LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- தி.ஜானகிராமன்

விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும்

 

வராந்தாவில் நடக்கும்போதே சீராவன் மைத்துனரை எச்சரித்தான். ‘துடை வரைக்கும் எடுத்தாச்சானு அவளுக்குத் தெரியாது முழங்காலுக்குக் கீழே தான் எடுத்திருக்குன்னு இன்னும் நினைச்சிட்டிருக்கா அவ ரண்டாந் தடவை க்ளோராஃபாம் கொடுத்தப்ப, வேற எதுக்கோ சின்ன ஆப்ரேஷனுக்காக கொடுக்கறாங்கன்னு சொல்லிருக்கு. முத ஆப்ரேஷனை சரிபண்றதுக்குன்னு சொல்லி வச்சிருக்கு. நீங்களும் துடை வரைக்கும் எடுத்தாச்சாமேன்னு கேட்டுடாதீங்க. தானே கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கட்டும்னு இருக்கிறோம். ‘
மைத்துனர் பதில் பேசவில்லை. கோபமும் துயரமுமாக வாய் மூடியாக நடந்தார்.
நோயாளியின் அறைக்குள் நுழைந்தார்கள்.
‘வாங்கண்ணா ‘
கட்டிலில் மல்லாந்து படுத்திருந்த தங்கை வரவேற்றாள். கழுத்திலிருந்து கால்வரை போர்த்தியிருந்தது.
‘போட்மெயில்லியா வந்தீங்க ? ‘
‘ஆமாண்டா கண்ணு ‘ அண்ணன் கட்டிலின் தலைப்புக்கு அருகில் போய் தங்கையின் நெற்றி முகட்டிலிருந்து தடவிக் கொடுத்தார்.
‘அண்ணி வரலியா ? ‘
‘இல்லே. ‘
‘நாத்தனார் முடமானதைப் பார்க்க வாண்டாம்னா ‘ என்று லேசாகச் சிரித்தது அந்தப் பெண்.
அந்தச் சிரிப்பு இரண்டு கணம்தான் அடுத்த கணம் சிரிப்பைக் கண்ணத்தின் கீழே தள்ளிவிட்டு கொடகொடவென்று கண்ணீர்.
‘முழங்காலுக்குக் கீழ எடுத்திட்டாங்களாம் அண்ணா ‘ என்று உதட்டைப் பிதுக்கிக் குழந்தை போல அழுதது அந்தப் பெண்.
அண்ணன் உதட்டை உதட்டால் அழுத்திக் கொண்டார் திரும்பி தங்கையின் கணவனைப் பார்த்தார். அவன் உதடும் கன்னமும் கோணித்துடிக்க விம்மலை அடக்க முயன்று கொண்டிருந்தான்.
இதெல்லாம் அடங்க இரண்டு நிமிஷம் ஆயிற்று.
‘அழாதீங்க அண்ணா. ‘
‘நீ எனக்கு தைரியம் சொல்ற. அப்படியே இருக்கட்டும். உசிரையாவது விட்டுவச்சானே ஆண்டவன். முழங்கால் போனாப் போகட்டும் ‘ என்று மீண்டும் அண்ணன் அவள் நெற்றி உச்சியைத் தடவிக் கொடுத்தார்.
‘முழங்காலுக்கு கீழே முப்பத்திரண்டு வயசிலேயே எடுத்தாச்சுன்னா. மிச்ச வயசை எப்படி அண்ணா போக்கறதாம் ? இப்ப நான் பொழச்சு யாருக்கு லாபம் ? அவர்களுக்கும் கஷ்டம். நான்கு குழந்தைகளுக்கும் யாரு செஞ்சு போடுவாங்க ? ‘
‘பேசாம இருடா கண்ணு. நாங்கெல்லாம் எதுக்காக இருக்கோம் ? ‘
‘முடத்துக்குச் செஞ்சு போட. ‘
‘சும்மா இரேன். ‘
‘சும்மா இருன்னு சொல்லாதீங்கண்ணா. பேசிட்டேயிருந்தா, கால் வலி தெரியலே. யாரும் இங்க இல்லென்னு வச்சுக்குங்க. உடனே காலையே நினைக்கிறேனா வலி விண்விண்ணுன்னு உசிரு போகுது. ‘
அண்ணன் ஊர்க்கதை, உலகக்கதை, உரவுக்காரங்க கதை எல்லாம் பேசத் தொடங்கினார்.
தங்கை ரொம்ப ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள், வலி தெரியாமலிருப்பதற்காக. வலி தெரியவில்லை.
திடார் என்று அவர்களுக்கு அப்பால் பார்த்து ‘நீ சாப்பிட்டியாம்மா ? ‘ என்றாள்.
இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
நிலையோரமாக நின்றிருந்த பெண், ‘சாப்பிட்டாச்சாம்மா… தூங்கினீங்களா ராத்திரி ? ‘
‘ ரண்டு தடவை முழுச்சிக்கிட்டேன். வலி கொன்னிடிச்சு, நர்சம்மா ரண்டு தடவ வந்து மாத்திரை கொடுத்தாங்க… தூங்கிட்டேன். நீ என்ன சாப்பிட்டாயாம் ? ‘
‘அல்லாம் சாப்பிட்டேம்மா. இடியாப்பம். ரண்டு இட்லி, டாத்தண்ணி எல்லாம் ஆயிடிச்சு ‘
‘இந்தப் பொண்ணுதாண்ணா இங்க எல்லாம் செஞ்சிட்டிருக்கு எனக்கு. ‘
நடையில் சரசரப்பு.
பெரிய டாக்டர் வராங்க என்று ஏதோ மகாராஜா வருவதைச் சொல்லுவதைப் போல தொண்டை யோடு தொண்டையாகச் சொல்லி விட்டு மறைந்தது தோட்டிப் பெண்.
பெரிய டாக்டர் வந்தார். கூட இரண்டு மூன்று டாக்டர்கள். இரண்டு நர்சுகள்.
சற்று நின்று நோயாளியைப் பார்த்தார் பெரிய டாக்டர். கட்டில் முனையில் தொங்கவிட்டிருந்த கடுதாசியைப் பார்த்தார்.
‘ஓகே, கன்டின்யூ ‘– என்று நர்சைப் பார்த்துச் சொன்னார். நோயாளியின் இடது கை நாடியைக் கால் நிமிஷம் பார்த்தார். அபயம் தருவது போல அவள் இடது தோளை மெதுவாகத் தட்டிவிட்டு வெளியே நடந்தார். பரிவாரம் கூடவே அடக்கமாக, மரியாதையாக ஓடிற்று.
‘போச்சு முப்பத்தஞ்சு ரூபா ‘ என்று சிரித்தது நோயாளிப் பெண்.
அண்ணன் தங்கையை திரும்பிப் பார்த்தான்.
