LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்....

லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், கே.பாலச்சந்தர், ஊர்வசி, பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெய்ராம், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் உத்தம வில்லன்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் படத்தை கடந்த செப்டம்பரிலேயே வெளியிடுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

ஆனால் கிராபிக்ஸ், சவுண்ட் எபெக்ட் உள்ளிட்ட பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பின் இடையில் ஓரிரு தேதிகள் அறிவிக்கப்பட்டு அதுவும் மாற்றப்பட்டது.

பின்னர் படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிட முடிவு செய்தனர். இதே மாதத்தில் தற்போது தனுஷின் அனேகன்,  ஷமிதாப், மற்றும் இப்போது என்னை அறிந்தால், கொம்பன், காக்கி சட்டை என வரிசையில் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன. இதன் காரணமாக லிங்குசாமியிடம் கமல் படத்தின் ரிலீஸை தள்ளிபோடும்படி சொல்லிவிட்டாராம். காரணம் பிப்ரவரி மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு துவங்கவிருக்கிறது. எனவே, உத்தம வில்லன் படத்தை கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் துவக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

by Swathi   on 23 Jan 2015  0 Comments
Tags: Uthama Villain   உத்தம வில்லன்                 
 தொடர்புடையவை-Related Articles
அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன் அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !! உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !!
வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !! வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !!
உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது... உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது...
கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்.... கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்....
அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !! அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.