|
||||||||||||||||||
வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு |
||||||||||||||||||
![]() அறிமுகம்:் திரு. ரவிச்சந்திரன் சோமு அவர்கள் பிறந்து வளர்ந்தது தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி அருகில் வெட்டிக்காடு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது குடும்பத்தார் தான் இவரின் சமூகப்பணிகளுக்கான வேர்கள் என்று குறிப்பிடுகிறார். தற்போது அமெரிக்காவில் தொலைத்தொடர்பு துறை பொறியாளராக பணியாறறி வருகிறார். சமூகப்பணிகள்: திரு. ரவிச்சந்திரன் சோமு அவர்கள் அமெரிக்காவில் இருக்கும் போதே இந்தியாவில் இருக்கும் தனது கிராமத்திற்கும், தன் கிராமத்தைப் போன்ற பிற கிராமங்களுக்கும் உதவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். விடியல், பாதை போன்ற அறக்கட்டளை நிறுவனங்களில் பங்கு கொண்டார். 2018ல் கிட்டத்தட்ட 10 கிராமங்களில் இருக்கின்ற 16 அரசுப்பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துக் கொடுத்தார். இளைஞர்கள் இணைந்து நடத்திய ‘நமது கிராமம்’ என்ற அமைப்பிலும் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த அமைப்பில் 10 கிராமங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 2019ல் வடுவு+ரில் 380 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த குளம் தூர்வாரப்பட்டது. மேலும் 2019ல் ‘பசுமைத் தீபாவளி’ என்ற தலைப்பில் குளத்தைச் சுற்றி 2000 மரங்கள் என மொத்தம் 50 கிராமங்களில் நடப்பட்டன. அதுமட்டுமில்லாமல் அம்மரங்களை தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்கவும் ஆட்கள் நியமனம் செய்யப்பட்டன. 2020ல் ‘பசுமைப் பொங்கல்’ என்ற தலைப்பில் 10 கிராமங்களில் வீட்டிற்கு இரண்டு பழமரங்கள் என 8000 வீடுகளுக்கு நடப்பட்டன. நேர மேலாண்மை: எந்தவொரு மனிதனுக்கும் நேரமேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாததாகும். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் செய்யும் வேலையில் விருப்பம் உடையவராக இருக்க வேண்டும். 2. தன்னுடைய உடல்நலத்தில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும். 3. ஏதேனும் ஒரு விளையாட்டு, எழுத்து போன்ற எதையாவது பொழுதுபோக்காகக் கொள்ள வேண்டும். 4. தன் குடும்பத்தினரையும் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும். 5. தான் சார்ந்த சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். இப்படியாக இந்த அனைத்திற்கும் நேரம் ஒதுக்கி வாழ்பவராக இருக்க வேண்டும் என்று திரு. ரவிச்சந்திரன் சோமு அவர்கள் கூறுகிறார். வெட்டிக்காடு என்ற புத்தகம்: திரு. ரவிச்சந்திரன் சோமு அவர்கள் ‘வெட்டிக்காடு’ என்ற புத்தகத்தை இயற்றியுள்ளார். இதில் புனைவுகள் இல்லாமல் முழுக்க முழுக்க தன் மண்ணைச் சார்ந்த உண்மை சம்பவங்களையே எழுதியுள்ளார். இதில் வருகின்ற கதாபாத்திரங்கள் கூட இன்றும் அம்மண்ணில் வாசம் செய்பவர்களாக உள்ளனர் என்று கூறுகிறார். மேலும் இவர் தமிழ்நாட்டின் தஞ்சையிலிருந்து அமெரிக்கா வரை பயணம் செய்தவராகையால் பயண அனுபவங்கள் சார்ந்த ஒரு நூலும் இயற்ற உள்ளதாகக் கூறுகிறார். |
||||||||||||||||||
by Lakshmi G on 15 Oct 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|