|
||||||||||||||||||
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா |
||||||||||||||||||
அறிமுகம்: வடுவூர் கிராமத்தில் பிறந்தவர் திரு. சின்னத்துரை அவர்கள் ஆவார். தாய் மொழியான தமிழ் மொழியில் தம் பள்ளி படிப்பை படித்த இவர், இளங்கலை வேளாண் பிரிவை எடுத்து படித்தார். பின்பு தன் விடா முயற்சியால் முதுகலை படிப்பை படித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் சில காலம் பணிபுரிந்து வந்தார். பின்பு பெல்ஜியம் நாட்டில் ஆய்வு படிப்பு மேற்கொள்வதற்காக சென்றார். அங்கு 15 மாதங்கள் பணிபுரிந்தார். நுண்ணுயுரியல் துறையில் முனைவர் பட்ட படிப்பை முடித்தார். 1986ம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக சவுதி மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சின்னத்துரை குடும்ப அறக்கட்டளை: 22 வருடங்களுக்கு முன்பு திரு. சின்னத்துரை அவர்கள் தமது முதல் மனைவியின் இறுதிச்சடங்கிற்காக இந்தியா சென்ற போது, தனது கிராமத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளியில் ஆய்வுக்கூடங்கள் இல்லாததால் 10 மைல் தூரம் தொலைவில் இருக்கக்கூடிய பள்ளிக்குச் சென்று அங்கே ஆய்வு செய்யும் சூழல் இருப்பதை கண்டார். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கு அலுவலக அறை சரியாக இல்லை என்பதையும் அறிந்தார். எனவே அன்றைய காலகட்டத்தில் 20 இலட்சம் ரூபாய் செலவு செய்து Chemistry Lab, Physics Lab, Botany Lab, Faculty Room ஆகியவற்றை கட்டித்தந்தார். அந்நிகழ்வு தமக்கும், தம் குடும்பத்திற்கும் மிகுந்த மனநிறைவைக் கொடுத்ததாக திரு. சின்னத்துரை அவர்கள் குறிப்பிடுகிறார். அதற்கு பிறகே, ‘சின்னத்துரை குடும்ப அறக்கட்டளை’ என்ற ஒன்றை தொடங்கினார். சென்ற ஆண்டு அக்கிராமத்திற்கு சென்ற போது தகுதியிருக்கும் பல மாணவர்கள் பொருளாதார சூழல் காரணமாக தாம் விரும்பியதை படிக்க முடியாமல் வேறு ஒரு பாடப்பிரிவை எடுத்து படிப்பதை கண்டார். எனவே அவர்கள் உயர்கல்விக்கு உதவும் வகையில் நிதியுதவி அளித்து வருவதாகவும் குறிப்பிடுகிறார். உழைப்பினால் உயர்ந்தவர்: உழைப்பினாலும், முயற்சியினாலும் எந்த தடைகளையும் ஒருவன் முறியடித்து விடலாம் என்று கூறுகிறார் திரு. சின்னத்துரை அவர்கள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அயல்நாட்டில் வசித்து வரும் இவரின் சிந்தனைத்திறன் தமிழ்மொழியையே அடிப்படையாகக் கொண்டது எனக் கூறுகிறார். ‘முன்னேறுவதற்கு மொழி ஒரு தடையல்ல’,. தாய்மொழியில் மட்டுமே சிறப்பாக சிந்திக்க முடியும் என்றும் கூறுகிறார். இரவு பகல் பாராது, விழா நாட்களில் கூட விடுமுறை எடுக்காமல் கடின உழைப்பை முதலீடாக்கி படித்த இவர், .இன்றைய இளைஞர்களுக்கு வாழும் உதாரணமாக உள்ளார். கொடுப்பதில் கிடைக்கும் இன்பம்; பிறருக்குக் கொடுக்கும் போது அதனால் கிடைக்கும் இன்பம் அளப்பரியது என்று கூறுகிறார் திரு. சின்னத்துரை அவர்கள். அந்த இன்பத்தை இவரும் இவரது குடும்பமும் முழு மனதுடன் அனுபவிக்கின்றனர். இந்த இன்பம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்திற்காக கூட மேலும் மேலும் உதவ முன்வருவதாக கூறுகிறார். பிறருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தல் கூட அந்த நேரத்திற்கே அவர்களுக்கு பயனை அளிக்கும். ஆனால் ஒருவனுக்கு அளிக்கப்படும் கல்வியானது அவனது தலைமுறையை மட்டுமல்ல, அவனை சுற்றியிருப்பவரையும் காப்பாற்றும் என்பதால் தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவுவதாகக் குறிப்பிடுகிறார். இவர் கற்ற கல்வியால் தான் இன்று இவரது கிராமம் நல்ல கல்வியை கற்றுக் கொண்டிருக்கிறது. இவரால் முன்னேற்றம் அடைந்த மாணவர்கள் மேலும் பல மாணவர்களை முன்னேற்றுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. |
||||||||||||||||||
by Lakshmi G on 30 Mar 2021 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|