LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- அமெரிக்க அணுகுமுறை

அமெரிக்க வரலாறு -2

அமெரிக்க அனுகுமுறைகளுக்குள் செல்லுமுன். இந்நாட்டைப் பற்றிய சில அடிப்படை வரலாற்று விஷயங்களையும். அமெரிக்காவையும் – இந்தியாவையும் ஒப்பிடும் சில புள்ளி விவரங்களையும் இம்மாதம் காண்போம்.


அமெரிக்கா என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள வாஷிங்டன்-டிசியைத் தலைநகரமாகவும். நியூயார்க்கை ஒரு முக்கிய வர்த்தக நகரமாகவும் கொண்ட, 50 மாநிலங்களை உள்ளடக்கிய முக்கிய நாடாகும். இந்நாட்டிக்கு வடக்கில் கனடாவும். தெற்கில் மெக்ஸிகோவும் , கிழக்கில் அட் லாண்டிக் கடலும். மேற்கில் பசிபிக் கடலும் அமைந்துள்ளன . பரப்பளவில் ரஷ்யா மற்றும் கனடாவிற்கு அடுத்த படியாக உலகில் மூன்றாவது பெரிய நாடாக அமேரிக்கா விளங்குகிறது.


அமெரிக்கா 

இந்தியா 

1)சுதந்திரம் அடைந்தது

4 July 1799

15 Aug 1947

2)நாட்டின் மொத்த பரப்பளவு

98,26,630,க.கி.மீ. இது உலகின் 6.5 %

மூன்றாவது பெரிய நாடு

32,87,590,க.கி.மீ. இது உலகின் 2.24%

ஏழாவது பெரியாநாடு.

அமெரிக்காவின் மூன்றில் ஒரு பகுதியை விட சற்று அதிகம்.

3)மக்கள் தொகை/ வளர்ச்சி

சுமார் 30 கோடி/0.89% 3வது இடம்

113 கோடி/1.16 % (2 வது இடம்)

4)குழந்தை இறப்பு விகிதம்

ஆயிரத்திற்கு 6.37 குழந்தைகள்

இறக்கிறது

ஆயிரத்திற்கு 84.61குழந்தைகள்

இறக்கிறது

5)கல்வியறிவு

மொத்தம் 99%

மொத்தம் 61%

6) வறுமைக்கோட்டின் கீழ் மக்கள்..

12 %

25 %

7) தனி நபர்  வருமானம்

ரூ 17,65,072(6 வது இடம்)

ரூ 32,185 (137வது இடம்)

8) விமான நிலையங்கள்

14,947

346

9) சராசரி ஆயுட்காலம்

78 வருடம்

69

10) ஊழல் குறைந்த நாட்டின் வரிசை

20 வது இடம்

72 வது இடம்


இத்தாலி நாட்டைச் சேர்ந்த அமெரிகோ வேஸ்புக்கி (AMERIGO VESPUCCI) என்பவர், வணிக நோக்கத்திற்காக ஆசியவைக் கடல்வழி அடையும் வழித்தடத்தினைக் கண்டுபிடிக்கும் பொருட்டு பயணிக்கும் போது. இன்றைய வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டன்களைக் கண்டார். “ அவை ஆசியக் கண்டமில்லை. அது ஒரு புதிய உலகம் “ என்பதையும். கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன் முதலில் கண்டுபித்துகூரிய இதே கருத்தை ஏற்றுக்கொண்டு சுமார் 1501-1502ல் தன் கருத்தைப் பதிவுசெய்தார். இவரே கொலம் பஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கடல் பயண ஆராய்ச்சிக்கு கப்பலைத் தயார் செய்து உதவிய வராகக் கருத்தப்படுகிறார். அவரைச் சிறப்பிக்கும் பொருட்டே அமெரிகோ வேஸ்புக்கி என்ற இவரது பெயரின் ஞாபகர்த்தமாக “ அமெரிக்கா “ என்று இப் புதிய நிலப்பரப்புக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது


ஏறக்குறைய 1942 – ல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தாலும். அதற்கு முன்னரே இக்கண்டத்தில் மக்கள் வசித்துவந்தார்கள். அவர்களை “ செவ்விந்தியர்கள் “ அல்லது “அமெரிக்க இந்தியர்கள் “ என்று அழைத்தனர்.


அவர்கள் பெரும்பாலும் ஆசியக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று கருத்தப்படுகிறது. அமெரிக்காவைக் கொலம்பஸ்தான் கண்டுபிடித்தார் என்பது ஐரோப்பியர்களின் கண்ணோட்டம். ஏனெனில் அவருக்கு முன்பே அங்கு மக்கள் வசித்தனர். ஆனால் அதற்குப் பிறகுதான் ஐரோப்பாவிலிருந்து பெருமளவில் குடியேற்றம் ஏற்பட்டது. பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களை ஆக்கிரமித்து. இக்குடியேற்றம் நடந்ததது. ஆரம்பத்தில் அமெரிக்கா பிரான்சின் ஆதிக்கத்தில் வந்தது. முதலில் இந்நாடு பிரிட்டீஷாரின் பதின்மூன்று காலணிகளைக் கொண்டதாக இருந்தது.