‘பெரிய டாக்டர் இப்ப வந்திட்டுப் போனார்ல. முக்கா நிமிஷம் அவருக்கு இருபத்தஞ்சு ரூவா, கூட ஒரு நர்சு வந்தாங்கள்ள. அவங்கதான் பெரிய நர்சு. அவரு இப்படி வந்துட்டுப் போனார்னா, பத்து ரூவா, ஆக மொத்தம் முப்பத்தஞ்சு ரூவா. ‘
‘என்னது ‘ புரியாமல் விழித்தார் அண்ணன்.
திரும்பி தங்கையின் கணவனைப் பார்த்தார்.
‘ஆமாம் ‘ என்றான் சீராளன்.
காலமே பெரிய டாக்டரும் பெரிய நர்சும் வருவாங்க. அதுக்கு முப்பத்தஞ்சு ரூவா. சாயங்காலம் ஒரு சின்ன டாக்டரும் சின்ன நர்சும் வருவாங்க. அதுக்குப் பதினைஞ்சு ரூவா. ‘
‘தினமுமா ? ‘
‘பின்னே ? மாசத்துக்குன்னா நெனைச்சீங்க ‘ எங்க ஊரு மருதமுத்து வைத்தியர்னு நெனச்சீங்களா வருஷத்துக்கு ஆறு கலம் நெல்லு வாங்கிக்கிட்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடியாந்து மாத்திரை, கசாயம்லாம் கொடுக்கறதுக்கு ? ‘
‘தினமும் அம்பது ரூபாயா ‘ ‘
‘ஆமாண்ணா, இன்னியோட நாப்பத்து நாலு நாளாச்சு இவங்க விசிட்டிங் சார்ஜ் மாத்திரம் ரெண்டாயிரத்து சொச்சம் ஆயிடிச்சு. ‘
‘இது இவரோட ஆஸ்பத்திரிதானே ‘ ‘
‘ஐயய்ய இது அசுபத்ரியும் இல்லெ. மருத்துவமனையுமில்லே. அவரோட சொந்த க்ளினிக்கு பாலி க்ளினிக்கு.
‘பாலி க்ளினிக்கோ, போலி க்ளினிக்கோ ‘ தன்னோட ஆஸ்பத்திரியிலே படுத்திருக்கிற நோயாளியைப் பார்க்கறதுக்கு இருபத்தஞ்சு ரூபாயா ? அதுவும் இப்படி முக்கா நிமிஷம் எட்டிப் பார்த்துட்டுப் போறதுக்கா இது ராத்திரிக் கொள்ளைகூட இல்லே. பகல் கொள்ளெ ? ‘
அவங்க அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி யெல்லாம் படிச்சிட்டு வந்தவரு அண்ணா ‘ அதனாலதான் இவங்க நாலு வருஷமா நெல்லுவித்து சேத்த பணம் இருபத்திரண்டாயிரத்தையும் போன வாரம் பில்லு அனுப்பிச்சு வாங்கிட்டாரு. ‘
சீராளன் சொன்னான் ‘ஸ்கானிங்கறாங்க. அதுங்கறாங்க இதுங்கறாங்க. அந்த மாதிரி சோதனைங்களுக்கே ஆறாயிரம் ஆயிடிச்சு. அப்பறம் ஆபரேஷனுக்கு பதினைஞ்சாயிரம். ‘
‘சரி, நீங்க அந்தப் பொண்ணை வரச் சொல்லிவிட்டு அந்தாண்ட இருங்க ‘ என்றாள் நோயாளிப் பெண்.
இருவரும் எழுந்தார்கள்.
‘நீங்க ஏதாவது சாப்பிட்டிங்களாண்ணா ? ‘
‘இல்லெ. ‘
‘வெளியிலெ போய் காபி க்ளப்பிலெ சாப்பிட்டு வாங்க. ஏங்க. இங்க ஆசுபத்ரி காண்டானிலெ சாப்பிடாதீங்க. இங்க ஒரு இட்டலி ஒரு ரூவா. காபி ரண்டு ரூவா. வெளியிலெ போய் சாப்பிடுங்க…. சட்டுனு வரச் சொல்லுங்க. அந்தப் பொண்ணை. ‘
இருவரும் அவசரமாக வெளியே வந்து தோட்டிப் பெண்ணை கூப்பிட்டார்கள். அவள் நோயாளியின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள். அதற்கு முன்பே அவளை நிறுத்தி துடை வரையில் காலை எடுத்திருப்பதை அவளிடம் சொல்லவேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினான் சீராளன்.
வராந்தாவில் நடக்கும் போது சொன்னான் அவன். ‘பெரிசு கலியாணத்துக்குன்னு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துகிட்டு வந்தேன். அஞ்சு வருஷமா ? அந்த இருபத்தாறாயிரமும் காலியாயிடிச்சு. இவ காலும் போயிடிச்சு. சின்ன டாக்டரைக் கேட்டேன் இன்னும் எத்தனை ஆகும்னு. மிஞ்சி மிஞ்சி இன்னும் பன்னண்டாயிரத்துக்கு மேல போகாதுங்கறாரு அவரு. ‘
‘இன்னும் பன்னண்டாயிரமா ? ‘
‘இல்லாட்டி வெளியிலெ விட மாட்டாங்க….அடுத்த ரூம்லெ ஒரு மைசூர்க்காரங்க வந்திருக்காங்க. காலு புரையோடி எடுக்கணும்னாரு. பழயபில்லு எல்லாம் இருபதாயிரம் கொடுத்தப்பற�
��் தான் காலை எடுப்பேன்னிட்டாங்க. காலை எடுக்காட்டி உசிரு போயிடும். அதுக்காக இந்த பேஷண்ட்டோட தம்பி, அத்தாரிட்டி லெட்டர்லாம் வாங்கிட்டு, ஊருக்குப் போயி நிலத்தையோ, நகைங்களையோ, வீடயோ அடமானம் வச்சி இருபதாயிரம் கொண்டாந்தாரு. அப்பறம்தான் காலை யெடுத்தாங்க. ரண்டு நாளு முன்னாலெ எடுத்திருந்தா பாதத்தோட போயிருக்கும். இந்தப்பில்லு தகராறில் ஊருக்குப் போயிபணம் புரட்டி வரதுக்குள்ளார புரை கணைக்கால் வரை ஏறிடிச்சு, கணைக்காலோட வெட்டிட்டாங்க. ‘
மைத்துனர் சிறிது மலைத்து நின்றார்.
‘நீ எப்படி இந்தக் கொள்ளைக்காரங்க கையிலெ மாட்டிகிட்டே ? ஒரு காலை வெட்றதுக்கு நாப்பதாயிரமா ? இவன் என்ன டாக்டரா ? வெட்டியானா ? ‘
‘விஞ்ஞான வெட்டியான் ‘ என்ற ஒரு குரல்.
