LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

ஆசைகளை சீர்படுத்துங்கள் - வேதாத்ரி மகரிஷி

* ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.

* உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கியநிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். 

* தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

* உண்மையில் எதிரி ஒருவன் நமக்கு இருக்கிறான் என்றால் அது நம் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே. ஒருமுறை நம் மனதிற்குள் தீய எண்ணத்தை அனுமதித்தால் அதை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.

 * நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள்நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லதுஆனால்அவற்றில் ஒரு சில ஆசைகளைநம்முடைய உடம்பால் ஏற்றுச் சமாளிக்க முடியாதுசில விருப்பங்களை ஈடேறச் செய்வதற்குப் போதுமான வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை

*ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது நாம் ஏமாற்றத்தில் ஆழ்ந்து விடுவோம்இப்படி மனதைக் கீழ்நிலைக்குச் செல்லாமல் பக்குவப்படுத்த நம்மை தயார் செய்ய வேண்டும்ஆசைகளைக் குறைத்துக் கொள்வது அல்லது கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு முதல்படியாக அமையும்.
முதலில் நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும்,மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம்இரண்டாவதாக நம் ஆசைகள் பிறரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும்மூன்றாவதாக இயற்கை நியதிகளை ஒட்டியதாக ஆசை இருத்தல் வேண்டும்.
இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும்.இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம்.பரலோகத்திலும் நன்மைகளைப் பெறலாம்.

 


by Swathi   on 14 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.