LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

சென்னைக்கு இருக்கும் தனிச்சிறப்பு

சென்னைக்கு இருக்கும் தனிச்சிறப்பு

தமிழகத்தில் எந்த ஒரு நகரத்திற்கும் இல்லாத ஒரு இயற்கை அமைப்பு சென்னைக்கு உண்டு. அது வங்கக்கடல் தான். எவ்வளவு நீர் பொழிந்தாலும் கடலுக்கு உடனே சென்றுவிடும். தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. இத்தகைய நீர்நிலைகளைக் குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர்.

நகரமயமாக்கலுக்கு இரையான ஏரிகள்:

    கிணறு வெட்டுதல் தொடர்பான நூலுக்குக் கூட ‘கூவ நூல்’ என்று தான் பெயர். கூவம் என்ற சொல்லுக்கு ‘தூய ஊற்று நீர்’ என்றே பொருள். குயில் கூவுது என்பது இனிமை சார்ந்த செயல். எப்போதும் பெய்யும் மழை தான் சென்னையில் இப்போதும் பெய்கிறது. ஆனால் வெள்ளம் சூழ்கிறது என்கிறோம். ஏனென்றால் வெள்ளத்தைத் தாங்கி நின்ற ஏரி, தாங்கல் அனைத்தும் நகரமயத்திற்கு இரையாகிவிட்டது.

சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள்.

1. நுங்கம்பாக்கம் ஏரி

2. தேனாம்பேட்டை ஏரி

3. வியாசர்பாடி ஏரி

4. முகப்பேர் ஏரி

5. திருவேற்காடு ஏரி

6. ஓட்டேரி

7. மேடவாக்கம் ஏரி

8. பள்ளிக்கரணை ஏரி

9. போரூர் ஏரி

10. ஆவடி ஏரி

11. கொளத்தூர் ஏரி

12. இரட்டை ஏரி

13. வேளச்சேரி ஏரி

14. பெரும்பாக்கம் ஏரி

15. பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்)

16. கல்லு குட்டை ஏரி

17. வில்லிவாக்கம் ஏரி

18. பாடிய நல்லூர் ஏரி

19. வேம்பாக்கம் ஏரி

20. பிச்சாட்டூர் ஏரி

21. திருநின்றவு+ர் ஏரி

22. பாக்கம் ஏரி

23. விச்சூர் ஏரி

24. முடிச்சூர் ஏரி

25. சேத்துப்பாடு ஏரி

26. செம்பாக்கம் ஏரி

27. சிட்லபாக்கம் ஏரி

28. மாம்பலம் ஏரி

29. கோடம்பாக்கம் பேங்க் ஏரி

30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்

31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்

32. வேளச்சேரி

33. செம்மஞ் ஏரி

34. ரெட் ஏரி

35. பொத் ஏரி

36. கூடுவாஞ் ஏரி

37. அடை ‘ஆறு’ (அடர்ந்த ஆறு)

38. அணை காபுத்தூர்

39. பள்ளிக்கர அணை

40. காட்டாங் குளத்தூர்

    அதனால்தான் ஏரி, குளம், ஆறு, அணையில் தண்ணீர் நிற்கிறது. அதோடு தண்ணீரைத் தாங்கி நின்ற ஈக்காட்டுதாங்கலும் உண்டு.

கடலுக்குச் செல்ல வேண்டிய வழியை உருவாக்கிய நீர்:

    நகரமயமாக்கல் நடைபெற்றாலும் நீர் கடலுக்குச் செல்லக்கூடிய வழியை உருவாக்கியிருக்க வேண்டும். அது அரசும் மக்களும் இணைந்து செய்ய வேண்டிய ஏற்பாடு. அதைச் செய்யத் தவறியதால் வருடம் தோறும் இன்னல்தான். இப்போதும் திட்டமிட்டால் எளிமையாகச் செய்து முடிக்கலாம்.

by Lakshmi G   on 27 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சீனப் பெருஞ்சுவரை  நடந்து கடக்க எவ்வளவு நாள்கள் ஆகும் தெரியுமா? சீனப் பெருஞ்சுவரை நடந்து கடக்க எவ்வளவு நாள்கள் ஆகும் தெரியுமா?
இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?
சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம் சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு
இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது
வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்! வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்!
மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம் மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.