ஒரு நாற்பது வயதுக்காரர் ‘என் தங்கை பையன் வயித்து வலின்னு நாலு மாசமாச் சொல்லிக்கிட்டிருந்தான். பெரிய டாக்டராச்சேன்னு கொண்டு சேர்த்தேன். நாலு எக்ஸ்ரே ஆச்சு. ரத்தம், மூத்ரம். எச்சில்ன்னு ஒண்ணு பாக்கியில்ல, ஒரு சோதனை பாக்கியில்லெ. ஆத்மான்னு ஒண்ணு இருக்காமே. அதைத்தான் இன்னும் சோதிக்கலெ. கண்ணுக்குத் தெரிஞ்சு கையிலியும் அகப்பட்டா அதையும் சோதிக்கறேன்னு ஒரு ரண்டாயிரத்தைப் பிடுங்கியிருப்பான்….முப்பது வருஷம் முன்னாலெ நான் மதுரைப்பக்கம் போயி ஒரு மாசம் தங்கியிருந்தேன். கண்ணெல்லாம் எரிஞ்சு தலைவலியா இருந்தது. பக்கத்திலெ யாரோ ஜெர்மனிக்குப் போய்வந்த டாக்டர்னு போர்டு போட்டிருந்தது. போனேன். அந்த ஆளு ஒரு ரண்டு நிமிஷம் என்னை முறைச்சு, என்னமோ யோசிக்கறாப்பல பார்த்தான். பதினைஞ்சு நாளாதலை வலிக்குதுன்னா, மண்டைக்குள்ள ஏதாவது கோளாறு இருக்கலாம். நல்லா டெஸ்ட் பண்ணித்தான் சொல்லணும். இன்பேஷண்ட்டா இருக்கணும்னான். கேட்டுக்கிட்டு வந்து சொல்றேன்னு தங்கியிருந்த உறவுக்காரர்கிட்ட சொன்னேன். ‘அடபாவி ‘ நீ தினமும் ரண்டு காஸாலெட்டு மாம்பழம் தின்னுகிட்டிருக்கே. நீல மாம்பழத்துக்கு மதுரையிலெ காஸலெட்டும்பாங்க. மாம்பழத்தோட பால் சாப்பிடணும். இல்லாட்டி வறட்சி கொடுத்து மண்டைவலிக்கும். இங்க, ஒரு எல்.எம்.பி. இருக்காரு. அவர்கிட்டே போய்ச் சொல்லுங்க ‘ன்னாரு. போனேன். எட்டணாக்கு ஆறுவேளை மிக்சர் கொடுத்தாரு. மூணு வேளையிலேயே சரியாப் போச்சு. அப்பல்லாம் இப்படி ஊருக்கு ஒரே ஒரு டாக்டர்தான் எங்கேயோ படிச்சிட்டு வந்து பயமுறுத்துவான். இப்ப எல்லா டாக்டருமே அப்படி ஆயிட்டான். தலைவலிக்குது, காலைக் கடுக்குதுன்னு சொன்னாப் போதும். ஒரு லிஸ்ட் கொடுக்கறாங்க பாரு — அந்த டெஸ்ட்டு இந்த டெஸ்ட்டுன்னு ….உங்க சம்சாரம் கேஸைப் பாத்துக் கிட்டுத்தான் இருக்கேன், சுருக்க டிஸ்சார்ஜ் வாங்கிட்டுப் போங்க ‘ என்று தர்மாஸ் ப்லாஸ்க்குடன் வராந்தாவில் நடந்தார் நாற்பது வயது.
வெளியே போய் காபி க்ளப்பில் பொங்கல் வடை காப்பி சாப்பிட்டுவிட்டு சீராளனும் மைத்துனரும் உள்ளே வந்தார்கள்.
‘இந்த அக்ரமத்தைக் கேக்காம விடப்போறதில்லெ நான் பெரிய டாக்டர்கிட்டே போய் கத்தப்போறேன். உன் சொந்த ஆஸ்பத்திரியிலெ படுத்திருக்கிற நோயாளிகளுக்கு தினம் விசிட்டிங் சார்ஜ்உன்னு அம்பது ரூவா வாங்கிறேய்யா, இந்தக்காசு ஜரிக்குமான்னு கத்தப்போறேன். இன்னும் என்னல்லாமோ கேக்கப் போறேன். இல்லேன்னா கோர்ட்டு வரைக்கும் போய்ப் பார்த்திடப் போறேன். ‘ என்று முகம் சிவக்க உதடு துடிக்கக் கத்தினார் மைத்துனர்.
‘இப்ப ஒண்ணும் பண்ணாதீங்க. இந்த டாக்டர்கிட்டே பெரிய பெரிய தலைவர்ங்க, அதிகாரிங்கல்லாம் கூட உடம்பைப் பார்த்துக்கறாங்க. ஒண்ணும் நடக்காது. தலைக்கு வந்தது துடையோட போச்சுன்னு ஊருக்குப் போய்ச் சேரப் போறேன் உங்க தங்கையை அழைச்சிட்டு. இப்ப ஒண்ணும் கலாட்டா பண்ணவாண்டாம்…..
‘நோயாளியின் கதவு இன்னும் திறக்கவில்லை. அதை ஒட்டியிருந்த தங்கும் அறைக்குள் இருவரும் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
‘வணக்கங்க ‘ என்று சீராளனுக்கு வணக்கம் சொல்லி உள்ளே வந்தான் ராயப்பன். தோட்டிப் பெண்ணின் கணவன் அவன்.
‘ரண்டாம் தடவையும் ஆம்புடேசன் செஞ்சிட்டாங்களாமே ‘ ‘ என்று முகம் தொங்கக் கேட்டான்.
‘ஆமாம்பா ‘
‘போன வாரம் முழங்கால் வரைக்கும் எடுத்தாங்க. அதைக் கொண்டு எரியறதுக்கு பதினைஞ்சு ரூபா கொடுத்தாங்க எனக்கு. நான் நேத்து லீவு. தருமநாதன்கிட்ட கொடுத்தாங்க. அறுத்துப்போட்டதைப் புதைக்கறதுக்கு அவனுக்கு இருபது ரூவா கொடுத்தாங்களாம் ஆபீசுலெ. ‘
‘லீவிலெ இருந்திட்டது வருத்தமா இருக்காக்கும் உனக்கு ? உனக்கும் ஏதாவது வேணும்கிறியா ? ‘
‘என்னா சார் அப்படிக் கேக்கறீங்க ? ‘
‘பின்ன என்ன கேக்கணும் ? ‘
‘நான் சொல்ல வந்ததுவேற சார். காலோ, கையோ ஆம்புடேசன் பண்ணினா அதைச் சுடுகாட்டிலெ கொண்டு போடுன்னு உங்ககிட்ட நாப்பது அம்பதுன்னு பில்லு போட்டு வாங்கறாங்க சார். எங்களுக்குக் கொடுக்கறது என்னமோ பதினைஞ்சு ரூவாதான் சார். நீங்கள்ளாம் சேர்ந்து ஆபீசிலெ சொல்லி முப்பது நாப்பதாவது கொடுக்கச் சொல்லக்கூடாதுங்களா சார் ? ‘
‘ஏண்டா, ஞான வெட்டியான் தோட்டிக்கிட்ட கூடவா இங்க கமிஷன் கேக்கறாங்க ? ‘ மைத்துனர் வாயைப் பிளந்து ராயப்பனைப் பார்த்தார்.
சீராளன் அடுத்த வருட சாகுபடிக்கு விரை, தச்சுகூலி, எரு-இதற்கெல்லாம் எங்கே கடன் புரட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
‘அம்மா உங்களைக் கூப்பிடறாங்க ‘ என்று நோயாளிக்குக் காலை கடன் உதவிகளைச் செய்துவிட்டு வந்த தோட்டிப்பெண் அழைத்தாள்.
‘இவ்வளவு பணத்தைக் கொள்ளையடிச்சு என்ன செய்வான் ஒரு மனுசன் ‘ ‘ என்று குழம்பிக்கொண்டே மைத்துனர் எழுந்து கொண்டார்.

