LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1186 - கற்பியல்

Next Kural >

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.)
மணக்குடவர் உரை:
விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கின் அவிவு பார்த்து உடனேவரக் காத்திருக்கும் இருளைப்போலவே; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு-தலைவரின் தழுவல் நெகிழ்வு பார்த்து உடனேவரக் காத்திருக்கும் இப்பசலை. காதலர் உடனிருந்து தழுவல் நெகிழினும் உடனே வரும் பசலை அவர் பிரிந்துதொலைவிற்குச் சென்றபின் வராதிருக்குமோ என்ற வாறாம். பார்த்தல் பார்த்துவருதல். கொண்டவன் கொள்-கொண்கு-கொண்கன். ஏகாராம் பிரிநிலை.
கலைஞர் உரை:
விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஓ! இப்போது தெரிந்துகொண்டேன். இதன் காரணத்தை.) விளக்கு நீங்கினவுடனே உண்டாகிவிடுகிற இருட்டைப்போல் காதலருடைய தழுவல் நீங்கினவுடனே தானாக உண்டாகிவிடுவது இந்தப் பசப்பு.
Translation
As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace.
Explanation
Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.
Transliteration
Vilakkatram Paarkkum Irulepol Konkan Muyakkatram Paarkkum Pasappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >