்திருக்கிறார். அவரை தவிர வேறு யாரையாவது, அந்த கதாபாத்திரத்தில் போட்டிருந்தால் அவ்வளவு நன்றாக இருந்திருக்காது. ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர்ம் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
படத்தில் ராமின் மகளாக வரும் சாதனா, வெள்ளந்தியான பேச்சுகளாலும், எதார்த்த நடிப்புகளாலும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார். சாதனாவின் தோழியாக வரும் சஞ்சனா கூட அருமையாக நடித்திருக்கிறது.
படத்தின் வசனங்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிகிறது. அதிலும் "நானும் தங்க மீனாகலாமுனு தான் நெனச்சேன்.ஆனா எங்க வீட்டுல இன்னிக்கு பூரி சுட்டுருக்காங்க.. அதுனால நான் தங்க மீனாகல .....' நீ தங்க மீனான நான் பொரியெல்லாம் கொண்டு வந்து போடுவேன்" என்பது போன்ற வசனங்கள் படத்தை மேலும் மெருகேற்றுகின்றன.
ராமின் அப்பாவாக வரும் பூராம், தனது உணர்ச்சி பூர்வமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை.
மொத்தத்தில் தங்க மீன்கள் - தந்தை மகளின் பாசத்தை பிரதி பளிக்கும் வின்மீன்கள் !!! |
|||||
by Swathi on 30 Aug 2013 0 Comments | |||||
Tags: Thanga Meengal | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|