           வராந்தாவில் நடக்கும்போதே சீராவன் மைத்துனரை எச்சரித்தான். ‘துடை வரைக்கும் எடுத்தாச்சானு அவளுக்குத் தெரியாது முழங்காலுக்குக் கீழே தான் எடுத்திருக்குன்னு இன்னும் நினைச்சிட்டிருக்கா அவ ரண்டாந் தடவை க்ளோராஃபாம் கொடுத்தப்ப, வேற எதுக்கோ சின்ன ஆப்ரேஷனுக்காக கொடுக்கறாங்கன்னு சொல்லிருக்கு. முத ஆப்ரேஷனை சரிபண்றதுக்குன்னு சொல்லி வச்சிருக்கு. நீங்களும் துடை வரைக்கும் எடுத்தாச்சாமேன்னு கேட்டுடாதீங்க. தானே கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கட்டும்னு இருக்கிறோம். ‘மைத்துனர் பதில் பேசவில்லை. கோபமும் துயரமுமாக வாய் மூடியாக நடந்தார்.நோயாளியின் அறைக்குள் நுழைந்தார்கள்.‘வாங்கண்ணா ‘கட்டிலில் மல்லாந்து படுத்திருந்த தங்கை வரவேற்றாள். கழுத்திலிருந்து கால்வரை போர்த்தியிருந்தது.‘போட்மெயில்லியா வந்தீங்க ? ‘‘ஆமாண்டா கண்ணு ‘ அண்ணன் கட்டிலின் தலைப்புக்கு அருகில் போய் தங்கையின் நெற்றி முகட்டிலிருந்து தடவிக் கொடுத்தார்.‘அண்ணி வரலியா ? ‘‘இல்லே.

 

        ‘‘நாத்தனார் முடமானதைப் பார்க்க வாண்டாம்னா ‘ என்று லேசாகச் சிரித்தது அந்தப் பெண்.அந்தச் சிரிப்பு இரண்டு கணம்தான் அடுத்த கணம் சிரிப்பைக் கண்ணத்தின் கீழே தள்ளிவிட்டு கொடகொடவென்று கண்ணீர்.‘முழங்காலுக்குக் கீழ எடுத்திட்டாங்களாம் அண்ணா ‘ என்று உதட்டைப் பிதுக்கிக் குழந்தை போல அழுதது அந்தப் பெண்.அண்ணன் உதட்டை உதட்டால் அழுத்திக் கொண்டார் திரும்பி தங்கையின் கணவனைப் பார்த்தார். அவன் உதடும் கன்னமும் கோணித்துடிக்க விம்மலை அடக்க முயன்று கொண்டிருந்தான்.இதெல்லாம் அடங்க இரண்டு நிமிஷம் ஆயிற்று.‘அழாதீங்க அண்ணா. ‘‘நீ எனக்கு தைரியம் சொல்ற. அப்படியே இருக்கட்டும். உசிரையாவது விட்டுவச்சானே ஆண்டவன். முழங்கால் போனாப் போகட்டும் ‘ என்று மீண்டும் அண்ணன் அவள் நெற்றி உச்சியைத் தடவிக் கொடுத்தார்.‘முழங்காலுக்கு கீழே முப்பத்திரண்டு வயசிலேயே எடுத்தாச்சுன்னா. மிச்ச வயசை எப்படி அண்ணா போக்கறதாம் ? இப்ப நான் பொழச்சு யாருக்கு லாபம் ? அவர்களுக்கும் கஷ்டம். நான்கு குழந்தைகளுக்கும் யாரு செஞ்சு போடுவாங்க ? ‘‘பேசாம இருடா கண்ணு. நாங்கெல்லாம் எதுக்காக இருக்கோம் ? ‘‘முடத்துக்குச் செஞ்சு போட. ‘‘சும்மா இரேன். ‘‘சும்மா இருன்னு சொல்லாதீங்கண்ணா. பேசிட்டேயிருந்தா, கால் வலி தெரியலே.

 

        யாரும் இங்க இல்லென்னு வச்சுக்குங்க. உடனே காலையே நினைக்கிறேனா வலி விண்விண்ணுன்னு உசிரு போகுது. ‘அண்ணன் ஊர்க்கதை, உலகக்கதை, உரவுக்காரங்க கதை எல்லாம் பேசத் தொடங்கினார்.தங்கை ரொம்ப ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள், வலி தெரியாமலிருப்பதற்காக. வலி தெரியவில்லை.திடார் என்று அவர்களுக்கு அப்பால் பார்த்து ‘நீ சாப்பிட்டியாம்மா ? ‘ என்றாள்.இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.நிலையோரமாக நின்றிருந்த பெண், ‘சாப்பிட்டாச்சாம்மா… தூங்கினீங்களா ராத்திரி ? ‘‘ ரண்டு தடவை முழுச்சிக்கிட்டேன். வலி கொன்னிடிச்சு, நர்சம்மா ரண்டு தடவ வந்து மாத்திரை கொடுத்தாங்க… தூங்கிட்டேன். நீ என்ன சாப்பிட்டாயாம் ? ‘‘அல்லாம் சாப்பிட்டேம்மா. இடியாப்பம். ரண்டு இட்லி, டாத்தண்ணி எல்லாம் ஆயிடிச்சு ‘‘இந்தப் பொண்ணுதாண்ணா இங்க எல்லாம் செஞ்சிட்டிருக்கு எனக்கு. ‘நடையில் சரசரப்பு.பெரிய டாக்டர் வராங்க என்று ஏதோ மகாராஜா வருவதைச் சொல்லுவதைப் போல தொண்டை யோடு தொண்டையாகச் சொல்லி விட்டு மறைந்தது தோட்டிப் பெண்.பெரிய டாக்டர் வந்தார். கூட இரண்டு மூன்று டாக்டர்கள். இரண்டு நர்சுகள்.சற்று நின்று நோயாளியைப் பார்த்தார் பெரிய டாக்டர்.

 

         கட்டில் முனையில் தொங்கவிட்டிருந்த கடுதாசியைப் பார்த்தார்.‘ஓகே, கன்டின்யூ ‘– என்று நர்சைப் பார்த்துச் சொன்னார். நோயாளியின் இடது கை நாடியைக் கால் நிமிஷம் பார்த்தார். அபயம் தருவது போல அவள் இடது தோளை மெதுவாகத் தட்டிவிட்டு வெளியே நடந்தார். பரிவாரம் கூடவே அடக்கமாக, மரியாதையாக ஓடிற்று.‘போச்சு முப்பத்தஞ்சு ரூபா ‘ என்று சிரித்தது நோயாளிப் பெண்.அண்ணன் தங்கையை திரும்பிப் பார்த்தான்.‘பெரிய டாக்டர் இப்ப வந்திட்டுப் போனார்ல. முக்கா நிமிஷம் அவருக்கு இருபத்தஞ்சு ரூவா, கூட ஒரு நர்சு வந்தாங்கள்ள. அவங்கதான் பெரிய நர்சு. அவரு இப்படி வந்துட்டுப் போனார்னா, பத்து ரூவா, ஆக மொத்தம் முப்பத்தஞ்சு ரூவா. ‘‘என்னது ‘ புரியாமல் விழித்தார் அண்ணன்.திரும்பி தங்கையின் கணவனைப் பார்த்தார்.‘ஆமாம் ‘ என்றான் சீராளன்.காலமே பெரிய டாக்டரும் பெரிய நர்சும் வருவாங்க. அதுக்கு முப்பத்தஞ்சு ரூவா. சாயங்காலம் ஒரு சின்ன டாக்டரும் சின்ன நர்சும் வருவாங்க. அதுக்குப் பதினைஞ்சு ரூவா.

 

         ‘‘தினமுமா ? ‘‘பின்னே ? மாசத்துக்குன்னா நெனைச்சீங்க ‘ எங்க ஊரு மருதமுத்து வைத்தியர்னு நெனச்சீங்களா வருஷத்துக்கு ஆறு கலம் நெல்லு வாங்கிக்கிட்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடியாந்து மாத்திரை, கசாயம்லாம் கொடுக்கறதுக்கு ? ‘‘தினமும் அம்பது ரூபாயா ‘ ‘‘ஆமாண்ணா, இன்னியோட நாப்பத்து நாலு நாளாச்சு இவங்க விசிட்டிங் சார்ஜ் மாத்திரம் ரெண்டாயிரத்து சொச்சம் ஆயிடிச்சு. ‘‘இது இவரோட ஆஸ்பத்திரிதானே ‘ ‘‘ஐயய்ய இது அசுபத்ரியும் இல்லெ. மருத்துவமனையுமில்லே. அவரோட சொந்த க்ளினிக்கு பாலி க்ளினிக்கு.‘பாலி க்ளினிக்கோ, போலி க்ளினிக்கோ ‘ தன்னோட ஆஸ்பத்திரியிலே படுத்திருக்கிற நோயாளியைப் பார்க்கறதுக்கு இருபத்தஞ்சு ரூபாயா ? அதுவும் இப்படி முக்கா நிமிஷம் எட்டிப் பார்த்துட்டுப் போறதுக்கா இது ராத்திரிக் கொள்ளைகூட இல்லே. பகல் கொள்ளெ ? ‘அவங்க அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி யெல்லாம் படிச்சிட்டு வந்தவரு அண்ணா ‘ அதனாலதான் இவங்க நாலு வருஷமா நெல்லுவித்து சேத்த பணம் இருபத்திரண்டாயிரத்தையும் போன வாரம் பில்லு அனுப்பிச்சு வாங்கிட்டாரு. ‘சீராளன் சொன்னான் ‘ஸ்கானிங்கறாங்க. அதுங்கறாங்க இதுங்கறாங்க. அந்த மாதிரி சோதனைங்களுக்கே ஆறாயிரம் ஆயிடிச்சு. அப்பறம் ஆபரேஷனுக்கு பதினைஞ்சாயிரம். ‘‘சரி, நீங்க அந்தப் பொண்ணை வரச் சொல்லிவிட்டு அந்தாண்ட இருங்க ‘ என்றாள் நோயாளிப் பெண்.

 

          இருவரும் எழுந்தார்கள்.‘நீங்க ஏதாவது சாப்பிட்டிங்களாண்ணா ? ‘‘இல்லெ. ‘‘வெளியிலெ போய் காபி க்ளப்பிலெ சாப்பிட்டு வாங்க. ஏங்க. இங்க ஆசுபத்ரி காண்டானிலெ சாப்பிடாதீங்க. இங்க ஒரு இட்டலி ஒரு ரூவா. காபி ரண்டு ரூவா. வெளியிலெ போய் சாப்பிடுங்க…. சட்டுனு வரச் சொல்லுங்க. அந்தப் பொண்ணை. ‘இருவரும் அவசரமாக வெளியே வந்து தோட்டிப் பெண்ணை கூப்பிட்டார்கள். அவள் நோயாளியின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள். அதற்கு முன்பே அவளை நிறுத்தி துடை வரையில் காலை எடுத்திருப்பதை அவளிடம் சொல்லவேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினான் சீராளன்.வராந்தாவில் நடக்கும் போது சொன்னான் அவன். ‘பெரிசு கலியாணத்துக்குன்னு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துகிட்டு வந்தேன். அஞ்சு வருஷமா ? அந்த இருபத்தாறாயிரமும் காலியாயிடிச்சு. இவ காலும் போயிடிச்சு. சின்ன டாக்டரைக் கேட்டேன் இன்னும் எத்தனை ஆகும்னு. மிஞ்சி மிஞ்சி இன்னும் பன்னண்டாயிரத்துக்கு மேல போகாதுங்கறாரு அவரு. ‘‘இன்னும் பன்னண்டாயிரமா ? ‘‘இல்லாட்டி வெளியிலெ விட மாட்டாங்க….அடுத்த ரூம்லெ ஒரு மைசூர்க்காரங்க வந்திருக்காங்க. காலு புரையோடி எடுக்கணும்னாரு. பழயபில்லு எல்லாம் இருபதாயிரம் கொடுத்தப்பற���் தான் காலை எடுப்பேன்னிட்டாங்க. காலை எடுக்காட்டி உசிரு போயிடும். அதுக்காக இந்த பேஷண்ட்டோட தம்பி, அத்தாரிட்டி லெட்டர்லாம் வாங்கிட்டு, ஊருக்குப் போயி நிலத்தையோ, நகைங்களையோ, வீடயோ அடமானம் வச்சி இருபதாயிரம் கொண்டாந்தாரு. அப்பறம்தான் காலை யெடுத்தாங்க.

 

         ரண்டு நாளு முன்னாலெ எடுத்திருந்தா பாதத்தோட போயிருக்கும். இந்தப்பில்லு தகராறில் ஊருக்குப் போயிபணம் புரட்டி வரதுக்குள்ளார புரை கணைக்கால் வரை ஏறிடிச்சு, கணைக்காலோட வெட்டிட்டாங்க. ‘மைத்துனர் சிறிது மலைத்து நின்றார்.‘நீ எப்படி இந்தக் கொள்ளைக்காரங்க கையிலெ மாட்டிகிட்டே ? ஒரு காலை வெட்றதுக்கு நாப்பதாயிரமா ? இவன் என்ன டாக்டரா ? வெட்டியானா ? ‘‘விஞ்ஞான வெட்டியான் ‘ என்ற ஒரு குரல்.ஒரு நாற்பது வயதுக்காரர் ‘என் தங்கை பையன் வயித்து வலின்னு நாலு மாசமாச் சொல்லிக்கிட்டிருந்தான். பெரிய டாக்டராச்சேன்னு கொண்டு சேர்த்தேன். நாலு எக்ஸ்ரே ஆச்சு. ரத்தம், மூத்ரம். எச்சில்ன்னு ஒண்ணு பாக்கியில்ல, ஒரு சோதனை பாக்கியில்லெ. ஆத்மான்னு ஒண்ணு இருக்காமே. அதைத்தான் இன்னும் சோதிக்கலெ. கண்ணுக்குத் தெரிஞ்சு கையிலியும் அகப்பட்டா அதையும் சோதிக்கறேன்னு ஒரு ரண்டாயிரத்தைப் பிடுங்கியிருப்பான்….முப்பது வருஷம் முன்னாலெ நான் மதுரைப்பக்கம் போயி ஒரு மாசம் தங்கியிருந்தேன். கண்ணெல்லாம் எரிஞ்சு தலைவலியா இருந்தது. பக்கத்திலெ யாரோ ஜெர்மனிக்குப் போய்வந்த டாக்டர்னு போர்டு போட்டிருந்தது. போனேன். அந்த ஆளு ஒரு ரண்டு நிமிஷம் என்னை முறைச்சு, என்னமோ யோசிக்கறாப்பல பார்த்தான்.

 

        பதினைஞ்சு நாளாதலை வலிக்குதுன்னா, மண்டைக்குள்ள ஏதாவது கோளாறு இருக்கலாம். நல்லா டெஸ்ட் பண்ணித்தான் சொல்லணும். இன்பேஷண்ட்டா இருக்கணும்னான். கேட்டுக்கிட்டு வந்து சொல்றேன்னு தங்கியிருந்த உறவுக்காரர்கிட்ட சொன்னேன். ‘அடபாவி ‘ நீ தினமும் ரண்டு காஸாலெட்டு மாம்பழம் தின்னுகிட்டிருக்கே. நீல மாம்பழத்துக்கு மதுரையிலெ காஸலெட்டும்பாங்க. மாம்பழத்தோட பால் சாப்பிடணும். இல்லாட்டி வறட்சி கொடுத்து மண்டைவலிக்கும். இங்க, ஒரு எல்.எம்.பி. இருக்காரு. அவர்கிட்டே போய்ச் சொல்லுங்க ‘ன்னாரு. போனேன். எட்டணாக்கு ஆறுவேளை மிக்சர் கொடுத்தாரு. மூணு வேளையிலேயே சரியாப் போச்சு. அப்பல்லாம் இப்படி ஊருக்கு ஒரே ஒரு டாக்டர்தான் எங்கேயோ படிச்சிட்டு வந்து பயமுறுத்துவான். இப்ப எல்லா டாக்டருமே அப்படி ஆயிட்டான். தலைவலிக்குது, காலைக் கடுக்குதுன்னு சொன்னாப் போதும். ஒரு லிஸ்ட் கொடுக்கறாங்க பாரு — அந்த டெஸ்ட்டு இந்த டெஸ்ட்டுன்னு ….உங்க சம்சாரம் கேஸைப் பாத்துக் கிட்டுத்தான் இருக்கேன், சுருக்க டிஸ்சார்ஜ் வாங்கிட்டுப் போங்க ‘ என்று தர்மாஸ் ப்லாஸ்க்குடன் வராந்தாவில் நடந்தார் நாற்பது வயது.வெளியே போய் காபி க்ளப்பில் பொங்கல் வடை காப்பி சாப்பிட்டுவிட்டு சீராளனும் மைத்துனரும் உள்ளே வந்தார்கள்.