பின்னர் வரிசெலுத்துவதில் ஏற்பட்ட முரண்பாட்டால் அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் ஏற்பட்ட  மோதல். சுதந்திரப்போரக வெடித்தது, இப் போரின் பிரிட்  டனின் மோசமான தோல்விக்குப்பின் ஜூலை 4,1776ம் ஆண்டு அமெரிக்கா சுதந்திர நாடாக உருவானது.


நாட்டின் வடபகுதி தொழில்துறை சார்ந்தும், தென்பகுதி விவசாயம் சார்ந்தும் அமைந்திருந்ததால், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் உரிமைப் பிரச்சினை ஆகியவை சேர்ந்து அடிமைத் தனத்திற்கு எதிராக 1861-1865 –ல் அமெரிக்க உள்நாட்டுப் போராக உருவானது. இப்போரில் சுமார் 6,20,000 போர் வீரர்களும், கணக்கிலடங்கா பொதுமக்களும் கொல்லப்பட்டு. சுமார் 40 லட்சம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமை வாழ்வில் இருந்து விடுவிக்கப்பட்டு. அவர்களும் குடிமக்களாக அங்கீகரிக்கப் பட்டனர். இப்போரில் தொழில்சார்ந்த வடபகுதி வென்று அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து. நாடு இரண்டாகப் பிரிவதைத் தடுத்தது.


அடுத்து ஸ்பே னிஷ்-அமெரிக்கப் போர் மற்றும் முதல் உலகப்போர் (1914-1918) ஆகியவை அமெரிக்காவை உலக ராணுவ பலமுள்ள நாடாகப் பறைசாற்றியது. இரண்டாம் உலகப்போரில் (1939-45)அமெரிக்கா அணு  ஆயுதத்தைப் பயன்படுத்தி. தன்னை அணு ஆயுத நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டது.


    இங்கு மிசிசிபி- மிசெளரி ஆறு ஓடுகிறது. இது நீளத்தில் உலகின் முதல் பெரிய ஆறாகவும். நீர்ப்பெருக்கில் உலகின் நான்காவது பெரிய ஆறு என்றும் பெருமையுடன் விளங்குகிறது. அமெரிக்காவின் வட பகுதியில் இருந்து தென்பகுதி நோக்கி சுமார் 6275 கி.மீ, நீளத்தில் பத்து மாநிலங்களை கடந்து பயணிக்கிறது.


     இங்கே கொதிக்கும் பாலைவனம், எப்போதும் பனிமூடிய பிரதேசம், மணற்பாங்கான தீவுகள், நான்கு பருவங்களைவும் கொண்ட பகுதி என அனைத்து சீதோஸ்ண நிலைக ளையும், பல்வேறு மத, கலாச்சார மற்றும் பன்நாட்டு மக்களையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது. அமெரிக்கா ஆறு வேறுபட்ட கால மண்டலங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் கடிகார நேரம் ஒருமணி நேரம் மாற்றி அமைக்கப்படும். இது சூரிய ஒளியை முழுமையாகப் பயன்படுத்தி எரிசக்தியைச் சேமிப்பதற்காகச் செய்யப்படுகிறது. இந்த மாதங்கள் சட்ட மாற்றங்களுக்கு ஏற்ப மாறும்.

        அரசியலை எடுத்துக் கொண்டால் “ ஜார்ஜ் வாசிங்டன் “ அமெரிக்காவின் முதல் அதிபர் (1789-1797). இவரே கான்டினன்டல் இராணுவத்தை வழிநடத்தி சுதந்திரப்போரில் பிரிட்டீஷாரை , தோற்கடித்தார். இவர் அமெரிக்காவின் சிறந்த அதிபராக கருதப்படுகிறார். மேலும் தாமஸ் ஜெபர்சன்,ஆப்ரஹாம் லிங்கன் போன்ற பல்வேறு தலைவர்கள் இந்நாட்டை உருவாக்குவதில் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

-தொடரும் 

-ச.பார்த்தசாரதி

by Swathi   on 21 Jan 2012  5 Comments
 தொடர்புடையவை-Related Articles
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி
வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்
கருத்துகள்
13-Nov-2019 04:10:01 பாண்டியன் said : Report Abuse
அமெரிக்காவின் வரலாறு இதுவரையில் எனக்குத் தெரியாமல் இருந்தது இப்பொழுது உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கலாசாரம் வரலாறு அங்குள்ள மக்களின் நடைமுறை பழக்கம் போன்றவற்றை எனக்கு இலவசமாக பதிவேற்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்
 
22-Jul-2018 08:31:01 Mmurugesan said : Report Abuse
Thanks good morning sir mmurugesan dindigul India mmurugesan.1965@gmail.com
 
15-Nov-2016 10:13:12 keshavan said : Report Abuse
ஏகியதவ்ர்ர்வ் ர் நியோரி௬கி டிர்க்ட் ஜோ பூல் ஹெலோபி பிவிபி
 
26-May-2015 14:38:09 LIC தேவ ஏழுமலை said : Report Abuse
excellent , ,,
 
07-Jan-2015 23:46:13 babubagath said : Report Abuse
nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.