LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புரட்டாசி பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்டது. தலைமை அர்ச்சகர் தங்க கொடி மரத்தில் வேணுகோபாலதீட்சிதர் தலைமையில், ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சாரியார் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க  கொடியேற்றப்பட்டது.


முதல்நாள் நிகழ்வுகள் நேற்று (13-ந் தேதி) நடந்தன.  முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சமர்ப்பித்தார்.  ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  2019ம் ஆண்டுக்கான தேவஸ்தானம் சார்பில் அச்சடிக்கப்பட்ட டைரி, காலண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். 


இதையடுத்து இரவில், பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் திருவீதி உலாவாக வந்தார். எண்ணற்ற பக்தர்கள் " கோலிந்தா, கோவிந்தா" என முழக்கமிட்டனர்.


2ம் நாளான இன்று  (14ம்தேதி)  இரவில் அன்னவாகனத்தில் உலா வருகிறார். இதேபோல் 3ம் நாளான நாளை  (15ம்தேதி) சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 4ம்நாள் (16ம்தேதி) கல்பவிருட்ச வாகனத்திலும், இரவில் சர்வ பூபாள வாகனத்திலும்5ம்நாள் (17ம்தேதி) மோகினி அவதாரத்திலும் வலம் வருகிறார். அன்றிரவு முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் நடக்கிறது. 


6ம் நாள் (18ம்தேதி) அனுமந்த வாகனத்திலும், அன்று மாலை  தங்க ரதத்திலும், கஜவாகனத்திலும் உலா வருகின்றார். 


7ம் நாள் (19ம்தேதி) காலை சூரிய பிரபை, இரவு சந்திரபிரபை வாகனத்திலும், 8ம்நாளான (20ம் தேதி) ரத உற்சவமும், அன்றிரவு அஸ்வ (குதிரை) வாகனத்திலும் உலா நடக்கிறது. 


9ம்நாள் (21ம்தேதி) காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. அடுத்து வரும் பிரம்மோற்சவம் நவராத்திரி பிரம்மோற்சவம் ஆகும். வருகிற  அக்டோபர் 10ம் தேதி தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவம், 18ம்தேதி வரை நடக்கிறது. 


பிரம்மோற்சவத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.   திருமலை முழுவதுமே பக்தர் பெருக்கால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

by Mani Bharathi   on 14 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்! தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்!
பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது! பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது!
வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்! வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்!
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.