 

       ‘இந்த அக்ரமத்தைக் கேக்காம விடப்போறதில்லெ நான் பெரிய டாக்டர்கிட்டே போய் கத்தப்போறேன். உன் சொந்த ஆஸ்பத்திரியிலெ படுத்திருக்கிற நோயாளிகளுக்கு தினம் விசிட்டிங் சார்ஜ்உன்னு அம்பது ரூவா வாங்கிறேய்யா, இந்தக்காசு ஜரிக்குமான்னு கத்தப்போறேன். இன்னும் என்னல்லாமோ கேக்கப் போறேன். இல்லேன்னா கோர்ட்டு வரைக்கும் போய்ப் பார்த்திடப் போறேன். ‘ என்று முகம் சிவக்க உதடு துடிக்கக் கத்தினார் மைத்துனர்.‘இப்ப ஒண்ணும் பண்ணாதீங்க. இந்த டாக்டர்கிட்டே பெரிய பெரிய தலைவர்ங்க, அதிகாரிங்கல்லாம் கூட உடம்பைப் பார்த்துக்கறாங்க. ஒண்ணும் நடக்காது. தலைக்கு வந்தது துடையோட போச்சுன்னு ஊருக்குப் போய்ச் சேரப் போறேன் உங்க தங்கையை அழைச்சிட்டு. இப்ப ஒண்ணும் கலாட்டா பண்ணவாண்டாம்…..‘நோயாளியின் கதவு இன்னும் திறக்கவில்லை. அதை ஒட்டியிருந்த தங்கும் அறைக்குள் இருவரும் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.‘வணக்கங்க ‘ என்று சீராளனுக்கு வணக்கம் சொல்லி உள்ளே வந்தான் ராயப்பன். தோட்டிப் பெண்ணின் கணவன் அவன்.‘ரண்டாம் தடவையும் ஆம்புடேசன் செஞ்சிட்டாங்களாமே ‘ ‘ என்று முகம் தொங்கக் கேட்டான்.

 

        ‘ஆமாம்பா ‘‘போன வாரம் முழங்கால் வரைக்கும் எடுத்தாங்க. அதைக் கொண்டு எரியறதுக்கு பதினைஞ்சு ரூபா கொடுத்தாங்க எனக்கு. நான் நேத்து லீவு. தருமநாதன்கிட்ட கொடுத்தாங்க. அறுத்துப்போட்டதைப் புதைக்கறதுக்கு அவனுக்கு இருபது ரூவா கொடுத்தாங்களாம் ஆபீசுலெ. ‘‘லீவிலெ இருந்திட்டது வருத்தமா இருக்காக்கும் உனக்கு ? உனக்கும் ஏதாவது வேணும்கிறியா ? ‘‘என்னா சார் அப்படிக் கேக்கறீங்க ? ‘‘பின்ன என்ன கேக்கணும் ? ‘‘நான் சொல்ல வந்ததுவேற சார். காலோ, கையோ ஆம்புடேசன் பண்ணினா அதைச் சுடுகாட்டிலெ கொண்டு போடுன்னு உங்ககிட்ட நாப்பது அம்பதுன்னு பில்லு போட்டு வாங்கறாங்க சார். எங்களுக்குக் கொடுக்கறது என்னமோ பதினைஞ்சு ரூவாதான் சார். நீங்கள்ளாம் சேர்ந்து ஆபீசிலெ சொல்லி முப்பது நாப்பதாவது கொடுக்கச் சொல்லக்கூடாதுங்களா சார் ? ‘‘ஏண்டா, ஞான வெட்டியான் தோட்டிக்கிட்ட கூடவா இங்க கமிஷன் கேக்கறாங்க ? ‘ மைத்துனர் வாயைப் பிளந்து ராயப்பனைப் பார்த்தார்.சீராளன் அடுத்த வருட சாகுபடிக்கு விரை, தச்சுகூலி, எரு-இதற்கெல்லாம் எங்கே கடன் புரட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.‘அம்மா உங்களைக் கூப்பிடறாங்க ‘ என்று நோயாளிக்குக் காலை கடன் உதவிகளைச் செய்துவிட்டு வந்த தோட்டிப்பெண் அழைத்தாள்.‘இவ்வளவு பணத்தைக் கொள்ளையடிச்சு என்ன செய்வான் ஒரு மனுசன் ‘ ‘ என்று குழம்பிக்கொண்டே மைத்துனர் எழுந்து கொண்டார்.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.